முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி அம்மன் அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் கோவிலாகும்.
 | 

முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள  மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி அம்மன்  அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன்  கோவிலாகும்.  இங்குள்ள  குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்"  துர்கா தேவி  எனவும்  பெயர்  பெற்றுள்ளார்.  இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக்  கூறப்படுகிறது.   
முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”
இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும்,  தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக  முக்கடல்  சங்கமமான,  இந்தியாவின்  தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது தேவி கன்னியாகுமரி ஆலயம்.  வேத காலம்  துவங்கியது  முதல்  தேவி  வழிபாடு நடந்ததற்கான  வரலாற்று ஆதாரங்கள்  கிடைத்துள்ளன.   மகாபாரதம், சங்க  நூலான  மணிமேகலை, புறநானூறு,  போன்றவற்றில் வேதங்களில் அம்மன்  வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.    1892ல் சுவாமி  விவேகானந்தரின் குரு  இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார்.  இதனால் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள்.  
முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”
பின்னர் 1935ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து  பல  பெண்களை வரவழைத்து தேவிக்கு  பூஜை  செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள்.  இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு  மூலம் 1948ல் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது.  
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத்  துன்புறுத்தி வந்தான். பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள். அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். 
முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”
கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் நடக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார். கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததே.  ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது.

முக்கடல் சங்கமத்தின் ”ஸ்ரீ பகவதி அம்மன்”

புதிய வியூகத்தால் தேவி - சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்று இரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.  நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார். சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார்.  மணமகன் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை என்ற காரணத்தால்  கோபங்கொண்ட தேவியார் தனது ஏமாற்றத்தின் வேகத்தால் அங்குத் தயாரித்து வைத்திருந்த  எல்லா பொருட்களையும் அழித்து கற்சிலையாகி நின்றுவிட்டாள்.    
சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.

தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுத்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.  இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர்.  

அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர். தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும் காலம் காலமாக இந்தக் கதை கூறப்பட்டு வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP