மீண்டும் திறக்கும் பின்வாசல்...அரசு ஊழியர்கள் போராட்டம்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வில் மறக்க முடியாத போராட்டங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் உள்ளது. 1960களில் இந்தியாவில் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

மீண்டும் திறக்கும் பின்வாசல்...அரசு ஊழியர்கள் போராட்டம்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வில் மறக்க முடியாத போராட்டங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் உள்ளது.

1960களில் இந்தியாவில் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அரசு நிர்வாகம் தடுமாறியது. இதையடுத்து, நாடு முழுவதும் தற்காலிக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த சில ஆண்டுகளில் தற்காலிக பணியாளர்கள் பின்னர் பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்கும் வரையில் கிராம கர்ணம் என்ற பதவி இருந்தது. இது வாரிசு அடிப்படையில் வரும் பதவி. எம்ஜிஆர் முதல்வராக பதவி வகித்தபோது ஒரே நாள் இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ணம் பதவிகளையும் துாக்கி எறிந்து விட்டு அவர்களுக்கு பதிலாக கிராம் நிர்வாக அலுவலர் எனப்படும் விஏஓ பதவியை உருவாக்கினார்.

அதன் பிறகு இன்று வரை மீண்டும் கர்ணங்கள் பதவி பெற முடியில்லை. அதே போல போராட்டத்தில் ஈடுபட்டிருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி பண்டிகை காலத்தில் கைது செய்து , பண்டிகை முடிந்த பின்னர் அவர்களை வெளியே அனுப்பி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மீண்டும் திறக்கும் பின்வாசல்...அரசு ஊழியர்கள் போராட்டம்!

கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போரட்டம் வெடித்தது. அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகும் போராட்டத்தை  யூனியன்கள் முடிவுக்கு கொண்டு வராமல் வைத்திருந்தன.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக எஸ்மா, டெஸ்மா சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தி ஒரே நாள் நள்ளிரவில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேரை வீட்டிற்கு அனுப்பினார். அதன் பின்னர் கொத்து கொத்தாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை தற்காலிக ஊழியர்கள் நிரப்பினர். வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருந்தவர்கள், விண்ணப்பித்த பட்டதாரிகள் அனைவரும் தற்காலிக அரசு ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரூ. 4000 சம்பளம் வழங்கப்பட்டது. அவர்களை கருங்காலிகள் என்று அரசு ஊழியர்கள் விமர்சனம் செய்தனர்.

வேலை நிறுத்த காலத்தில் பணி கிடைக்கும் பின்னர் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் அவ்வாறு நடக்க வில்லை. காலப் போக்கில் கருங்காலியான தெரிந்தவர்கள் சக ஊழியர்களாக தெரிய தொடங்கினர்.

மீண்டும் திறக்கும் பின்வாசல்...அரசு ஊழியர்கள் போராட்டம்!

இதன் காரணமாக யாரை எதிர்த்து அவர்கள் பணியில் சேர்ந்தார்களோ அந்த அரசு ஊழியர்களே அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்திய போது, அதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் பயிற்சி முகாம் நடத்தியது.

இப்போது நடக்கும் போராட்டத்தில் யார் அரசு ஊழியர், யார் 4000 ரூபாயில் வேலைக்கு சென்றவர் என்று தெரியாத வகையில் கலந்துவிட்டனர்.

அதே போன்ற நிலை தற்போதும் உருவாகி உள்ளது. போராட்டத்தை கைவிடச் செய்ய தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை குறிப்பாக ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களை முடுக்கிவிட்டுள்ளது. அவர்கள் இன்றோ நாளையோ பணியை தொடங்குவார்கள்.

தற்போது படித்து விட்டு பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிற ஆசிரிய பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார்கள். அதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள் சில ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படலாம். அல்லது வரும் காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டால் இப்போது வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுக்கப்படலாம்.

போராட்டம் தீவிரம் அடைந்த பின்னர் சமூக ஊடகங்களில் எங்களுக்கு பாதி சம்பளம் தாருங்கள் நாங்கள் கல்வி கற்பிக்கிறோம் என்று பொங்கி வழிந்தவர்கள் எத்தனை பேர் உண்மையாக இந்த வாய்ப்பை பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரியும்.

மீண்டும் திறக்கும் பின்வாசல்...அரசு ஊழியர்கள் போராட்டம்!

அதே நேரத்தில் தற்போது அரசு அனுப்ப கூறி உள்ள நோட்டீசில் தொகுப்பு ஊதியம் பெறுபவர்கள், தற்காலிக பணியாளர்களை வேலை இழக்க செய்யும் வகையில் எச்சரிக்கை உள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கை, குறிப்பாக பணம் செலவு இல்லாத கோரிக்கைகள் நிறைவேறியதும் போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார்கள். அரசியல் கட்சிகள் காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது.போலவே இவர்கள் தொகுப்பூதிய, தற்காலிக பணியாளர்கள் கோரிக்கையை இணைத்து போராட்டம் நடத்துவது.

இவர்கள் போராட்டம் முடிவற்குள் தற்காலிக பணியாளர்கள் வேலை இழந்தார்கள் என்றால் அப்புறம் இப்போது களத்தில் போராடுபவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 2003ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் விளைவாக 64 பேர் உயிர் இழந்தனர்.

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 10 ஆயிரம் சாலை பணியாளர்கள், 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வேலை இழந்தனர். அவர்கள் தாங்களே போராடி தான் வேலை பெற்றனர். அதற்குள் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.

அது வரையில் அவர்கள் பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. அதே போல தற்போது நடந்தால் வேலை இழப்பவர்களை மீட்க நம்ம சங்கம் எதுவும் செய்யப்போவதில்லை. நம்மால் போராடி ஒருவருக்கு வேலை வாங்கி தரும் திறன் இல்லாத போது, பல ஆயிரம் பேரை வேலை இழக்க செய்வது என்ன நியாயம். அவர்கள் கருங்காலிகளாகவே இருந்து விட்டுப்போகட்டுமே என்ன கெட்டு விடப் போகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP