முதலில் கூறை ஏறி கோழி பிடிக்க முடியுமா பாருங்க ஸ்டாலின்...!

ற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட்டில் வெஸ்டின்டிஸ் அணிக்கு இணையாக அதிமுக உள்ளது. இதை தோற்கடிக்க வேண்டியதே திமுகவின் முதற்கடமை. அதற்கு தேவையான ஏற்பாட்டை செய்தாலே முதல்வர் ஸ்டாலினை நோக்கி அனைவரும் ஓடிவருவார்கள்.
 | 

முதலில் கூறை ஏறி கோழி பிடிக்க முடியுமா பாருங்க ஸ்டாலின்...!

தமிழக அரசியலை திமுக தலைவர் கருணாநிதி தன்னை சுற்றியே மையம் கொள்ள வைத்திருந்தார். அதன் காரணமாக அவர் மத்திய அரசைப் பற்றியோ, அதில் தனக்கு கிடைக்கும் முக்கியத்துத்தை பற்றியோ அவர் கவலைப்படுவதில்லை. அதே நேரத்தில் அவரது மனசாட்சியாக மாறன் அவற்றை கவனித்து வந்தார். இதனால் தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டுமே கருணாநிதி டெல்லிக்கு செல்வார். அதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இதர மாநிலங்களில் கூட்டணி அமைந்தால் அந்த கூட்டங்களில் கருணாநிதி நேரடியாக கலந்து கொள்ளவில்லை. தேவை ஏன்றால் அந்த கூட்டணி கட்சிகளை தமிழகத்திற்கு வரவழைத்து அதில் தன் முக்கியத்துவத்தை நிலை நிறுத்துவார். அப்படித்தான் 1998ம் ஆண்டு தேசிய முன்னணியை என்டிராமராவ் தொடங்கினாலும், சென்னையில் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தி தமிழகத்தில் விபிசிங்கை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். இதன் பலனாக 1989 தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறாவிட்டால் கூட விபி சிங் அரசில் முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். 

கருணாநிதியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு என்றால், மாறன் மறைவு அந்த கட்சிக்கு குறிப்பாக கருணாநிதிக்கு இழப்பு.  அதன் பின்னர் மத்திய அரசை கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்த கலாநிதிமாறன், ராஜா, கனிமொழி ஆகியோர் திமுகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.  ஆனாலும் கருணாநிதிதான் திமுகவின் வெற்றி, தோல்விக்கு காரணம் என்பதால் மற்றவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. 

முதலில் கூறை ஏறி கோழி பிடிக்க முடியுமா பாருங்க ஸ்டாலின்...!

இந்நிலையில் ஸ்டாலினை அம்போ என்று விட்டுவிட்டு கருணாநிதி சென்று விட்டார். இப்போது மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும், மத்தியிலும் தன் இருப்பை காட்ட வேண்டும் என்ற 2 சுமைகளும் ஸ்டாலின் தோளில். மத்திய அரசுக்கு யாரேனும் ஒருவரை நியமிக்கலாம் என்றால் கருணாநிதிக்கு இணையாக ஸ்டாலினால் அவர்களை கட்டுப்படு்தத முடியுமா என்பது கேள்விக்குறி.  தன் மகன், மருமகன் என்று களம் இறக்கலாம் என்றால் அவர்கள் அரசியலில் அ, ஆ கூட இப்போதுதான் படிக்கிறார்கள். கனிமொழி, அழகிரி கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்வது போல மாறிவிடும். வேறு வழியியே இல்லாமல் ஸ்டாலினே தற்போது களம் இறங்கி உள்ளார். 

இதனால் தான் மேற்கு வங்கமாநிலத்தில் நேற்று கூடிய எதிர்கட்சிகள் கூட்டணியால் திமுகவிற்கு ஒரு சதவீதம் வாக்கு கூட கிடைக்காத நிலையில் மம்தா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி, மாநிலத்திற்கு வெளியே காங்கிரஸ், பாஜக இல்லாத கட்சிகளுடன் தோழமை. காரணம் கேட்டால் மோடி. இப்படி ஒரு நிலைப்பாட்டை திமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும். ஏதேனும் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் அதை எதிர்த்து இப்போது மம்தா கூட்டணியில் உள்ள கட்சி போட்டியிட்டால் ஸ்டாலின் யாருக்கு ஓட்டுப் போட சொல்வார் என்பது கேள்விக்குறி. 

முதலில் கூறை ஏறி கோழி பிடிக்க முடியுமா பாருங்க ஸ்டாலின்...!

இன்னொரு புறம் ஸ்டாலின் அரசியல் அறிவு கலைஞரின் சிலை திறப்பு விழாவிலே.சந்தி சிரித்து விட்டது. காங்கிரஸ் கட்சியே ராகுலை பிரதமராக கருதாத நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஸ்டாலின் அறிவித்துவிட்டார். ஒரே அறிவிப்பில் அனைவரையும் ஆட வைத்துவிட்டார். இப்படிப்பட்ட அரசியல் அறிவு கொண்டவர் மத்திய அரசியலில் என்ன செய்யப் போகிறார். 

தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட்டில் வெஸ்டின்டிஸ் அணிக்கு இணையாக அதிமுக உள்ளது. இதை தோற்கடிக்க வேண்டியதே திமுகவின் முதற்கடமை. அதற்கு தேவையான ஏற்பாட்டை செய்தாலே முதல்வர் ஸ்டாலினை நோக்கி அனைவரும் ஓடிவருவார்கள். அப்போது விரல்நீட்டிய இடத்தில் பிரதமர் இருப்பார். முதலில் கூரை ஏறி கோழி பிடித்தால் போதும்  வைகுண்டம் தானே வந்து விடும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP