ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? 

, எங்கிருந்தோ வந்த, சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முற்போக்கு இயக்கத்தினர், தொழிற்சங்கங்கள் இன்று தங்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் சொல்லாமல், தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக, வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் வேதனை தெரிவித்துள்ளனர்.
 | 

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? 

தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அப்பகுதி மக்களின் ஆராேக்கியத்தை பாதிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஆலையை மூட வேண்டும் என சிலர் கடுமையாக குரல் கொடுத்தனர்.

இருப்பினும், அதே சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பலர், இந்த ஆலையில் தான் பணியாற்றி, அதில் வரும் வருமானத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதாக ஒருபுறம் பிரசாரம் நடந்த அதே வேளையில், இந்த ஆலையில் பணியாற்றி கிடைக்கும் வருமானத்தால் தான் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளும் பூர்த்தி ஆகின.

ஆலையை மூடக் கோரி, சில தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தாலும், 2008 மே மாதம், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் கட்சியனர், தனியார் அமைப்பினர் என பல தரப்பினரும் நடத்திய போராட்டத்தில், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? 

இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு, அடிதடியாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டோரை ஒடுக்க, போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இதனால், மிகப் பெரிய கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்பாேது தான், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கலவரக்கார்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாகினர்.

பின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்தது.

எனினும், கலவரத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை காரணம் காட்டி, சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்த ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது.

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? 

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தவிர, இந்த விவகாரத்தில் மாசு பிரச்னை மட்டுமின்றி, பல்வேறு சட்டப்பிரச்னைகளும் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் இல்லை எனவும், தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பளித்தது.

பல ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை பிறப்பித்ததன் மூலம், தமிழக அரசு நிரந்த தீர்வு கண்டது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, இனி இந்த பிரச்னை தொடர்பாக மேல்முறையீடு செய்தால், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்ச நீதிமன்றம் அறுவுருத்தியுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் இத்துடன் விடுவதாக இல்லை என்றும், உயர் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து மீண்டும் ஆலையை இயங்கச் செய்வோம் எனவும் அந்த நிறுவன மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது, அது மூடப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து என, இரு வெவ்வேறு தருணங்களில், துாத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை, அந்த நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. 

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? 

அதே போல், அந்த பகுதியில் காற்று மாசு குறித்தும் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகள் அனைத்தும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது ஆய்வகங்கள் மூலம் நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியது. 

ஆய்வு முடிவில்,ஸ்டெர்லைட் இயங்கிய போதும், மூடப்பட்ட பிறகும், அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே நீர், காற்று மாசு இருந்ததாக அந்த நிறுவனம் கூறியது. இதன் மூலம் அந்த நிறுவனம் இயங்கியதால் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்டெர்லைட் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவை தங்களுக்கு நிம்மதி அளித்துள்ளதாக, துாத்துகுடிவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம், தங்கள் மனதில் ஆரா வடுவாக உள்ளதாகவும் சிலர் கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

இந்நிலையில், எங்கிருந்தோ வந்த, சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முற்போக்கு இயக்கத்தினர், தொழிற்சங்கங்கள் இன்று தங்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் சொல்லாமல், தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக, வேலையிழந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாெத்தத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில், ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியும், ஒரு தரப்பினருக்கு வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP