அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

யதார்த்தத்தில் கல்வி கட்டணத்தை தவிர்த்து இதர கட்டணங்களை கட்டாயம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டு கொள்ளமால் விட்டுவிட்டதைப் போல இந்த உத்தரவும் இல்லாமல் கட்டாயம் நடைமுறைப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 | 

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகள் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் நர்சரி பள்ளிகளும் அடக்கம், இதில் 1.25 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். ஆண்டுக்கு அரசு 27 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. இந்த ப(பு)ள்ளி விபரம் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் தொடங்க உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்தார் அதில் தான் இந்த புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு இருந்தார்.

அவர் கோரியது மட்டும் செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிரித்துவிடுமா என்றால் அது கேள்விக்குறிதான் காரணம் பெற்றோர்களின் ஆழமான அபிலாசை அப்படி. பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அவர்களின் தற்போதைய நிலைக்கு தாங்கள் அரசு பள்ளியில் படித்து தான் காரணம் எ்னறு நம்பி விடுகிறார்கள். இதனால் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தால் டாக்டராகிவிடுவான் என்ற நம்பிக்கைதான் தனியார் பள்ளிகளை நோக்கி அவர்களை தள்ளி விடுகிறது.

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

இப்படி நினைப்பவர்களின் பிள்ளைகள் 10 அல்லது 12ம் வகுப்பு படித்தால் கூட பரவாயில்லை. பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜியிலேயே அவர்களுக்கு இந்த நினைப்பு வருவது தான் வேதனையான விஷயம்.

இந்த பெற்றோர்கள் தான் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகளின் குறி. கல்லுாரிகள், மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கினால் வளாகத் தேர்வில் வேலை கிடைக்குமா? தேர்ச்சி சதவீதம் எவ்வளவு, நல்ல பள்ளி என்றால் பையனை ஹாட்டலில் கூடதங்க வைத்த்துக் கொள்ளலாம் என்ற அடுக்கடுக்கான சிந்தனைகள் எழுகிறது. இதன் காரணமாகவே பல கல்வி நிறுவனங்கள் காத்து வாங்குகின்றன. பிரபல இன்ஜியரிங் கல்லுாரிகளில் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதனால் கல்வி தந்தைகள் இன்ஜினியரிங் கல்லுாரிகளை பெறுவதைக் காட்டிலும், நர்சரிப்பள்ளிகளை பெறுவதற்கே அதிகம் விரும்புகிறார்கள். அங்கு வீட்டுக்கு பக்கத்தில் பள்ளிக் கூடம் இருக்கா என்ற ஒற்றைக் கேள்விதான் எழும். இதனால் தான் பெரிய அப்பார்ட்மெண்ட்டில் கூட பள்ளிகள் நடக்கின்றன.

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

ஒரு பள்ளி இருக்கும் இடத்தை பொறுத்து அதன் இடவசதியும் வேறுபடும். மாநகர் – 8  மாவட்ட தலைவர் –8, நகராட்சி –10  கிரவுண்ட் இடம் வேண்டும். அதுவே, பேரூராட்சியில் ஒன்று, கிராமங்களில் 3 ஏக்கர் நிலம் வேண்டும். ஒரு மாணவனுக்கு 10 சதுர அடி இடம், டேபிள், சேர், 1500 புத்தகங்கள் கொண்ட நுாலகம், கழிப்ப.றைகள், விளையாட்டு மைதானம் எல்லாம் இருக்க வேண்டும். நாளை நீங்கள் பிள்ளையை பள்ளிக் கூடத்தில் விடும் போது இது எல்லாம் இருக்கிறதா என்று பாருங்கள். நிச்சியம் எதுவும் இருக்காது, அல்லது ஒன்று இரண்டு மட்டும் தான் இருக்கும்.  அது நமக்கு தெரிந்தாலும் டாக்டர் கனவு மவுனியாக்கிவிடும்.

இப்போது விரல்விட்டு எண்ணத் தக்க பள்ளிகளை தவிர மற்றவற்றில் கல்வியை தவிர்த்து அனைத்தையும் அவர்களிடம் தான் வாங்க வேண்டும். ஒவ்வொன்றிலும் கமிஷன். சமீபத்தில் நாளிதழ்கள், புத்தகம் விற்பனை .செய்யும் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இப்போது எல்லாம் கடையில் புத்தகம் வாங்குவதே குறைந்துவிட்டது.. ஒரு பள்ளிக்கு ஒரு பதிப்பக்கத்தார் தான் தொர்ப்பில் இருக்கிறார் .அவர் 200 ரூ. புத்தகத்தை 400 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து பாதி கமிஷன் கல்வி நிறுவனத்திற்கு அல்லது ஆசிரியருக்கு வழங்கி விடுகிறர்கள். அதனால் விற்பனை குறைந்து விட்டது என்று குறைப்பட்டுக் கொண்டார்.

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

அதே போல இந்த புத்தகம் நான் எழுதியது, சார் நீங்கதான் விற்க உதவி செய்ய வேண்டும் என்று ஒருவர் கேட்டால்போதும்  உடனே மாணவன் கைக்கு அந்த புத்தகம் மாறிவிடும். இப்படிதான் புத்தகம், நோட்டு, டை, சூ, பேட்ச், ஸ்கூல் பை, யூனிபாம் என்று அனைத்து பொருட்களும் பெற்றோர் தலையில் கட்டப்படுகிறது. இதனால் தான் பிள்ளைகளின் புத்தகப்பை பல கிலோ எடை கூடி விடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை எல்கேஜி, யூகேஜிக்கு பிடுங்கும் பள்ளிகள் இருக்கிறது என்று அதிர்ச்சியடைய வைக்கிறார் ஒரு ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி.

சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கிடையாது. பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள காலி பிளாட் விளையாட்டு மைதானமாக கணக்கு காட்டப்படுகிறது.

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

சிலவற்றில் கழிப்பறை வசதி இல்லை. ஆசிரியர், ஆசிரியைக்கு மட்டும் கழிப்பறை இருக்கும் அதில் ஏதோ பல கோடி சொதது இருப்பது போல பெரும்பாலும் பூட்டுத் தொங்கும். இதானல் குழந்தைகள் சிறுநீர் செல்ல கூட முடியாமல் வீட்டிற்கு வரும் வரை அடக்கி தான் வைக்கிறது. இதனால் அறிவு வளர்கிறதோ இல்லையோ  பல விதமான விதமான வியாதிகள் வளர்க்கிறது.

அறிவிப்பு மட்டும் அவலம் தீர்க்காது

இது போன்ற நவீன கொலை கூடங்களாக மாறிவிட்ட கல்விக் கூடத்தை சரி படுத்தும் முயற்சியாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் புத்தகப்பையின் எடை, வீட்டுப்பாடங்களை குறைப்பது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது மொழிப்பாடங்கள் தவிர்த்து இதர பாடங்கள் நடத்தக் கூடாது என்று தொடங்கும் உத்தரவு 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை 5 கிலோவிற்கு கூடுதலாக இருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய கல்விசட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, யதார்த்தத்தில் கல்வி கட்டணத்தை தவிர்த்து இதர கட்டணங்களை கட்டாயம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டு கொள்ளமால் விட்டுவிட்டதைப் போல இந்த உத்தரவும் இல்லாமல் கட்டாயம் நடைமுறைப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த உத்தரவு அல்லல் போக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP