டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

டாஸ்மாக்கில் இன்றும்( டிச. 31), நாளையும் (ஜன. 1) இரண்டு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டையொட்டி 211 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாம்.
 | 

டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

இன்று ஆண்டின் கடைசி நாள். புத்தாண்டில் ஆண்டில் சிகரெட் குடிக்க மாட்டேன் என்பதில் இருந்து இந்த ஆண்டு நிறுவனத்தின் முதலீட்டை 100 கோடிக்கு உயர்த்துவேன் என்று உறுதி ஏற்பது வரை அனைவரும் கடைபிடிக்கும் சம்பிரதாயம்.  என் நெருங்கிய தோழி ஒருத்தி வரதட்சணை உட்பட பல காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் வாலிபர்களின் காமத்திற்கு வடிகாலாக வாழ்கிறவர். அவள் பெண் கல்லுாரிக்கு செல்லும் இடிராஜாக்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி தான் வீட்டிற்கு வருவாள். அவர் சிக்கலை போக்கு வதற்காக டூவீலர் வாங்கி தர முடிவு செய்தாள் அந்த அன்புத்தாய். அதனால் அவள் 20 வாடிக்கையாளரை புத்தாண்டு அன்று திருப்தி படுத்த உறுதியேற்றாள்.

மற்றொரு நண்பர் இவர் தொழில் அதிபர். மதசார்பற்றவர் என்பதால் எல்லா மதப்பண்டிகையையும் கொண்டாடுவார். அதுவும் அவர் வசிக்கும் ஏரியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான புத்தாடைகள் வாங்கி கொடுத்த பிறகே அவர் பண்டிகையே கொண்டாடுவார். வரும் பொங்கல் அன்று தன் வழக்கப்படி பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாண்டு அன்று 2 கிலோ பொட்டலங்கள் விற்பனை செய்ய உறுதியேற்றார். பொட்டலம் என்றால் புரிகிறதல்லவா.

அந்த அன்புத்தாயும், கருணை உள்ளம் கொண்ட தொழிலதிபரும் எத்தனையோ நல்ல விஷயங்களுக்காக பாடுபட்டாலும், நீங்களும் நானும் அவரை விபச்சாரி என்றும், கஞ்சா வியாபாரி என்று தான் இகழுவோம். அதை விடுத்து ஆகா இவர்கள் போல அல்லவா வாழ வேண்டும் என்று வாழ்த்த மாட்டோம். தனி நபர் நிலை இப்படி என்றால் ஒரு அரசு அந்த பெண்மணி போலவோ, கஞ்சாவியாபாரி போலவோ சபதம் ஏற்றால், இலக்கு நிர்ணயம் செய்து அதை எட்டுவதற்காக பல வழிமுறைகளை கடைபிடித்தால் என்ன சொல்லுவோம்.

டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

அப்படித்தான் இன்று தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. டாஸ்மாக்கில் இன்றும்( டிச. 31), நாளையும் (ஜன. 1) இரண்டு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டு  புத்தாண்டையொட்டி 211 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாம். இந்த ஆண்டு நன்கு மழை பெய்து விவசாயம் செழித்துள்ளது, கஜாபுயல் மக்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்தி விட்டு சென்றுள்ளது. தொழில்துறையும் செழிப்பாக உள்ளது. இதன் காரணமாக ரூ. 99 கோடி இலக்கு கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளது.

டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு 180 மில்லி 100 ரூபாய், உயர்தரமான சரக்கு ரூ. 250 இந்த விலையில் விற்பனை செய்துதான் ரூ.300 கோடியை நம்ம அரசு எட்டப்போகிறது என்று பார்த்தால்தான் இந்த விஷயத்தின் முழு பரிமாணத்தை பார்க்க முடியும்.

இன்னொருபுறம் மது போதையில் வாகனங்கள் ஓட்டினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து என்று மிரட்டல், அபராதம் விதிக்க காவல்துறைக்கு கெடுபிடி, அவர்கள் பார் வாசலில் நின்று வழக்கு பதிந்து வசூல் பார்ப்பார்கள்.

கள் உண்ணாமை என்று ஒரு அதிகாரமே எழுதிய திருவள்ளுவர் பிறந்த மாநிலத்தில் தான் இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை.

மதுவிலக்கிற்காக தனக்கு சொந்தமான பல ஏக்கர் பனைமரங்களை வெட்டிசாய்த்த பெரியார் பிறந்த மண்ணில் தான் மது ஆறாக ஓடுகிறது. . இந்த கேவலத்தை கண்டும் காணாமல் போகும் அளவிற்கு தமிழன் சொரணையற்றவனாக மாறிவிட்டான்.

ஒரு அரசு இந்த ஆண்டில் இவற்றை செய்து இருக்கிறோம், வரும் ஆண்டில் இந்த இந்த இலக்கு வைத்துள்ளோம் என்று .பேசினால், அது நல்ல அரசு. அதைவிடுத்து டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயம் செய்து புத்தாண்டிண் தொடக்கத்திலேயே குடிமகனின் பாக்கெட்டை காலி செய்தால் என்ன செய்வது. நம்ம ஆளை கேட்டால் நீங்க சொல்லுறது கரெக்ட் சார். அதனால் தான் 31ம் தேதி இரவு 11.50க்கு குடித்தேன் என்கிறான். இன்னொருவன்  புத்தாண்டில் சரக்கு அடித்தேன். இன்னொருவன் சார் வருஷத்தில முதல்நாள் தண்ணீர் அடித்தால் தான் வருஷம் முழுவதும் தண்ணீ அடிக்க முடியும் என்று தத்துவமழை பொழிகின்றான்.

டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

இப்படிப்படவர்கள் இருப்பதால் தான் நம்மை ஆளும் மாநில அரசு குடிமக்களை அவமானப்படுத்தும்  வகையில் இலக்கு நிர்ணயம் செய்கிறது.

புத்தாண்டை தந்தையுடன் கொண்டாட வேண்டும் என்று எண்ணி இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும் குடும்பமாக புத்தாண்டு கொண்டாட ஆசைப்படுவதை நினைத்து பாருங்கள்.

நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட நினைக்கிறீர்களா இரு குடும்பங்களும் இணைந்து கொண்டாடுங்கள். புதுமை புரட்சியாக இரண்டு குடும்பம் ஒன்றாக அமர்ந்து டாஸ்மாக் சரக்கை காலி செய்யாதீர்கள்.

அதை விடுத்து நண்பருடன் குவாட்டரை வாங்கிக் கொண்டு ரகசியமாக ஒதுங்கி விடுவதில் சந்தோஷம் இல்லை வெறும் தோஷம் மட்டும் தான்.

இப்படி கேடு கெட்ட சமூகத்தை நம் அரசு உருவாக்குவதற்கு யார் காரணம்? மன்னர் எப்படியோ அப்படியே மக்கள் என்பது பழைய பழமொழி, இதை சமஸ்கிருத்ததில் யதா ராஜா ததா ப்ரஜா என்பார்கள், கீதையில் பெரியவர்கள் எதை செய்கிறார்களோ மக்களும் அதையே செய்வார்கள் என்கிறார் கிருஷ்ணர். சாரணக்கியன், அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே, அவன் பாவம் செய்தால் மக்களும் பாவம் செய்வார்கள். அவன் சாலையின் நடுவே சென்றால் மக்களும் சாலையின் நடுவேதான் செல்வான் என்கிறார்.

டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

வாரிசு அடிப்படையில் அந்த கால மன்னர்கள் உருவானதால் மேலே சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்தது. இன்று தான் மன்னரையே மக்கள் தானே தேர்வு செய்கிறோம். அதாவது யதா ப்ரஜா ததா ராஜா என்று ஆகிவிட்டது. மக்கள் எப்படியோ, அப்படியே அரசனும் என்பதே ஜனநாயகத்தின் கொடை. 

இன்று நம்மிடையே வளர்ச்சி பற்றிய சிந்தனை இல்லை, .நேர்மையாளர்கள் பைத்தியக்கார்களாக பார்க்கப்படுகின்றனர். நல்லவன் கூட ஓட்டுக்காக சமூதாயத்தின் மீதான சிந்தனை இல்லாதவனுடன் கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடிகிறது. இன்றைக்கு ஓட்டு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. கிழிந்த 20 ரூபாய் நோட்டுக்கு கூட ஓட்டு பெறும் நிலை. இப்படிபட்ட மக்கள் தேர்வு செய்யும் அரசு மட்டும் எப்படி யோக்கியமானதாக இருக்கும். பத்துரூபாய் திருடியவனை திருடிவிட்டான் என்கிற நாம் தான், அரசு கஜானாவை தன் உடமையாக மாற்றிக் கொண்டவனை நல்லா சம்பாதிச்சுவிட்டார் என்று பாராட்டுகிறோம். வரும் 2019ம்  ஆண்டிலாவது நாம் திருந்தி சரியான நபர்களை, நம்மை பற்றி கவலைப்படுபவர்களை, நம்மை நல்வழிபடுத்துகிறவர்களை ஆட்சியாளராக அமர்த்துவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். அப்போதுதான் மாநிலத்தையும் சரி, மத்தியிலும் சரி அவமானங்கள் உருவாகாமல் அரசாங்கம் உருவாகும். வாருங்கள் அனைவரும் சேர்ந்து உறுதி ஏற்போம்.

டாஸ்மாக் விற்பனை இலக்கு: அரசுக்கு வருமானம் அல்ல அவமானம்

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP