இலங்கையின் இறுதி கட்ட போர்: தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

இலங்கையில் சிங்களர்கள் அந்நாட்டில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
 | 

இலங்கையின் இறுதி கட்ட போர்:  தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சிங்களர்கள் அந்நாட்டில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக மட்டக்களப்பை சேர்ந்த அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சிங்களர்களில் பெரும்பாலோனேரர் பின்பற்றும் புத்த மதத்தின் முக்கிய நூலான மஹாவம்சத்தில் இது குறித்து குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இலங்கை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம்  பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், நம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது-

இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைவாகக் கூலி கொடுக்கலாம் என்ற காரணத்தினாலேயே, பண்ணை முதலாளிகள் ஏராளமான இந்தியத் தொழிலாளர்களை பணியமர்த்தினர். ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு குடியுறிமை வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டது. ஒரு சில தொழிலாளர்கள் முதலாளிகளின் உதவிகளோடு குடியுறிமை பெற்றனர்.

இவர்கள் மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சிங்களர்கள் அந்நாட்டில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மன்னர்கள் அங்கு ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சிங்களர்களில் பெரும்பாலோனேரர் பின்பற்றும் புத்த மதத்தின் முக்கிய நூலான மஹாவம்சத்தில் இது குறித்து குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் இறுதி கட்ட போர்:  தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்த போது, இலங்கையின் பிரதமராக  பதவி வகித்து வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் முன்னிலையில் தான் இந்தியா இலங்கை ஒப்பந்தம்  கையெழுத்தானது. மேலும் ராஜிவ்காந்தி இந்தியப் பிரதமராக பதவி வகித்து போது இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனில் அக்கறைக்காட்டினார். இருந்த போதும் தமிழர்களை அழித்து விட வேண்டும் என்று எண்ணிய சிங்களர்கள், அப்போது ஆட்சியிலிருந்து அரசின் உதவியுடன் ஆயுதங்களை கையில் எடுத்தனர்.

இதனால் சாத்வீக முறையில் நம்பிக்கை இழந்த சில தமிழ் அமைப்புகள், பதிலடி தரும் வகையில், ஆயுதங்களை கையில் எடுக்க ஆரம்பித்தனர். தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பதவி வகித்த காலகட்டத்தில், மத்தியில் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில்தான், இலங்கையைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து போராடி வந்த இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தினால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கையின் இறுதி கட்ட போர்:  தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளின் எல்லைகள் மாகாணங்களாக வரையறுக்கப்பட்டன. அதன்படி‌ வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து தமிழர்கள் அந்த பகுதிகளுக்கு குடிப்பெயறும் நிலை ஏற்பட்டது.  

இலங்கையின் இறுதி கட்ட போர்:  தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் தங்களுக்கென தனி ராணுவம், போலீஸ், நீதிமன்றங்களை அமைத்து சிங்களர்களை எதிர்த்து போராடி வந்தனர். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

2009ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிக்கட்ட போர்  தொடங்கியது. அப்போது இலங்கை அதிபராக பதவி வகிந்து வந்த ராஜபக்க்ஷே விடுதலைபுலிகள் இயக்கத்தில் இருந்த கருணாவை ஆசை வார்த்தைகளை கூறி தங்கள் பக்கம் இழுத்து கொண்டார்.

மேலும் அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திட உதவி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையின் இறுதி கட்ட போர்:  தமிழ் எம்.பி., யோகேஸ்வரன் பேட்டி

போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபின் அதிபர் ராஜபக்ஷே, இலங்கை மண்ணை முத்தமிட்ட சம்பவம், அவரைப் போன்ற கொடூர குணம் படைத்தவரை வரலாறு இதுவரை கண்டதில்லை என்பதை உணர்த்துகிறது.

அந்த சமயத்தில் சர்வாதிகாரி போல் நடந்து கொண்ட ராஜபக்க்ஷே இலங்கையில் மீதம் இருந்த தமிழர்களுக்கான உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள்  சென்றடைவதை தடுத்து நிறுத்தினார். இதனால் தமிழர்கள் பலர் நோய்வாய்ப்பட்டும் உணவின்றியும் உயிரிழந்தனர். இவ்வாறு  இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நம் நியூஸ்டிஎம் செய்தி நிறுனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

 

........ பேட்டி தொடரும்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP