பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மொட்டுகள்! சாபமா? துரோகமா?

கடந்த சில நாட்களாக காதுகளில் விஷம் ஊற்றுவதுபோல் உலாவரும் வார்த்தை பாலியல் வன்கொடுமை! வார்த்தையை உச்சரிக்கும்போதே உயிருடன் எரித்துக்கொல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
 | 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மொட்டுகள்! சாபமா? துரோகமா?

கடந்த சில நாட்களாக காதுகளில் விஷம் ஊற்றுவதுபோல் உலாவரும் வார்த்தை பாலியல் வன்கொடுமை! வார்த்தையை உச்சரிக்கும்போதே உயிருடன் எரித்துக்கொல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 

பாலியல் வன்கொடுமை என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தையா என பலருக்கு சந்தேகம் எழும். ஆனால் காலம்காலமாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும், குற்றத்தின் வெளிபாட்டிற்கும் தற்போது வைத்துள்ள பெயர்தான் இது. தேசத்தின் புற்றுநோயாக வளர்ந்துவரும் இந்த கொடுமையை  கடந்த சில நாட்களாக செய்திதாள்களில் தலைப்பு செய்தியாகவே காண முடிகிறது. வீட்டைவிட்டு வெளியே கல்லூரி, பள்ளி, அலுவலகம் என வாழ்க்கை தேடுதலை நோக்கி வெளியே செல்லும் ஒரு பெண் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள்.

மாட்டுக்கோ, நாயுக்கோ தாக்குதல் ஏற்பட்டால்கூட குரல்கொடுக்க பீட்டா போன்ற அமைப்புகள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எத்தனையோ மகளிர் அமைப்புகள் இருந்தும் முன்வராதது ஏன்? மூடி மறைக்கக்கூடிய விஷயமாக நினைக்கிறார். வெளியில் சொன்னால் மானுட அவமானம் என அச்சத்தில் உறைகிறது பெண்மை...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மொட்டுகள்! சாபமா? துரோகமா?

விஞ்ஞான வளர்ச்சியாலும், டிஜிட்டர் இந்தியாவுமே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என நாம் கூற முடியாது. காலம்காலமாக கிராமத்திலும், நகரத்திலும் தொடரும் இந்த கொடுமை தற்போதுதான் வெளிவருகிறது. வீதியில் விளையாட செல்லும் குழந்தைக்கு இதுவும் ஒரு விளையாட்டுதான் என இதுபோன்ற கொடுமைக்கு ஆளாக்குகிறார் சந்தர்ப்பவாதிகள். புத்தகப்பையுடன் புறப்படும் பெண் பள்ளியில் உள்ள ஆசிரியரால் தாக்கப்படுகிறாள். தன்னை சுற்றி ஏதோ தப்பு நடக்குது என அறிந்தும் என்ன செய்வது? யாரிடம் சொல்வது கூனிகுருகி வாயை மூடிக்கொண்டு ஆண்களின் ஆசைக்கு அடிப்பணிகிறாள்.

கல்லூரிக்கு செல்லும் பெண்கள், உடன் படிக்கும் மாணவர்களாலும், கல்வி சொல்லிக் கொடுக்கும் ஆசான்களாலும் சீரழிக்கப்பட்டு, உடல் சிதையும் அளவிற்கு தாக்கப்படுகின்றனர். வெளியில் சொன்னால் அவமானம் என சில தற்கொலைகளும் நிகழ்கின்றன. குடும்பத்தின் வறுமைக்காகவும், வாழ்க்கை தரத்திற்காகவும் வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலத்தில் உடன் பணியாற்றும் பணியாளர்களாலோ அல்லது முதலாளியாலோ கொடுமைக்கு ஆளாகிறாள். 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மொட்டுகள்! சாபமா? துரோகமா?

6 மாத குழந்தை தொடங்கி கத்துவா சிறுமி, நிர்பயா, ஹாசினி அண்மையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த அவலம் வரை நம்மை சுற்றி இருப்பவர்களாலே, நன்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்கிறது. வயதில் பெரியவர்கள் என்றால் மரியாதை கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கும் காலங்கள் மறைந்து பெரியவர்கள் என்றால் கொஞ்சம் தள்ளியே இருக்கவேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எந்த நேரத்தில் யாரால் நம் குழந்தைக்கு துன்பம் வருமோ என்ற பதட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு பயந்து அச்சத்திலே வாழ்கின்றனர். 

பெண்கள் தெய்வமாக போற்றப்படவேண்டும், பெண் முன்னேற்றம் முக்கியம், பெண் கல்வி வளர்ச்சி தேவை என ஓயாமல் பெண்மை குறித்து ஓதிக்கொண்டிருக்கும் சமூகம், குழந்தையை கூட காம வெறியுடன் பார்ப்பது ஏன்? குடும்பத்தில் தேவதைகளாக வளர்க்கப்படும் பெண்கள் இப்படி கொடியவர்களிடம் சிக்கி சீரழியும் அவலத்திற்கு யார் காரணம்? இதற்கு யார் காரணம்? எப்படி தடுப்பது? இப்படி பல கேள்விகள் முன் நிற்கின்றன. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமல் இருந்தால் இதற்கெல்லாம் தீர்வாகிவிடுமா? என சிந்திக்க வைக்கிறது. 5 வயது பிஞ்சுக்கு ரைம்ஸ் சொல்லிக்கும் நிலை மறைந்து குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் பெற்றோர்கள்.  

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மொட்டுகள்! சாபமா? துரோகமா?

செய்திதாள்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயமும் பதட்டமும் தான் அதிகரிக்கிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற குற்றங்கள் அரங்கேறுகின்றனவா? குற்றத்திற்கு பொறுப்பேற்க்க வேண்டியவர்கள் யார்? பாலியல் வன்கொடுமைக்கு சட்டம் என்ன சொல்கிறது? உண்மையில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைக்கிறதா? இதற்கு  “ஆண்கள்” மட்டுமே காரணம்! ஏன்? 

- தொடரும்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP