எல்லாத்துலயும் சிங்கார சென்னை முதலிடம் தான்!

வேலை தேடும் இளைஞர் கூட்டம், நாட்டின் பொருளாதார தூணான ஐடி கூட்டம், நாட்டை சுரண்டும் ஊழல் கூட்டம் என பலவற்றிற்கு முதலிடமாக விளங்கும் சென்னை மாநகரம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு வெளிநாடுதான்!
 | 

எல்லாத்துலயும் சிங்கார சென்னை முதலிடம் தான்!

வேலை தேடும் இளைஞர் கூட்டம், நாட்டின் பொருளாதார தூணான ஐடி கூட்டம், நாட்டை சுரண்டும் ஊழல் கூட்டம் என பலவற்றிற்கு முதலிடமாக விளங்கும் சென்னை மாநகரம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு வெளிநாடுதான்!

‘சென்னை’ பெயரை சொல்லும்போதே ஒரு கெத்து வரும்.... வட சென்னையில் கிடைக்கும் அத்தோ தொடங்கி கானா பாடல் வரையிலும், தென் சென்னையில் வலம்வரும் 100 ரூபாயிக்கு கிடைக்கும் ஒரு கிலோ பிரியாணி முதல் ஸ்டைலான ஹைபையான லைஃப் ஸ்டைல் வரையிலும் அனைத்துமே சென்னையின் மணிமகுடம்தான்! தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னைக்கு 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் முதன்முதலில் காலடி எடுத்துவைத்தவுடனே சென்னை ஒரு முக்கிய நகரமாக வளர ஆரம்பித்துவிட்டது. சென்னைக்கு அழகு ‘மெரினா கடற்கரை’... உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்றாக உள்ளது. அதைவிட முதன்மையான பல இடங்களும் இங்குள்ளன.

* சென்னை கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகமாக இருப்பது “கோடம்பாக்கம்”.

* உலகின் முதல் பசுமை சட்டமன்றம் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்டது.

* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை, இங்குதான் கிண்டி தேசிய பூங்கா அமைந்துள்ளது.  

* சர்வதேச பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தில் சென்னை நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

* இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே முதன்முதலாக கட்டப்பட்ட நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றாகும். 

* தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் முதன்முதலில் அமைக்கப்பட்டது சென்னையில்தான்! 

* இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ராணுவத்தின் ரெஜிமென்ட் சென்னையில்தான் முதல் முதலில் அமைக்கப்பட்டது. 

* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில்தான் தொடங்கப்பட்டது. 

* ஆசியாவிலேயே முதல் கண் மருத்துவமனை (எக்மோர் ஐ ஹாஸ்பிட்டல்) எழுந்தது சென்னையில்தான். 

* இந்தியாவில் முதல் கமெர்ஷியல் வங்கி தொடங்கப்பட்டது சென்னையில்தான். 

* இந்தியாவில் முதன்முதலில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது சென்னையில்தான்.

* முதன்முறை நில அளவைக்காக தொடங்கப்பட்ட கல்லூரி சென்னையில்தான் தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் அதுவே பொறியியல் கல்லூரியாக உருமாறியது. 

* இந்தியாவிற்கே அடையாளத்தை ஏற்படுத்தியது சென்னைதான், அதாவது முதல் திரிகோண அளவையியல் பரங்கி மலையில்தான் நடைபெற்றது 

* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது சென்னை மாநகராட்சி தான்.

* இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன்தான்.

* இந்தியாவிலேயே முதல் கப்பல் துறைமுகம் கட்டப்பட்டது சென்னையில்தான். 

* நாட்டின் முதல் மருத்துவமனை பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டியது சென்னை அரசு பொது மருத்துவமனைதான். 

* நாட்டிலேயே முதல் அச்சடிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP