சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய கோவை நகரில் கட்டப்பட்ட சிறு நீர்தேக்கம் தான் சிறுவாணி அணை. இது பவானி ஆற்றின் துணை நதியாகும். கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்துவிட்டது.
 | 

சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய கோவை நகரில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்தேக்கம் தான்  சிறுவாணி அணை. இது பவானி ஆற்றின் துணை நதியாகும். கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்துவிட்டது. 

சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரில் தான் சிறுவாணி அணை உள்ளது. அணையின் கட்டுமானப்பணி ஆங்கிலேயர்களால் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடி ஆகும். சிறுவாணி அணைக்கு வரும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும் மேற்கே பவானியுடனும் கலக்கிறது. 

சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

உலகின் இரண்டாவது மிக சுவையான நீர் என்றால் அதுதான்  சிறுவாணி நீர் தான். இந்த நீர் மிக சுவையாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என ஆவல் எல்லோருக்கு இருக்கும்.  இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மையால் தான் சிறுவாணி நீர் சுவையாக இருகிறது என கூறப்படுகிறது. காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதாக உள்ளது சிறுவாணி ஆறு.  கோவையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகவும், கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளோடு அமைந்துள்ள ஓர் அழகிய அமைதியான இடமாகவும் உள்ளது சிறுவாணி. இந்த சிறுவாணி அணை 'கோவை குற்றாலம்' எனவும் அழைக்கப்படுகிறது.  

சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

சிறுவாணி அணை கேரளாவில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பில் அழகாக  விளங்குகிறது. இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை காலங்களில் சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் 'சிறுவாணி அணை' கட்டப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அருவியும் அமைந்திருக்கிறது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஒரு அருவி மட்டுமே உள்ளதால் இங்கு எப்பொதும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். இது பாலக்காடு வழியாக தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது. கோயம்புத்தூரின் மிக அருகில் அமைந்துள்ளது சிறுவாணி அருவி. 

சுவையான சிறுவாணியும்,  அணையும்...!

சிறுவாணி அருவிக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் குளிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக குளிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். கோவை சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்த ஒரு அருவி மட்டுமே உள்ளதால் இங்கு எப்பொதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  அருவிக்கு தாண்டி மலையின் மீது அமைந்திருக்கும் சிறுவாணி அணையை பார்வையிட வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டுமாம்.  கோவையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியதுவம் பெற்றுள்ள ஓர் அணையாக உள்ளது சிறுவாணி. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP