தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

‛தமில் வாள்க’ என பார்லிமென்ட்டில் குரல் கொடுக்கும் எம்பிக்களால் எந்த காலத்திலும் தமிழ் வளரப்போவதில்லை. இவர்கள் முயன்றுதான் தமிழன்னையை காக்க வேண்டும் என்ற எந்த அவல நிலையும் தற்போது இல்லை; எப்போதும் ஏற்படாது.
 | 

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பாக, மொழிப் போராட்டம் நடந்தது என்ற சிறப்பு, தமிழகத்திற்கு உள்ளது. இதன் காரணமாக, அனைவருக்கும் இந்தி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பணம் படைத்தவர்கள், அதிலும் நகரத்தில் வாழ்பவர்கள், இந்தியை விருப்பபாடமாக படிக்கிறார்கள். 

ஆங்கிலேயேர் காலத்தில் இருந்து, ஆங்கிலம் இங்கே கோலோச்சினாலும், பல அரசு கல்லுாரி மாணவர்கள் முடிந்தளவு அனைத்து தேர்வுகளையும் தமிழில் தான் எழுதுகிறார்கள். ஏழை, பணக்கார்கள் ஒரே ஊரில் இருக்கும் வகையில், இங்கே தமிழ் எனக்கு தெரியாது என்று கூறும் தமிழனும், தமிழை தவிர்த்து எதுவுமே தெரியாது என்கிற பச்சை தமிழனும் வாழும் பூமி இது. 

மொழியை பொருத்தளவில் தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அரைகுறைகள் தான். அரசோ எல்லாவற்றிலும் சிறுபான்மை நிலை பேணுவதைப் போலவே, மொழியிலும் ஆங்கிலம், இந்தி தெரிந்த மொழி வாரி சிறுபான்மையினரையே தாங்கி பிடிக்கிறது.

இதில் மத்திய அரசு, மாநில அரசு என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. மாநிலத்தில் திமுக, அதிமுக கட்சி வேறுபாடு கூட கிடையாது. பத்தாம்வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைப்  பாருங்கள். ஒரு வார்த்தை கூட தமிழில் இருக்காது. பிளஸ் 2விற்கு பின்னர் வடமாநிலத்திலா, அல்லது வெளிநாட்டில் சென்றா நம்மவர் படிக்கப்ப போகிறார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கல்வித்துறை ஆங்கிலத்தில் மட்டும் தான் அதனை அச்சிடும்.

இப்படி ஆங்கில அடிமைகளாக தமிழர்களாக இருப்பதால் தான், தமிழ்நாட்டில் தமிழை கண்டு கொள்வதே கிடையாது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றநீதிமன்ற தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்வது குறித்த பட்டியலில் தமிழ் இல்லை என்ற பிரச்னை தலை துாக்கியது. இந்தியாவில் உள்ள மக்கள் பேசும், எழுதும் வழக்கில் உள்ள மொழிகள் அனைத்திலுமே தீர்புகளை மொழி பெயர்க்க முடியும். 

இன்றைக்கு நடைமுறையில் இல்லாத பல வேலைக்கு நீதிமன்றங்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டுகின்றனர். உதாரணமாக மசால்ஜிகள் என்று ஒரு பணியிடம். நீதிபதிகளுக்கு விசிறி விடுவது, அவர் பணிகளில் முக்கியத்துவம் கொண்டது. இன்று மின்விசிறி வந்தவிட்ட நிலையில் கூட, மசால்ஜிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் மொழிபெயர்ப்பாளர் நியமனம் என்பது குடிமுழுகிப் போகும் வேலை இல்லை.

அரசியல் கட்சிகளின் பல கட்ட வலியுறுத்தல்களுக்குப் பின், ஒரு வழியாக, இன்று, உச்ச நீதிமன்ற தீர்பு நகல், தமிழில் மாெழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும், சரவணபவன் முதலாளி ராஜகோபால் வழக்கு பற்றிய தீர்ப்பு விபரம். அவர் இறந்த நாளில் வெளியாகியிருக்கிறது.


இப்படி நீதிமன்ற தீர்ப்ப பற்றிய பிரச்னையே இன்னும் முழுதாக முடிவுக்கு வராத நிலையில், அடுத்த கட்டமாக தபால்துறை தேர்வில் இந்தி, ஆங்கில மாெழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது அராஜகத்தின் உச்சகட்டம் எனலாம். இதற்கு எதிர்க்கட்சிகள், தமிழக ஊடகங்கள் கடும் கண்டனம் எழுப்பியதன் எதிரொலியாக அனைத்து பிராந்திய மாெழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சரி, மத்திய அரசுதான் இப்படி நடந்து கொள்கிறதென்றால், மாநில அரசியல் கட்சிகளும் அதை ஊக்குவிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றன. ஒரு செயல் நடப்பதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதை விடுத்து, அது பற்றிய ஆணை வெளியாகி, தேர்வும் நடத்தி முடிக்கப்பட்ட பின், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்வை ரத்து செய்ய வைத்திருப்பது ஏற்கனவே தேர்வை எழுதியவர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும். 

இப்படிப்பட்ட வீண் வேலைகளில் ஈடுபடுவதை விடுத்து, இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில், கிராமப்புற மாமணவர்கள் கூட சரளமாக ஆங்கிலம் படிக்கும் வகையில் ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எப்படி ஆங்கிலம் கற்பிப்பபதால், தமிழ் அழியாது என நம்புகிறோமோ, அப்படித்தான் இந்தி கற்பிப்பதாலும் தமிழ் அழிந்துவிடப்போவதில்லை. 

‛தமில் வாள்க’ என பார்லிமென்ட்டில் குரல் கொடுக்கும் எம்பிக்களால் எந்த காலத்திலும் தமிழ் வளரப்போவதில்லை. இவர்கள் முயன்றுதான் தமிழன்னையை காக்க வேண்டும் என்ற எந்த அவல நிலையும் தற்போது இல்லை; எப்போதும் ஏற்படாது. 

தமிழன்னை தன்னை தானே காத்துக்கொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதிய வடிவம் எடுத்து மிளிரி வருகிறாள். இனியும் அவளின் மிளிரல் தொடரும். அரசியல் ஆதாயத்திற்காக, மக்களை முட்டாளாக்கும் அரியல்வாதிகள், இனியும் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல், தமிழக மக்களின் உண்மையான நலனுக்காக நேர்மையாக கடமையாற்றினால், அது அவர்களுக்கும் சரி, மக்களுக்கம் சரி நிஜமான நன்மையாக இருக்கும். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP