வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து உள்ள ஊர் தான் ஏலாக்குறிச்சி. ஏலாக்குறிச்சி (திருக்காவலூர்) கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. திருக்காவலூர் என்று பெயர் வைத்தவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் என்பவர்.
 | 

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து உள்ள ஊர் தான் ஏலாக்குறிச்சி. இந்த ஊரின் பழமையான பெயர் திருக்காவலூர். ஏலாக்குறிச்சி (திருக்காவலூர்) கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. திருக்காவலூர் என்றால் தெய்வத் திருக்காவல் மிகுந்த இடம் என்று பொருள். திருக்காவலூர் என்று பெயர் வைத்தவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் என்பவர். இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர். 
இவர் தமிழின் சிறப்பை வெளிநாட்டவர் உணரும் வகையில் தேவாரம், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.  1710ம் ஆண்டு தமிழ்நாடுக்கு வந்த இவர், தமிழில் புலமை பெற்ற வேண்டும் என சுப்புரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்று புலமை பெற்றார். தமிழின் மீது கொண்ட பற்றையடுத்து தனது பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இவர் திருக்குறளின் அறம், பொருட்பால் பகுதிகளை லத்தீனில் மொழி பெயர்த்து திருக்குறளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் இயேசுவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பு செய்தியை தேம்பாவணி என்ற பெயரில் பெருங்காவியமாக தமிழில் படைத்தார்.   

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

தஞ்சை பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானபோது அவர்கள் கொள்ளிடம் ஆற்றை கடக்கும் போது ஒரு சிலர் நடுக்காட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்டு பகுதிகளுக்கு வந்த வீரமாமுனிவர் காட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு 1716ஆம் ஆண்டில் சேவையாற்ற தொடங்கினார். பின்னர் அவர்கள் தங்கிய அந்த காட்டுபகுதியில் மேரி மாதாவுக்கு ஒரு தேவாலயம் ஒன்றைக் கட்டி அதற்கு அடைக்கல அன்னை என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது. 

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

அரியலூர் பகுதியை ஆண்ட ஒரு சிற்றரசன் ராஜப்பிளவை என்னும் தீராத நோயால் அவதிபட்டு வந்தார். அப்போது மருந்துகள் அளித்தும் பயன் இல்லாததால், இறுதியாக வீரமாமுனிவர் கட்டிய  அடைக்கல அன்னை தேவாலயத்தை நாடி வந்து வீரமாமுனிவரை சந்தித்தார். பின்னர் அவரது நோயை அறிந்து கொண்டு நோய்க்கான மூலிகையைத் தேடி, கோடை காலத்தில் வீரமாமுனிவர் காட்டுக்குள் அலைந்தார். 

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

அப்போது திடீர்ரென்று வறண்டுபோன பூமியிலிருந்து தண்ணீர் கொப்பளித்து வந்தது. வீரமாமுனிவர் அந்த தண்ணீரை சேற்றுடன் அள்ளி, மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசி விட்டாராம். பல ஆண்டுகளாக ராஜப்பிளவை நோயினால் அவதிப்பட்டு வந்த சிற்றரசருக்கு படிபடியாக நோய் குணமானது.  தமக்கு ஏற்பட்ட தீராத நோயை அடைக்கல அன்னைதான் குணப்படுத்தியதாக சிற்றரசர் நம்பினார். வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த காணிக்கைக்கு ஆதாராமாக கல்வெட்டு இன்றும் ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னையின் வளாகத்தில் உள்ளது.  

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

வீரமாமுனிவர் இந்த பகுதியில் தங்கி பணியாற்றியபோதுதான், திருக்காவலூர் கலம்பகம் என்ற புகழ்பெற்ற நூலை உருவாக்கினார். தமிழ் மொழியில் உள்ள கலம்பக நூல்கள், ஆண்பால் கலம்பகங்களாக உள்ளன. ஆனால், வீரமாமுனிவர் உருவாக்கிய இந்த திருக்காவலூர் கலம்பக நூல், பெண்பால் கலம்பகமாக உள்ளது. திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரே கலம்பக நூலாக இவை உள்ளது.  திருக்காவலுரில் உள்ள  அடைக்கல அன்னையின் பெருமைகளை இந்த செய்யுள்கள் மூலம் வீரமாமுனிவர் விளக்கி உள்ளார். இந்த ஆலயமானது மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. 

வீரமாமுனிவர் கட்டிய அடைக்கல அன்னை தேவாலயம்...!

ஏலாக்குறிச்சி  அடைக்கல மாதா  திருவிழா மிகவும் புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் ஒன்றாக வந்து  திருவிழாவை கொண்டாடுகின்றனர் . அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி நிகழ்ச்சியை காண பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். நிகழ்ச்சியின் போது அன்னை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.அன்னையை வரவேற்கும் விதமாக தேவ தூதர்கள் அன்னைக்கு மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படுகிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் கலந்து  கொண்டு அன்னையின் அருள் பெறுகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP