அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

சமூக சீர்திருத்ததிற்காகவும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார். இன்று அவரின் 140-வது பிறந்த நாள்.
 | 

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

பெரியார் என்ற பெயர் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ராமசாமியாகப் பிறந்து பெரியாராக மாறிய காலத்திற்குள் ஒரு சமூகத்தை முன்னேற்றியிருக்கிறார். அதற்குள் ஓர் நூற்றாண்டு கதை இருக்கிறது. அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு பேச நமக்கு 'கன்டென்ட்' தரும் கதை. 

நம் மண்ணில் பிறக்கும் அனைவரையும் நாம் இப்படி கொண்டாடுவதில்லை. அது தான் சாதாரண மனிதனுக்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாடு. அந்த வகையில் தந்தை பெரியார் ஒரு சித்தாந்தம். அந்த உடல் வேண்டுமானால் மண்ணுக்கு இரையாகியிருக்கலாம், அவர் கொண்ட கொள்கைகளும், செய்த சீர்திருத்தங்களும், தலைமுறை தலைமுறையாகக்  கடத்தப் படும். அவர் ஏன் இந்த சமூகத்துக்கு அவ்வளவு முக்கியமாகப் படுகிறார்? 

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

சமூக சீர்திருத்ததிற்காகவும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுக்க போராடியவர். முன்பு ராஜாஜியுடன் இணைந்து காங்கிரஸில் செயல்பட்டவர், சாதியையும், வர்ணாசிரமத்தையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகினார். அதுவும் "சாதியையும், வர்ணாசிரமத்தையும் ஒழித்துக் கட்டுவது தான் என்னுடைய முதல் வேலை" என சொல்லிவிட்டுத் தான் வெளியேறினார். 

பிரமணரல்லாதோரின் வாழ்வை உயர்த்துவதில் அதிக முனைப்புக் காட்டிய அவர், சுய மரியாதை இயக்கம் என்ற சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். 1929-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் காஞ்சிபுரத்தில் இந்த இயக்கத்தின் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அவரின் உயிர் நாடிக் கொள்கைகளான, "தீண்டாமை ஒழிப்பு, புரோகித ஒழிப்பு, பட்டப் பெயர் துறப்பு" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

விதவைத் திருமணத்தை ஆதரியுங்கள், கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள், சாதி பட்டங்களை துறந்து விடுங்கள் போன்ற விஷயங்களை தனது இறுதி மூச்சு வரை சமூகத்துக்குள் புகுத்தினார். அதோடு அவர் தலைமையிலேயே பல விதவைத் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் நடந்தப் பட்டன. அவ்வாறு நடைப்பெறும் சுய மரியாதை திருமணங்களில் உரையாற்றும் பெரியார், சமூகக் கருத்துகளை அங்கும் முன் வைப்பார். அவரின் பேச்சுக்கும், கருத்துகளுக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கை, மலேசியா, பர்மா, போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பெரியாருக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 

இன்று பெண்கள் பலரும் சொந்தக் காலில் நிற்கிறார்கள். 18 வயதில் திருமணம் என்றிருந்த நிலையை மாற்றி, 30-க்கு மேலும் செய்யலாம் என்ற தனது கருத்தை பெற்றோர்களும் ஆதரிக்க செய்கிறார்கள், தனியே நாடு கடந்து போய் கல்வி கற்கிறார்கள், வேலை செய்கிறார்கள். குறிப்பாக 'இன்டிபென்டென்ட்' என்ற வார்த்தையை உபயோகிக்காத பெண்களே இருக்க முடியாது. ஆம்! 100 வருடங்களுக்கு முன்பே பெரியார் இவைகளை முழங்கி விட்டார். அதன் செயல் வடிவம் தான் இப்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

பெண் என்பவள் எப்போதும் ஆணுக்குக் கட்டுப் பட்டவளாக இருக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கையை களைய போராடியவர். இதனால் பலரின் இழி சொல்லுக்கும் ஆளானவர். பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்பது பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரின் மிக முக்கிய முழக்கம். குழந்தைத் திருமண எதிர்ப்பு, கல்வி, சொத்தில் சம உரிமை, பெண் சுதந்திரம் ஆகியவற்றைப் பேசியதில் பெரியார் தான் தமிழ் மண்ணின் முதல் பெண்ணியவாதியாக (ஃபெமினிஸ்ட்) இருக்க முடியும்!

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

இந்தியைக் கட்டாயமாக்க முயன்று அதில் தோற்றுப் போன ராஜாஜி, குலக்கல்வி என்றோர் ஆயுத்தத்தைக் கையில் எடுத்தார். அப்பா என்ன தொழில் செய்கிறாரோ, அதைத்தான் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். இதனை செயல் படுத்துவதற்காக 6000 கிராம பள்ளிக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட்டார் ராஜாஜி. செருப்பு  தைக்கும் தாழ்த்தப் பட்டவனின் பிள்ளை அதே வேலையையும், அரசாங்கத்தில் வேலை செய்யும் பிராமணனின் மகன் அதே அரசாங்க வேலையையும் தான் பார்க்க வேண்டும் என்ற முட்டாள் தனமாக விஷயம் தான் அது. 

முள்ளை முள்ளால் எடுக்கும் பொருட்டு, சென்னை மாகாணம் முழுவதும் இருந்த பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட்டத்தைக் கையிலெடுத்தார் பெரியார். இதற்கு ஏன் கடவுள் சிலையை உடைக்க வேண்டும் என பலருக்கும் தோன்றலாம். ராஜாஜியின் மனதில் இருந்த வர்ணாசிரம எண்ணத்தை அவருக்குப் புரிய வைப்பதற்காகத் தான் பெரியார் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டார். 

ராஜாஜியின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் சி.சுப்பிரமணியம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை அவர் கையாளேயே வாபஸ் வாங்க வைத்து வெற்றி பெற்றார் பெரியார். 

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக, பெண்ணுரிமைக்காக, மூடப் பழக்கங்களை எதிர்ப்பதற்காக, சமூக நீதிக்காக தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.

தமது பிரச்சாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்லை என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுவதை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதுமென அவர் சொன்னதை இன்று இளைய தலைமுறையினரால் அதிகம் ரசிக்கப் படுகிறது. 

சுய மரியாதை என்ற ஒன்றை இந்த சமூகத்தில் விதைத்து விட்டுச் சென்றவர் அவர்.

 "யார் எந்தக் கருத்தைக் கூறினாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்பவன் ஒரு போதும் முன்னேற்றமடைய மாட்டான்" 

"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே" 

"மனுஷனை மனுஷன் மதிக்கணும், அதுக்குத் தடையா இருக்குறதா தோணுறதையெல்லாம், நொறுக்கணும்"

போன்ற பெரியார் உதிர்த்த சொற்களை வரலாறு தனது பக்கங்களில் போற்றிப் பாதுகாக்கிறது. 

அடக்குமுறைகளை எதிர்க்கும் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும் - #HBDPeriyar140

பிற்போக்கு சமுதாயத்தை முற்போக்காக மாற்றி, அனைவரையும் கேள்விக் கேட்கத் தூண்டியவர். ஒடுக்கப்பட்டோருக்கு பக்க பலமாய் இருந்தவர். பெண்களை முன்னேற்றமடையச் செய்தவர், சுய மரியாதைக்காரன் என தமிழ் சமூகத்தவரின் 'காலரை' தூக்கி விடச் செய்தவர், இப்படி பல சிறப்புகுரிய பெரியாரின் 140-வது பிறந்த தினம் இன்று. அடக்குமுறைகளை எதிர்த்து அவரின் கைத்தடி எப்போதும் நம்முடன் இருக்கும். அது இந்த சமூகத்தில் பிரச்னைகளை உண்டு பண்ண நினைக்கிறவர்களை ஓட ஓட விரட்டும்!  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP