வருணபகவானுக்கே உத்தரவு போடலாமே சார்!

விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுவது போல நாள் தோறும் அணையின் இருப்பை பார்த்து தண்ணீரை பகிர்ந்து கொண்டால் தான் நல்லது. அப்படி கர்நாடகா செய்யாத போது மேலாண்மை ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் அதற்கு இருக்க வேண்டும். அதை பெற்றுத்தர வேண்டிய கடமை தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களுக்கும் உள்ளது.
 | 

வருணபகவானுக்கே உத்தரவு போடலாமே சார்!

தமிழ்நாட்டில் இவர்கள் மட்டும் தான் விவசாயிகளா? நாங்கள் எல்லாம் விவசாயம் செய்யவில்லை, அவர்கள் தான் தண்ணீர் ஊற்றி பயிர் வளர்க்கிறார்கள், நாங்கள் என்ன டாஸ்மாக் சரக்கை பயன்படுத்தியா சாகுபடி செய்கிறோம் என்று காவிரி பிரச்னை, டெல்டா விவசாயிகள் சோகம் என்று பெரிதாக பேசும் போதெல்லாம், ராமநாதபுரம் உள்ளிட்ட வறண்ட மாவட்ட விவசாயிகள் ஆவேசப்படுகிறார்கள். அந்த அளவிற்கு காவிரி நீரை சேமிக்காமல், நேராக கடலுக்கு அனுப்பிவைத்து விட்டு, ஆண்டுதோறும் போராட்டம் நடத்துவதே பிழைப்பாக போய்விட்டது.

பாஜக ஆட்சி வந்ததும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. இதுவரை 4 கூட்டம் நடத்தி முடித்துவிட்டார்கள். 3வது கூட்டத்தில், 9.19 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று கடுமையான உத்தரவு போடப்பட்டது. ஆனால் வந்தது என்னவோ 2 டிஎம்சி தண்ணீர் தான். 

பாக்கி வருவதற்குள் அடுத்த கூட்டத்திற்கான தேதி வந்துவிட்டது. அப்புறம் என்ன, மீண்டும் அனைவரும் கூடி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி ஆகியவற்றை சேர்ந்து 40.43 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று மீண்டும் உத்தரவு பிறக்கப்பட்டு, கூட்டம் சுபமாக முடிந்தது.  

வெளியே சென்ற வாத்தியார் மீண்டும் வகுப்புக்கு வரும் போது, லீடர் பேசியவர்கள் பெயர்கள் என்று பட்டியல் எழுதி சிலர் பெயருக்கு பின்னால் அதிகம், மிக அதிகம், மிக மிக அதிகம் என்று எழுதியிருப்பானே, அதற்கு ஆசிரியர் என்ன நடவடிக்கை எடுப்பாரோ அதே நடவடிக்கை தான் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கும் .

வருணபகவானுக்கே உத்தரவு போடலாமே சார்!

9.19 டிஎம்சியே தராத மாநிலம், 40.43 டிஎம்சி தரும் என்று நம்பி உத்தரவு இடும் ஆணையத்தின் அதிகாரிகளை என்னவென்று சொல்வது. வடிவேல் ஜோக்கில் கடன் கேட்ட கதையாக, அண்ணனுக்கு தானே உத்தரவு போடுகிறீர்கள் எப்படி 40 டிஎம்சி போதும் இன்னும் போடுங்க சார் என்று கர்நாடகா கேட்டாலும் கேட்கும்.

தமிழகத்திலோ, இதை நாம் கண்டித்தால் மத்திய அரசு கோபப்படுமோ என்ற பயம் அதிமுகவிற்கு, திமுகவிற்கு காங்கிரஸ் கட்சி கைவிட்டு விடுமோ என்ற அச்சம். இதனால் இந்த ஆண்டு காவிரி விஷயத்தில் கப் சிப். வழக்கம் போல குறுவை இந்த ஆண்டும் அவ்வளவுதான்.

பொதுவாக காவிரி பிரச்னையை தீர்க்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் எவ்வளவு எக்டேர் பாசனம் செய்தார்கள், இப்போது எவ்வளவு எக்டேர் பாசனம் செய்யப்படுகிறது என்பதை கணக்கிட வேண்டும். அதற்கு ஏற்ப தற்போது பெய்து வரும் மழையை கணக்கிட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் தர வேண்டும். அது எவ்வளவு ஏக்கர் பாசன வசதியை ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு மட்டும் தமிழகத்தில் சாகுபடி செய்ய விவசாயிகளை வற்புறுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

அதை விடுத்து, எதைப்பற்றியும் கவலைப்படாமல் இத்தனை டிஎம்சி தண்ணீர் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு போடுவது சம்பரதாயத்திற்கு மட்டும் பலன் தரும். இந்த முறை காவிரி மேலாண்மை ஆணயத்தின் உத்தரவில் நீட்டி முழக்கிவிட்டு கடைசியில் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை கவனித்தில் கொண்டு நீரை பிரித்துக் கொள்ளுங்கள் என்று முடித்து இருக்கிறது. 

கர்நாடகா அணைகளில் போதிய அல்லது உபரியாக தண்ணீர் இருந்தால் அந்த மாநிலம் தானே தண்ணீரை திறந்து விடப் போகிறது. அதற்கு வாரியம், ஆணையம் என எதுவும் தேவையில்லை. அப்படி இல்லாத சூழ்நிலையில் தண்ணீர் வினியோகத்திற்கு என்ன திட்டம் என்பது தான் கேள்வி.

வருணபகவானுக்கே உத்தரவு போடலாமே சார்!

விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுவது போல நாள் தோறும் அணையின் இருப்பை பார்த்து தண்ணீரை பகிர்ந்து கொண்டால் தான் நல்லது. அப்படி கர்நாடகா செய்யாத போது மேலாண்மை ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் அதற்கு இருக்க வேண்டும். அதை பெற்றுத்தர வேண்டிய கடமை தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களுக்கும் உள்ளது.

அதை செய்யாமல் குடம் இங்கே, குடிநீர் எங்கே என்று எதுகை மோகனையுடன் போராட்டம் மட்டுமே நடத்தினால், செப்டம்பர் மாதம் 50 டிஎம்சி, அக்டோபரில் 20 டிஎம்சி மழை.பெய்ய வேண்டும் என்று கூட, வருணபகவானுக்கே உத்தரவு போடுவார்கள். இப்போதைய நிலையில் கர்நாடகாவிற்கும், வருணபகவானுக்கும் உத்தரவு போடுவது ஒரே பலனைத்தான் தரும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP