தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...!

காஞ்சிபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோவில் தலங்கள் தான். காஞ்சி தெற்குப் பகுதியின் நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
 | 

தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...!

காஞ்சிபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோவில் தலங்கள் தான்.  காஞ்சி தெற்குப் பகுதியின் நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

இத்திருக்கோவிலில்   மூலவர்  வரதராஜப்  பெருமாள் மேற்குப் பார்த்த வண்ணம் இருப்பதால் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. மேற்கு நோக்கி பார்த்த வண்ணம்  சேவார்த்திகளுக்கு அருள் புரிகிறார்.  பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு  அருள்புரிந்து கொண்டுள்ளார். தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் திருக்கோவில் இது.  108 திவ்ய தேசங்கள் அடங்கிய கோயில் என்றால்  வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும்  திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக முக்கியதுவம் வாய்ந்த தலம் தான் காஞ்சி வரதராஜர் கோவில். பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைத் தான் குறிக்கும்.

தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...!

ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தாராம் மகாவிஷ்ணு. ஆகையால் அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு உள்ள இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்  கொண்டுள்ளார்.   40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியே எடுத்து ஒரு மாத காலத்திற்கு கோவிலில் பள்ளிகொள்ள வைக்கப்படுகிறது.  பின்னர் கோயிலில் அந்த ஒருமாத காலத்தில் உற்சவங்கள் மிக சிறப்பாக நடத்தப்படுகிறது . மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை,  உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கின்றனர். ஒரு மாத காலம் முடிந்த  பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப்படுகிறார். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கின்றனர்.
தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...! 

இவ்விடத்தில் தங்கபல்லி, வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரிய, சந்திரனை தரிசனம் செய்தால் நம் மீது பல்லி விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மை பயக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதுமட்டும் மல்லாமல் புத்திர தோஷம் உள்ளவரகள் அமாவாசை அன்று திங்கட்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், வரதராஜ பெருமானையும் வழிபட்டு செல்கின்றனர்.    

தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...!

இங்கு உள்ள பல்லிக்கு நீண்ட வரலாறு உள்ளது. அதனை சுறுக்கமாக பார்க்கலாம் வாங்க,  ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்கு தேவையான பொருட்களை கொடுக்கும் நபராக இருந்துள்ளனர். மேலும் தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்கபடட்தில் ஒரு பல்லி விழுந்து விட, இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுத்துவிட்டனர். பின்னர், முனிவர் அதை பெற்றுக்கொள்ளும் போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது. அப்போது கோபம் கொண்ட முனிவர் அவர்கள் இருவரையும் பல்லியாக ஆகவேண்டும் என்று சாபமிட்டார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி தங்களை அறியாமல் இந்த தவறு நடந்துவிட்டது என்று மன்னிப்பு கேட்டு, பாவவிமோசனமும் கூற வேண்டும் என முனிவரிடம் வேண்டினார்களாம்.  பின்னர் முனிவர் தன் கோபத்தை தணித்துக் கொண்டு, வரதனை தரிசித்தால்  உங்கள் சாபம் அகலும் என்று கூறியதாக கூறப்படுகிறது. 

தோஷத்தை நீக்கும் வையமாளிகை பல்லி...!

அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் யானை வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றதாக வரலாற்றில் கூறப்படுகிறது.  இந்த தலத்தில் உள்ள வையமாளிகை பல்லியை தொட்டு வணங்கினால் பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது பக்கதர்களின் நம்பிக்கை. 

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. 

வரதராஜ பெருமாள் அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் எனபதால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் தேதியில் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா மிகச் சிறப்பாக நடத்தப்பதுகிறது. இங்கு பல பகுதிகளில் இருந்து வந்து பக்தர்கள் பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP