6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!

தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிமீ மலைப்பயண தூரத்தில் உள்ளது.
 | 

6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!

தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிலோ மீட்டர் மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையில் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.
6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!
வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போல காட்சி தருவதால் இது வெள்ளியங்கி என்று பெயர்பெற்றதாம்.  வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறித்தான் செல்ல வேண்டும். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால், இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்பு லிங்கமாக பாறை வடிவில் காட்சியளிக்கிறார். அழகிய மலையில் அற்புதமாக வீற்றிருக்கும் சிவனுக்கு பூஜைகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது. சரிவெள்ளியங்கிரி மலைக்கு சிவன் எப்படி வந்தார் என்று பார்ப்போம்...
6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!
ஒரு பெண் மணந்தால் சிவனைத்தான் மணப்பேன், அதிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். ஒருவேளை அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமாளும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருவதாக் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண், குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால் நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவளுக்கு  இன்றும்  கன்னியாகுமரியில் கோவில் உள்ளது. இதனால் சிவன் தன் பக்தியை காப்பாற்ற முடியாமல் மனம்மொடிந்த சிவன், தன் கவலைகளை குறைக்க வெள்ளியங்கிரி மலையில் ஏறிய அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார். 
6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!
சிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை  தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையின் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது.   மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களிலும் சென்று வழிபட முடியும். ஆனால் வெள்ளியங்கிரி மலைக்கு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் தான் செல்ல முடியும். இந்த மாதங்களுக்கு பிறகு தென்மேற்குப் பருவ மழை பெய்ய துவங்கி விடுவதால் மலைப் பாதைகள்  மழைநீர் செல்லும் வழித்தடங்களாக மாறிவிடுகின்றன. மேலும் கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்று விடுவதால் அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. குறிப்பாக சித்ரா பௌர்ணமியின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.
6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!
கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலையில் மின் வசதிகள் கிடையாது. சபரிமலை போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. 12 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மலையில் ஏற அனுமதி இல்லை. பெண்கள் செல்லக் கூடாது என்று தடுப்பதும் இல்லை. ஆனாலும் காலகாலமாய் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர். மீறி மலை ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு செல்பவர்கள், கயிலாய யாத்திரைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி செல்வார்கள். அதற்கு அடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி மலை ஏறுகின்றனர். 
6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!
வெள்ளி விநாயகர் கோவில் மலை, பாம்பாட்டி  சுனை, வழுக்கு பாறை, கைதட்டி சுனை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை என 6 மலைகளை தாண்டி 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார்.  வெள்ளியங்கிரி மலைப் பயணம்  இறைவனை இயற்கையுடன் தரிசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக இருப்பதுடன் மலையேற்றப் பயிற்சியாகவும்  இருப்பது தனி சிறப்பாகும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP