நம் தலையெழுத்து அவ்வளவு தான்; தீயா வேலை செய்யனும் குமாரு...

இப்படி கட்சியினருக்கே உண்மையாக இல்லாத இவர்கள் தான், தமிழகத்தை காப்பாற்றப் போகிறார்களாம்!இதையெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என நம் விதியில் எழுதியிருப்பதால், எதற்கும் கவலைப்படாமல், நடப்பதை நின்று நிதானமாக வேடிக்கை பார்த்துவிட்டு, தேர்தல் நாளன்று நல்ல முடிவெடுப்பது மட்டுமே நம் கடமை. தேர்தல் நாளன்று தீயா வேலை செய்யனும் குமாரு...
 | 

நம் தலையெழுத்து அவ்வளவு தான்; தீயா வேலை செய்யனும் குமாரு...

‛எந்த கட்சிக்காரராக இருந்தாலும், கட்சியில் அவரின் உழைப்புக்கென்று ஒரு பலன் உண்டு!’ இப்படி நடம்பிக் கொண்டு தான் இன்றளவும், தேசிய, மாநில கட்சிகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர் பல தொண்டர்கள். 

அதில், இரண்டாம் கட்ட தலைவர்கள், ஏதேனும் ஒரு தேர்தலிலாவது தங்களுக்கு சீட் கிடைத்து விடாதா? நாமும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட மாட்டாேமா? கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்திலேயே பொழுதை கழிக்கும் சூழல் தான் நிலவுகிறது. 

பெரும்பாலும், கட்சிக்காக உழைத்தவருக்கே தேர்தலில் நிற்க சீட் மற்றும் கட்சிப் பதவி என்ற இலக்கணம் தற்போது மாறிவிட்டது. பணம் உள்ளவனுக்கு பதவி, அதை அள்ளி வீசுபவனுக்கு தேர்தலில் நிற்க சீட். இது தான் அரசியல் கட்சிகளின் இன்றைய பார்முலா. 

அதிலும் குறிப்பாக, பணம் இருந்தால் மட்டுமே, தேர்தலில் நிற்க விரும்பம் கூட தெரிவிக்க முடியும் என்ற அவல நிலை. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் விருப்ப மனு தாக்கல் செய்யவே, 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமாம். தே.மு.தி.க.,விலும் இதே அளவு இருக்கும் போல. 

அறிவித்த ஓரிரு நாட்களிலேயே, கட்சி தலைமை கல்லா கட்டிவிட்டது. இப்போதே பல லட்சங்களை தாண்டி விட்டது வசூல். எந்த கட்சியாக இருப்பினும், தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சீட்களை ஒதுக்கிவிட்டுதான் விருப்ப மனு பெறுவதில் ஒரு நியாயம் இருக்கும். 

ஆனால் இங்கு நடப்பதோ எல்லாம் தலை கீழ். பிற கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சு  ஒருபுறம். அதே நேரத்தில், கட்சிக்காரர்களிடம் விருப்ப மனு என்ற பெயரில் வசூல் வேட்டை மறு புறம். 

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக இருந்தால் கூட இந்த வசூலில் ஓர் அளவிற்கு நியாயம் இருப்பதாக .தெரியும். ஆனால் திமுக, அதிமுக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே விருப்பமனு வசூலில் ஈடுபடுவது கட்சிக்கார்களிடம் ஆசை வார்த்தை கூறி காசுபிடுங்குவதற்கு சமம். 

திமுக 40 தொகுதிகளிலும் விருப்ப மனு வாங்கினால் கூட, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பணம் திருப்பி தரப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் பிரேமலதா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‛பணத்தை திருப்பி தருவது குறித்து குழு அமைத்து முடிவு செய்யப்படும்’ என்கிறார். 

அதாவது பணம் கொடுத்தவன் நுகர்வோர் நீதிமன்றம் போல ஏதாவது ஒன்றை நாடினாலோ அல்லது போராட்டம் அறிவித்தாலோ தான் பணம் திரும்ப வரும். நுகர்வோர் நீதிமன்றம் இதில் எல்லாம் தலையிடாது என்ற தைரியம் தான் இப்படி பேசுவதற்கு  காரணம். 

தேமுதிக பாணியில் தான், மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனு வாங்கி குவிக்கிறது. இன்னொரு புறம் ஐ.ஜே.கே.,யுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. 

இப்படி கட்சியினருக்கே உண்மையாக இல்லாத இவர்கள் தான், தமிழகத்தை காப்பாற்றப் போகிறார்களாம்!இதையெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என நம் விதியில் எழுதியிருப்பதால், எதற்கும் கவலைப்படாமல், நடப்பதை நின்று நிதானமாக வேடிக்கை பார்த்துவிட்டு, தேர்தல் நாளன்று நல்ல முடிவெடுப்பது மட்டுமே நம் கடமை. தேர்தல் நாளன்று தீயா வேலை செய்யனும் குமாரு...

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP