தாயைப் போல தானே பிள்ளை இருக்கும்!

திருவாரூரில் இருந்து டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் சென்னை வந்தவர் கருணாநிதி. புதுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு, தன் மனைவியின் இறப்பிற்கு லாரி பிடித்து சென்றவர் கருணாநிதி போன்ற சம்பவங்கள் எல்லாம் திமுகவினரின் பொருளாதார வலிமையை நன்கு காட்டும்.
 | 

தாயைப் போல தானே பிள்ளை இருக்கும்!

திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இது, அந்த கட்சியை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தற்கால திமுக கொள்கை அடிப்படையில் செயல்படுவதாகவும், அந்த கொள்கை விரும்பியே தொண்டர்கள் அதில் நீடிப்பதாகவும் அனைவரும் நினைப்பது தான் காரணம்.

ஆனால், திமுக கொள்கையை விட்டு வெளியேறி கொள்ளையை மட்டுமே நம்பி வாழும் காலம் அண்ணா முதல்வரான காலத்திலேயே தொடங்கி விட்டது. இதற்கு அந்த கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பொருளாதார நிலைதான் முக்கிய காரணம்.

சுந்திர போராட்ட காலத்தில், அதில் பங்கு பெற்றவர்கள், அதை வேடிக்கை பார்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். விவசாய கூலித் தொழிலாளர்கள், இடதுசாரிகளாக இருந்தார்கள். இவர்களை தவிர்த்த மற்றவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் உண்டு, தனது வேலை உண்டு என்று வாழ்ந்தவர்கள். பண்ணையாரை, பணக்காரரை குறிவைத்து அரசியல் நடத்தினால் போதும், அவர்களிடம் வேலை செய்யும் குடியானவர்கள் ஆதரவும் கிடைக்கும் என்பது காங்கிரஸ் நிலை.

இதை உடைத்து, அடித்தட்டு மக்களை அரசியல் தலைவர்களாக உருவாக்கியது தான், திமுக. இடுப்பில் துண்டை கட்டியவன், அதற்கு கூட அனுமதிக்கப்படாவன் கூட தலைவராக உருவெடுத்துவிட்டான் என்பதைக் காட்டத்தான் தெருக்கூட்டும் அளவிற்கு திமுகவினர் துண்டு அணிந்து வலம் வந்தனர். 

அந்தகால கார்டூன்களில் திமுகவை விமர்சனம் செய்ய மிக மிக பெரிய துண்டு போட்ட நபரை காட்டினால் போதும். இப்படி சிறிது சிறிதாக தன்மானத்தை ஊட்டியதால் தான். திமுக அரசியல் கட்சி என்பதைக் காட்டிலும், இயக்கமாக உருப்பெற்றது.

திருவாரூரில் இருந்து டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் சென்னை வந்தவர் கருணாநிதி. புதுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு, தன் மனைவியின் இறப்பிற்கு லாரி பிடித்து சென்றவர் கருணாநிதி போன்ற சம்பவங்கள் எல்லாம் திமுகவினரின் பொருளாதார வலிமையை நன்கு காட்டும். 

இவர்கள் ஏன் பெரியாரை பிடிக்காதவர்கள் கூட வியக்கும் விஷயம் அவரின் வசூல், அதை செலவு செய்த பாங்கு, சமுதாயத்திற்காக சேர்த்து வைத்த மனப்பக்கும் போன்றவை. இப்படி எளிமையாக இருந்து சுமார் 50 ஆண்டுகள் கழித்த பிறகு தான், திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.

எதிர்பார்த்த அதிகாரம் வந்துவிட்டது, அதை எப்படி தக்க வைப்பது என்ற கேள்வி எழும் போது, ஊழல் தலையெடுக்கத் தொடங்கியது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று பாராட்டும் அளவிற்கு சொத்து சேர்க்கப்பட்டது. இன்று திமுகவின் வெள்ளை, கறுப்பு சொத்துக்களை கணக்கு போட முடிந்தால், அவர்கள் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்(சம்பாதித்துவிட்டார்கள் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தி இருப்பேன் ஆனால் மறைந்த எழுத்தாளர் சோ கூறுவது போல், நம்மவருக்கு சம்பாதிப்பதற்கும், திருடுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றது நினைவுக்கு வந்தால் வேறு வார்த்தைகள்)

திமுகவின் தலைமை சொத்து சேர்த்ததை விட்டு விடுவோம்.  இந்த காலத்தில் கவுன்சிலர் தேர்தல் முதல், எம்பி தேர்தல் வரை, கட்சித் தேர்தலில் கூட முதலில் கேட்கும் வார்த்தை எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பது தான். இப்போது எல்லாம் ‘சி’ தான். அரசியல் கட்சிகளில் கிளை செயலாளர் என்றால் கூட கணிசமான பணத்தை இறக்க வேண்டும். 

இந்த சூழ்நிலையில் தான் அவர்களும் ஊழல்வாதிகளாக, சட்டவிரோத செயல்களை மட்டுமே செய்பவர்களாக, மணல் கொள்ளையர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், ஒப்பந்ததாரர்கள், என்று பல பல அவதாரங்கள் எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் 300 சதவீதம் லாபம், அல்லது முதலே போடாமல் வருமானம்( புரோக்கர் வேலை செய்வது) என்பதுதான் அவர்களின் பணியாகிவிட்டது.

இப்படி கொள்கை என்ற 3 எழுத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு பணம் என்ற 3 எழுத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் மாறிவிட்டதால் தான் வாரிசு அரசியல் வலுப்பெற தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியில் இத்தனை பிரபலங்கள் இருந்தால் கூட தலைவர் பதவியை ஏற்க ராகுலை வற்புறுத்துகிறார்கள். 

இது தன் மீது உள்ள பாசம் அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு பிரபலமான ஒரு விளம்பர பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதால் தான் வற்புறுத்துகிறார்கள் என்பதை ராகுல் நன்கு உணர்ந்து விட்டதால் தான், தலைவர் பதவி வேண்டாம் என்கிறார். அதே சூழ்நிலைதான் உதயநிதி ஸ்டாலினுக்கும். திமுகவின் சொத்துக்கள் கருணாநிதியின் குடும்பத்தைவிட்டு போய்விடக் கூடாது. அந்த சொத்தை சேர்த்தது கூட அந்தக் குடும்பம் தான் என்பதை மறக்க கூடாது. மேலும் பிரபலமான ஒரு அரசியல் முகம் வேண்டும். 

அதன் காரணமாகத்தான் உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. இது, திமுகவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் தான், அவர்கள் வாய் மூடி மவுனமாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு தலைவர் பதவியை விட தங்கள் வருமானம் நிற்காமல் வந்தால் போதும்.

அதிமுகவில், சசிகலா குடும்பத்திற்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்க்கும் ஸ்டாலின், தன் மகனை தவிர்த்து யாருக்கு 2ம்  இடம் கொடுத்தாலும், அவர் எடப்பாடியாக மாறிவிடுவார் என்றுதானே நினைப்பார். அதிலும், கருணாநிதிக்காவது ஸ்டாலின் பிறந்ததில் இருந்தே அவருக்கு அரசியல் சொல்லித்தரும் வாய்ப்பு  கிடைத்தது. ஆனால் ஸ்டாலினுக்கு அந்த சலுகை கூட கிடைக்கவில்லை. 

இதனால் தான் உதயநிதியின் அரசியல் வருகை, காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதை விமர்சனம் செய்யும் தகுதி, வாரிசு இருந்தாலும் கோயிலுக்கு சொத்தை எழுதி வைக்க நினைப்பவனுக்கு தான் உண்டு. தமிழ் நாட்டில் அவர் யார் என்று தேடிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அவரை கண்டுபிடிப்பதற்குள் இன்பா மகன் இளைஞர் அணி செயலாளராக வந்துவிடுவார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP