கமலிடம் போய் பாடம் கற்கலாமா ஸ்டாலின் சார் ..?

பொதுவாக கிராமங்களில் ஒத்தையாக ஆலமரத்தடியில் அமர்ந்து இருப்பவர்களுக்கு வேலைவெட்டி எதுவும் இருக்காது என்பதே நடைமுறை. அந்த லி்ஸ்டில் உங்களையும் சேர்ந்து விடப் போகிறார்கள் ஸ்டாலின் சார் ஜாக்கிரதை.
 | 

கமலிடம் போய் பாடம் கற்கலாமா ஸ்டாலின் சார் ..?

தமிழகத்தில் தற்போது நடப்பதை பார்த்தால் சாதாரண மக்களுக்கு கூடகோபம் வரும் என்கிற போது அறிவுஜீவிகளை பற்றி கேட்க வேண்டாம். அதிலும் இடதுசாரி அறிவுஜீவி அல்லவா கமல் அதனால் ஏற்பட்ட கோபத்தில் தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்துவிட்டார். அரசியலில் குதித்தும் கூட அவரது மையமான மய்யத்திற்கு இன்னும் முழுமையாக அனைத்து இடங்களிலும் உறுப்பினர்கள் சேரவில்லை. அரசியல் சாக்கடையில் ஒரு சித்தார்த்தன் போல  அவர் திகழ்ந்து வருவதால், பிரச்னைகளை அறிய அவர் கண்டுபிடித்த வழிதான் கிராமசபைக் கூட்டங்கள்.

மகாத்மா காந்தியின் 150ம் பிறந்த நாளை முன்னிட்டு நடத்த கிராமசபைக் கூட்டத்தில், கமல் கலந்து கொண்டு அங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார் என்பது ஏற்கத்தக்கது தான்.

ஆனால் ஸ்டாலின் சார் உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்களும் கமல் பாணியில் சொம்பை துாக்கி கொண்டு, மக்களிடம் நேரடியாகப் பேசுகிறேன் என்று ஆலமரத்தடி தேடி போய் உட்காரந்து விட்டீர்கள். அதிலும், உங்களின் சொந்த மாவட்டத்தை தேர்வு செய்து ஊராட்சி சபைக் கூட்டம் நடத்துவது, ஓர் அரசியல் கட்சியின் தலைவனுக்கு அழகாகவா உள்ளது?

கமலிடம் போய் பாடம் கற்கலாமா ஸ்டாலின் சார் ..?

திமுகவிற்கு வீதி வீதியாக கிளைகள் உள்ளன. அந்தக் கிளையில் இருப்பவர்கள் தங்கள் பகுதியின் பிரச்னைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். பத்திரிகையாளர்களே ஒரு பகுதியை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அங்கு அரங்கேற்றப்படும் ஆளும் கட்சியின் புறக்கணிப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அப்பகுதியில் உள்ள திமுக அல்லது கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளைத் தான் தொடர்பு கொள்வார்கள்.

இந்த சூழ்நிலையில் உள்ளாட்சிகளின் பிரச்னைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் திமுகவின் கிளைக்கழகங்களை அழைத்து அவர்களிடம் பேசினாலே போதுமே ஸ்டாலின். அதை விடுத்து கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது. அந்தக் கூட்டமே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், சொல்லிக்கொடுத்து பேச வைக்கப்பட்ட மக்கள் கூட்டம் என்று சமூக வளைத்தளங்களில் உங்களை சிதற அடித்து வருவது வேறு கதை. மக்கள் உண்மையிலேயே உங்களைத் தேடி வந்து பேசினார்கள் என்ற அடிப்படையிலேயே கருத்துகளை நாம் இங்கு முன் மொழிகிறோம்.

வர வர உங்கள் கூட இருப்பவர்கள் நமக்கு நாமே, மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம் என்று உங்களை அலைய விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கட்சி தொண்டர்களை அழைத்து அவர்களை உண்மையை பேச சொன்னால் தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளையும் இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாமே. அவர்களுக்கும் செயல் தலைவர், தலைவரான பின்னர், நேரில் வாழ்த்து சொல்ல ஒரு வழி கிடைத்திருக்குமே.

கமலிடம் போய் பாடம் கற்கலாமா ஸ்டாலின் சார் ..?

கிராம சபையில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் கஜா புயலால் என் வீடு பாதித்தது, ஊர் பாதித்தது ஆனால் யாரும் வந்து பார்க்கவில்லை என்று தானே புலம்புகிறார்கள். அப்படி என்றால் நீங்கள் லாரி லாரியாக அனுப்பிய நிவாரணப் பொருட்கள் எங்கே போயின.

மேலும் நீங்கள் கலந்து கொண்ட தொகுதியின் எம்எல்ஏ மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்ற போது சொந்த காசில் சூனியம் வைப்பது போல மக்கள் குறை சொல்வது அவரையும் சேர்த்து தான் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை. இங்கு மட்டும் அல்ல திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற அனைத்து தொகுதியிலும் இது தான் நிலை.

சரி மக்கள் குறைகளை கூறிய பின்னர் நீங்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளாகவது உருப்படியாக இல்லை. உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியெனில் உங்களால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று தானே அர்த்தம். அப்புறம் ஏன் தண்டத்திற்கு இந்த கூட்டம் நடத்த வேண்டும். குறைந்த பட்சம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னிடம் மனுக் கொடுப்போம் என்று அறிவித்து இருக்கலாம். அல்லது போராட்டமாவது அறிவித்து இருக்கலாம். அதைவிடுத்து உங்கள் குறைகள் நிறைவேற வேண்டுமானால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறுகிறீர்களே. அவர்கள் அதற்கு குறைகள் எல்லாம் அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று முடிவு எடுத்து விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

கமலிடம் போய் பாடம் கற்கலாமா ஸ்டாலின் சார் ..?

தொண்டர்கள் உழைப்பால் தான் திமுக ஆட்சிக்கு வரும் என்பதால் அவர்களை சந்திக்க நி்கழ்ச்சி நடத்துங்கள் ஸ்டாலின் சார். அதை விடுத்து இப்படி காமெடி செய்வது சில நாட்கள் உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவலாமே தவிர்த்து, வேறு எந்த பிரயோஜனமும் இவை மூலம் உங்களுக்கோ, கட்சிக்கோ கிடைக்கப் போவதில்லை.

பொதுவாக கிராமங்களில் ஒத்தையாக ஆலமரத்தடியில் அமர்ந்து இருப்பவர்களுக்கு வேலைவெட்டி எதுவும் இருக்காது என்பதே நடைமுறை. அந்த லி்ஸ்டில் உங்களையும் சேர்ந்து விடப் போகிறார்கள் ஸ்டாலின் சார் ஜாக்கிரதை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP