தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

கடந்த லோக்சபா தேர்தலில் மோடியா லேடியா என்று கேள்வி எழுப்பி 39 இடங்களில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. விளைவு அகில இந்திய அளவில் அதிமுக 3 ஆவது இடம் பெற்றது. இதன் பலனாகத்தான் தம்பித்துரை லோக்சபா துணை சபாநாயகராக தேர்வு பெற்றார்.
 | 

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

கடந்த லோக்சபா தேர்தலில் மோடியா லேடியா என்று கேள்வி எழுப்பி 39 இடங்களில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. விளைவு அகில இந்திய அளவில் அதிமுக 3 ஆவது இடம் பெற்றது. இதன் பலனாகத்தான் தம்பித்துரை லோக்சபா துணை சபாநாயகராக தேர்வு பெற்றார். ஆனால் செயல்பட்டாரா என்றால் அது கேள்விக்குறிதான். அந்த பதவிக்கு உரிய மரியாதை தராமல் வாய்க்கு வந்த படியெல்லாம், அரசியல் பேசி மத்திய அரசை வறுத்து எடுத்தார்.

மற்றவர்கள் அமைதியாக இருந்த போது, கரூர் தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் குறைதீர்ப்பதாகக் கூறி சுற்றி சுற்றி வந்தார். இது தம்பித்துரை, அதிமுகவில் தனி ஆவர்த்தனம் செய்யப் போகிறாரா? அல்லது அமமுகவின் சீலிப்பர் செல்லாக செயல்படுகிறாரோ என்று பலவிதமான ஐயங்களை பொதுமக்களிடம் எழுப்பியது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நாளிற்கு முன்பு வரை தம்பித்துரை தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

மக்கள் செல்வாக்கற்ற தம்பித்துரை வெற்றி பெற்றது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் முகத்திற்காக மட்டுமே என்பதை மறந்து, சாத்தியப்படாத பதவிக்கு ஆசைப்பட்டு அதற்கு பாஜக பேசி ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எந்த கட்சியும், அடுத்த கட்சியின் விவகாரங்களில் நேரடியாக செயல்படாத சூழலில், தன்னுடைய ஆசையை, கனவை பாரதிய ஜனதா முடித்துத்தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

அது நிறைவேறாத நிலையில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே நிலவி வரும் உறவிற்கு உலை வைக்க முயற்சித்தார். அவர் வகித்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் பதவியே அவரின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்தது கிடையாது. அதிமுக கைப்பற்றியிருந்த அபிரிதமான நாடாளுமன்ற எண்ணிக்கைக்கு அங்கீகாரம் தரும் விதமாக தற்போதை சபையினால், அதிமுகவின் மூத்த உறுப்பினர்  என்ற வகையில் , தம்பித்துரைக்கு வழங்கப்பட்டது.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

அதுமட்டுமின்றி துணை சபாநாயகராக தம்பித்துரை சிறப்பான முத்திரை எதையும் அவரின் பணிக்காலத்தின்போது நிறைவேற்றிவிடவில்லை. ஏதோ அந்தப் பதவியில் இருந்தார். எடப்பாடி முதல்வரானதும், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கட்சிகளினிடையே நிலவி வந்த சுமூக உறவைக் கெடுக்கும் வகையிலேயே, ஓர் சாதாரண உறுப்பினர் மாதிரி அவையில் தம்பித்துரை  பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போலதான் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே. மத்தியில் இணை அமைச்சராக இருந்த போதிலும் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டியது போல அரசுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தார். மத்திய அரசு இவரை வெளியேற்ற இயலாமலும், வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமலும் தவித்தது.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

தற்போது சிவசேனா– பாஜக கூட்டணி அமைந்ததும் முதல்வேளையாக ராம்தாஸ் அதவாலேயை கழற்றிவிட்டது. இப்போது அவர் கூட்டணி அமையவே நான் தான் காரணம் ஆனால் என்னை கழற்றிவிட்டுவிட்டார்கள் என்று புலம்புகிறார், புரண்டு அழுகிறார். எனக்கு சீட்டு கொடுக்காவிட்டால் தலித்கள் ஓட்டு போடமாட்டர்கள் என்று மிரட்டல் வேறு விடுத்து வருகிறார்.

இதே நிலைதான் தம்பிதுரைக்கும் ஏற்படும். பிரபலமான தலைவராக இருந்தாலாவது, சுயேட்சையாக கரூரில் போட்டியிட்டு வெற்றி பெறலாம். அதுவும் இப்போது முடியாது.

தம்பிதுரையை மிரட்டிவைக்க அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வாங்கி உள்ளார். அவர் உட்பட சிலர் மட்டுமே கரூர் தொகுதிக்கு விருப்ப மனு வாங்கி இருப்பதால், அவருக்கு சீட் வழங்கப்படும் என்று பேச்சு எழுந்தது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுற சங்கத்தின் இயக்குனர் பதவிக்கும் சின்னதம்பி விருப்ப மனு பெற்றுள்ளதால்,  தம்பிதுரையை மிட்டவே அவர் களம் இறக்கி விடப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

கடந்த ஓராண்டாக தம்பித்துரை அதிமுகவிற்கு குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு தர்மசங்கடம் விளைவிக்கும் வகையிலேயே பாரதிய ஜனதாவிற்கு எதிராகவும், மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் பேசி வந்தார். மத்திய அரசுடன் சுமூக உறவிற்கு அதிமுக முயற்சி செய்தவந்த வேளைகளில் எல்லாம் அதற்கு வேட்டு வைக்கும் நோக்கத்துடனயே தம்பித்துரை பேசி வந்தார்.

தேவையான அரசியல் முதிர்ச்சியை எடப்பாடி காட்டி வந்தது வேறுவழியில்லாமல் என்று நினைத்தால் நாம் ஏமாந்து போவோம். நேரம் வரட்டும் நான் யாரென்று காட்டுகிறேன் என்பதுதான் அவரது அமைதிக்குக் காரணம். அதை தற்போது செய்து காட்டுகிறார் எடப்பாடி. சொந்த செல்வாக்கும் கிடையாது. கட்சியில் மரியாதையும் கிடையாது. கொடுத்துவந்த மரியாதையையும் கெடுத்துக்கொண்டாகிவிட்டது. தற்போது என்ன செய்வார் தம்பித்துரை.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் தம்பித்துரை!

காலம் போன கடைசியில் தம்பிதுரை பாஜக. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார். குடும்ப அரசியல் வெற்றி பெறக்கூடாது என்று கூட்டணி அமைத்துள்ளதாக கூறுகிறார்.  நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமராக தகுதி படைத்தவர் என்றும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் இது தேர்தல் கூட்டணி என்றும் நானும் ரவுடிதான் கதையாக பேச தொடங்கி உள்ளார்.

இது வரையில் இவர் பேசியதை மக்கள் மறந்துவிடுவார்கள், அதிமுக நிர்வாகிகள் மன்னித்துவிடுவார்கள் என்று நம்பி அவர் இந்த புதிய வேடத்தை தாங்கி உள்ளார்.  மனம் திருந்தி வந்த தம்பித்துரையை அதிமுக தலைமையினர் ஏற்பார்களா என்பது வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தெரிந்துவிடும்.

பதவி இருக்கும் தைரியத்தில் வாய்க்கு வந்தபடி பேசி வாங்கி கட்டிக் கொள்வதற்கு ராம்தாஸ் அத்வாலே, தம்பித்துரை ஆகியார் சமீபத்திய உதாரணம். இதை புரிந்து மற்றவர்கள்  தன்னிலையறிந்து எதிர்காலத்தில் நடந்து கொண்டால்  நாட்டுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP