பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 26 படங்களில் நடித்துள்ளனர். எம்ஜிஆர் ஜெ.வுக்கு அரசியலில் ஆசானாகவும், திரைத்துறையில் குருவாகவும் இருந்தார் எனக்கூறினால் மிகையாகாது.
 | 

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

முன்னாள் முதலமைச்சர், காற்றில் கலந்த கதாநாயகி, மறைந்த தமிழகத்தின் ஆளுமை...இவை அனைத்துக்கும் ஒரே பதில் ஜெயலலிதா. இப்படி பல்கலை வித்தகரான ஒரே இரும்பு பெண் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை அவரது தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் நினைவுக்கூற வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஜெயலிதாவை இன்றும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழும் பெண்களுக்கு ஜெ.வின் நினைவுநாள் என்றுமே கருப்பு தினம் தான்.

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

ஜெயலலிதா அரசியல் ஆளுமை மட்டுமல்ல, நடிப்பின் சிற்பங்கள்... முன்னாள் தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க கட்சியின் தலைவராகவும் மட்டும் விளங்கவில்லை தமிழ் நடிகையாகவும் தமிழ் திரைப்பட துறையில் ஜொலித்துள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரும் எம்.ஜி. ஆரும் இணைந்து நடித்த படங்களுக்கு ரசிகர்கள் இன்றும் வரிசைக்கட்டி நிற்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். எம்.ஜி. ஆர் ஜெயலிதாவுக்கு அரசியலில் ஆசானாகவும், திரைத்துறையில் குருவாகவும் இருந்தார் எனக்கூறினால் மிகையாகாது. 

எம்.ஜி. ஆருடன் கைக்கோர்த்த ஜெயலலிதா

தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம், அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி மற்றும் அரச கட்டளை என்று மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

ஆயிரத்தில் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் பாடல் மிகப் பெரும் வெற்றிப் பாடலாக அமைந்தது. ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.குடியிருந்த கோயில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்... என்ற பாடல் மரண மாஸாக அமைந்தது. 

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த பட்டிக்காடா... பட்டணமா.. என்ற பாடல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பெற்றது. 


பல்கலை வித்தகராக ஜொலித்த ‘ஜெ’

சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர் ஜெயலிலதா. அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற 'அம்மா என்றால் அன்பு' என 10க்கும் அதிகமான பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆங்கில அறிவில் புலமை பெற்றவர். அதுமட்டுமின்றி தாய் மொழி தமிழைபோல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிகளையும் சரளமாக பேசும் திறன் பெற்றவர்.

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’படம் தான் ஜெயலிலதா நடிப்பில் வெளியான கடைசி படம். இப்படத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் ஜெயலிதா நடித்திருந்தார். படத்தின் தலைப்பு இன்றைய தமிழகத்திற்கும், அரசியலுக்கும் பொருத்தமான ஒன்றாகவே உள்ளது. 

பாதையும் பயணமும்...

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். ஜெயலலிதா  தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

திரையுலகில் தாரகை!

குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.

 ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு அந்த படம் பாராட்டை பெற்றுத் தரவில்லை. 

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

1964ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அதன்பின் மோஷன் பிக்சர் படமான “நதியை தேடி வந்த கடல்”என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. அத்துடன் அவருடைய திரை வாழ்கை முடிவடைந்தது. அரசியல் அத்தியாயத்திற்கு தயாரானார்.

ஜெ. வென்று குவித்த விருதுகள்

‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக்கொடுத்தது. சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.‘சூர்யகாந்தி’ படத்தின் மூலம் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. அதேபோல் சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.

பிரிக்க முடியாத கலையும், காற்றில் கலந்த கதாநாயகியும்..!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது. சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.

Newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP