ஸ்டாலினை பணியவைத்த சமூகவலைதளங்கள்....!

பிரதமர் மோடியை பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் விமர்சனம் செய்யும் போது கேவலம் நடிகைகள் என்று குறிப்பிட்டுவிட்டாராம். இதனால் ராதாரவிக்கு ஒரு நியாயம் ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா என்று சமூக வலைதளங்கள் பொங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
 | 

ஸ்டாலினை பணியவைத்த சமூகவலைதளங்கள்....!

தந்தை பெரியார் வீதிக்கு வீதி பிள்ளையாரைப் போட்டு உடைத்த காலத்தில் இருந்தே திராவிடர் கழகம் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களை அள்ளிவீசித் தான் வருகிறது. இதைக் கேட்டு துடிக்க வேண்டிய இந்துக்கள் மவுனமாகத்தான் இருந்தார்கள். இதன் காரணமாக திகவின் சிஷ்யர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திமுக குறிப்பாக அதன் தலைவர் கருணாநிதியும் இந்து விரோதக் கருத்துகளை அள்ளி வீசித்தான் வருகிறார்கள். இதற்கு இந்து இயக்கங்களை சார்ந்தவர்கள் மட்டுமே பதிலடி கொடுத்தனர். 

ஆனால் இந்துக்கள் வேறு, இந்து இயகத்தை சேர்ந்தவர்கள் வேறு என்பது போல யதார்த்தம் இருந்ததால் கருணாநிதி போன்றவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இந்து விரோதக் கருத்துக்களை விட கருணாநிதியிடம் திமுகவினருக்கு, பொதுமக்களுக்கு ஏற்புடைய கருத்துக்கள் பல இருந்ததால் தேர்தலில் அவர் வெற்றி பாதிக்கப்படவில்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னால் கருணாநிதியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஜெயலலிதா மீது மக்களுக்கு ஏற்படும் கோபம் என்பதால் அவர் இந்துக்களை விமர்சனம் செய்தால் கூட வெற்றி அவரை விட்டு விலகாமல் இருந்தது. 

தற்போது ஸ்டாலின் நிலை அது இல்லை. இது வரையில் நல்லதோ, கெட்டதோ அவர் மீது எந்த விமர்சனமும் விழுந்ததில்லை. இந்த தேர்தல், அதைத் தொடர்ந்து சட்டசபையில் ஏற்பட போகும் மாற்றங்கள் ஆகியவை தான் ஸ்டாலின் அரசியல் அனுபவத்தை நன்கு வெளிப்படுத்தும். 

இதன் காரணமாகத்தான் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிறவகையில் அவர் நடவடிக்கைகள் உள்ளன.ஒரு அறைக்குள் நடந்த திரைப்பட விழாவில் நடிகர் ராதாரவி பேசுகையில் நடிகை நயன்தாராவை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு சில வார்த்தைகளை குறிப்பிட, அது சமூக ஊடங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ரஜினி, கமல் ஆகியோரை களத்தில் எதிர் கொள்ளும் ஸ்டாலின், இதனால் ஏதோ திமுகவே கலகலத்துவிடும் என்ற அச்சத்தில் ராதாரவியை கட்சியை விட்டே தற்காலிகமாக நீக்கினார். 

இந்த விமர்சனம் ஓயும் முன்பே பிரதமர் மோடியை பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் விமர்சனம் செய்யும் போது கேவலம் நடிகைகள் என்று குறிப்பிட்டுவிட்டாராம். இதனால் ராதாரவிக்கு ஒரு நியாயம் ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா என்று சமூக வலைதளங்கள் பொங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் ஆசிரியர் வீரமணி கிருஷ்ணரை, மகாபாரதத்தை இழிவு படுத்தி பேசினார். பொள்ளாட்சி சம்பவத்திற்கே கிருஷ்ணர் தான் தொடக்கம் என்றார். மகாபாரதம் செக்ஸ் கதைகளின் தொகுப்பு, என்றெல்லாம் விமர்சனம் செய்தார். கடந்த காலமாக இருந்தால் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் இதை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பார். அதை பாதி பத்திரிக்கைகள் வெளியிடாது. நம்ம வீரமணியா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார் என்ற அளவிற்கு தான் அவை பிரபலமடைந்து இருக்கும். 

ஆனால் சமூக ஊடகங்கள் இதை வரிந்து கட்டிக் கொண்டு வெளி உலகிற்கு அடையாளம் காட்டின. பகிர்தலும், விரும்புதலும் பலரை பகீர் ஆக்கின. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் திருச்சியில் திக கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஈடுபட்ட இருதப்புக்கும் தகராறு ஏன்பது சாதாரண விஷயம் என்றால் கூட இந்துக்கள் மனதில் ஏதாவது மாற்றம் வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

விளைவு ஸ்டாலின் பலவிதங்களில் மறைக்கப்பார்த்தவர், சமூகவலைதங்களில் தீயாய் பரவும் இந்த பிரச்சாரம் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று உண்மையை உணர்ந்தார். இதனால் அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் வீரமணி செயல் கண்டிக்கதக்கது என்றார். திராவிடபரியம் என்று பேசுபவர்கள், அத்வானிக்கு குரு துரோகம் செய்து விட்டார்கள் என்று கதறுபவர்கள், இன்று தங்கள் தாய் கட்சியான திகவின் தலைவர் வீரமணியையே கண்டிக்கிறார் என்றால், அது கட்டாயம் சமூக ஊடங்களின் வெற்றிதான்.

திமுகவின் பிரபல பேச்சாளர்கள் வெற்றி கொண்டான், தீப் பொறி ஆறுமுகம் போன்றவர்கள் சாதாரண காலத்தில் தங்கள் வார்த்தைகளால் தொண்டர்களுக்கு  ஆபாச படம் பார்த்த அனுபவத்தை தந்தாலும், தேர்தல் காலத்தில் எந்த பிரச்சாரக் கூட்டத்திலும் பேச மாட்டார்கள். இதில் விதி விலக்குகள் இருக்கலாம். காரணம் விழும் ஓட்டும் இவர்கள் பேச்சால் விழாமல் போய்விடும்  என்ற அச்சம் தான் காரணம். அந்த பட்டியலில் தற்போது வீரமணியும் இணைந்துவிட்டார். இதன் பின்னரும் அவர் இதே நிலையை தொடர்ந்தால் திமுகவிற்கும், திகவிற்கு தொடர்பே இல்லை என்று பொதுக்கூட்டம் போட்டு அறிவித்துவிடுவார்கள். அப்புறம் பதவி முக்கியம் இல்லையா. ?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP