சூடு பிடிக்கும் கட்சிக் கொடிகள் விற்பனை !

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் வேகமாக சூடு பிடித்துள்ள நிலையில், கட்சிக் கொடிகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
 | 

சூடு பிடிக்கும் கட்சிக் கொடிகள் விற்பனை !

தேர்தல் காலம்  என்றாலே முக்கிய இடம் பிடிப்பது அரசியல் கட்சிகளின் சின்னங்களையும் கட்சி பெயர்களையும்  வெளிப்படுத்தும் வகையில்  அமைக்கப்படும்  கொடிகளேயாகும் .  தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பொருந்திய கொடிகள் பல வண்ணங்களில்  தயாரிக்கப்பட்படுகின்றன. 

சூடு பிடிக்கும் கட்சிக் கொடிகள் விற்பனை !

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொடிகள் தயாரித்தாலும், ஐவுளி உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தில் தான் கொடிகள் தயாரிக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.   சந்தையில் இத்தகைய கொடிகள்  வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வலையில்  குறைந்த விலையில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த பணிகளில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களை ஈடுபடுகின்றனர்.  

கொடிகள் தயாரிக்கும்போது, அந்தந்த கட்சிகளது வண்ணங்களுக்கேற்ப வண்ண வண்ண துணிகளை வெட்டி எடுக்கின்றனர்.  பின்னர்  மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் மூலம் தைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமாக தேர்தல் சமயங்களில் தயாரிக்கப்பட்டு வந்த கொடிகள் போன்று இல்லாமல் மேலும் புது புது டிசைன்களில்  பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. 

சூடு பிடிக்கும் கட்சிக் கொடிகள் விற்பனை !

கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில்  அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி  பாமக, தேமுதிக, தாமாக, கொங்கு இளைஞர் பேரவை, புதிய நீதி கட்சி  உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும்  திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக செயல்பட்டு தேர்தலை சந்திப்பதால் இத்தகைய கட்சிகளது கொடிகளை, அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.  இதில் குறிப்பாக  பிளாஸ்டிக்கினால் ஆன கட்சி கொடிகளை விட துணியினால் ஆன கொடிகளை பெருமளவு அரசியல் கட்சியினர் வாங்கி செல்கின்றனர். 

சூடு பிடிக்கும் கட்சிக் கொடிகள் விற்பனை !

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யபட்டுள்ளதால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் கொடிகளின் விற்பனையை விட, துணிகளில் செய்யப்படும் கொடிகளில் விற்பனை அமோகமாக உள்ளது என்றும், அவற்றை தயாரிக்கும் ஜவுளி துணி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு சிறிதளவு ஆறுதலை அளித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

வீட்டு வீடு மரம் வளர்க்க சொன்னாங்க. ஆனா மரத்துக்கு மரம் கொடிகள் கட்டப்படுகின்றனர். இதனாலும் கொடிகள் அதிகளவில் விற்பனை ஆகின்றன. 

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில்,  தேர்தல் பிரசாரம் வேகமாக சூடு பிடித்துள்ள நிலையில், கொடிகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP