தமிழ் புத்தாண்டில் இனிப்பு மிக்க  பூரண போளி...!

தமிழ் புத்தாண்டு பண்டிகைகளில் தான் விதவிதமான பலகாரங்கள் பூஜையில் நைவேத்யமாக்கப்படும். தமிழகத்தில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் இனிப்பு போளியும் ஒன்று. ஒவ்வொரு மாநி லத்திலும் வேறு வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது
 | 

தமிழ் புத்தாண்டில் இனிப்பு மிக்க  பூரண போளி...!

தமிழ் புத்தாண்டு பண்டிகைகளில் தான் விதவிதமான பலகாரங்கள்  பூஜையில் நைவேத்யமாக்கப்படும். தமிழ் புத்தாண்டு தினத்தில்  தமிழகத்தில் செய்யப்படும்  இனிப்பு வகைகளில் இனிப்பு போளியும் ஒன்று. ஒவ்வொரு மாநி லத்திலும் வேறு வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

குஜராத்தில் வேத்மி அல்லது பூரண போளி என்றழைக்கப்படுகிறது. மகராஷ்டி ராவில் பூரன் போளி எனவும், ஆந்திராவில்  பொப்பட்டு எனவும்,  கர்நாடகாவில் ஒப்பட்டு எனவும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போளி என்றும் அழைக் கப்படுகிறது...  சத்துமிகுந்த சுவையான பலகாரமான இதை ஒவ்வொரு தமிழ் புத் தாண்டு அன்றும் வீடுகளில் படையலுக்கு  வைப்பார்கள். இப்போது கடைகளில் கிடைக்கும் இனிப்பு போளிகளில் இனிப்பும், பூரணமும் அதிக அளவில் இல்லை..  சுவையான பூரண  போளியை எப்படிச் செய்வது என்று  பார்க்கலாமா?

பூரணம் செய்ய தேவையானவை:

துவரம் பருப்பு - 1 ஆழாக்கு ( ஆந்திராவைப் போல் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பும் பயன் படுத்தலாம். ஆனால் சுவையை அதிகரிக்கச் செய்யும்  தமிழகத்தில் பெரும் பாலும் துவரம்பருப்பு தான் பயன்படுத்தப்படுகிறது)

நன்றாக முற்றிய தேங்காய் - 2, வெல்லம் - இனிப்பு நிறைந்த வெல்லம்  1 கிலோ அல்லது இனிப்புக்கேற்ப, ஏலத்தூள் - 5 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் (அ) நெய் (அ) சூரிய காந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப.. 

மேல்மாவு: 
 மைதா -  அரை கிலோ.. உப்பு- சிட்டிகை, எண்ணெய் -  4 தேக்கரண்டி...

செய்முறை:

முதலில் மைதாவைச் சலித்து சுத்தம் செய்து உப்பு சேர்த்து  தேவையான நீர் , எண்ணெய் விட்டு  சப்பாத்தி மாவுக்கும், தோசைமாவுக்கும் இடையில் தளர   நன்றாக பிசையவும்..  மாவின் மீது எண்ணெய் மிதக்கும்.. மாவு அப்படியே  3 மணி நேரம் ஊறவிடுங்கள்...

துவரம்பருப்பை  அகன்ற பாத்திரத்தில் நீர் விட்டு வேகவைத்து முக்கால் பதம் வந்ததும் இறக்கி ஆறவிடுங்கள். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தைக் கட்டியில்லாமல்  தூளாக்கி உடைத்து கொள்ளுங்கள்..  ஆட்டு உரல் அல்லது மிக்ஸியில் துவரம்பருப்பை மசிய அரைத்து வெல்லத்தையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றுங்கள்... பிறகு துருவிய தேங்காய்த்துருவலை சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றுங்கள்..  அகன்ற பாத்திரத்தில் பூரணத்தைப் போட்டு ஏலத்தூள் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக வைத்துக்கொள்ளுங்கள்..

வாழையிலையில் மைதாவை சிறு உருண்டையாக எடுத்து நன்றாக பரத்தி தட்டி நடுவில் பூரண உருண்டையை  வைத்து பூரணம் தெரியாமல் மைதாவால்  உருண்டையாக்குங்கள்.. இப்போது  பூரண உருண்டையை அடைப்போல் முடிந் தளவு மெல்லியதாகத் தட்டி  மிதமானத்தீயில் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரு புறமும் போட்டு திருப்பி எடுங்கள்... சுவையான இனிப்பு பூரண போளி தயார்...

கடைகளில் மிக மெல்லியதாக இருப்பது போல் திரட்டினால் பூரணம் வைக்க முடியாது. சற்று கனமாக இருந்தால் தான் பூரணம் பிடிக்கும். இனிப்பும் சேரும்... இந்தத் தமிழ்புத்தாண்டில் உங்கள் படையலில் போளியும் நிறையட்டும்.. வாழ் வில் இனிப்பும் பொங்கட்டும்..!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP