பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும், நாற்று நடும் திருவிழாவும்...!

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது பேரூர் பட்டீசுவரர் கோவில். திருப்பேரூர் என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி பேரூர் என்றானது. ஆகையால் தற்போது பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என மக்களால் அழைக்கப்படுகிறது.
 | 

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும், நாற்று நடும் திருவிழாவும்...!

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது பேரூர் பட்டீசுவரர் கோவில். திருப்பேரூர் என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி பேரூர் என்றானது. ஆகையால் தற்போது பேரூர் பட்டீஸ்வரர் கோவில் என மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். கரிகால சோழனால் கட்டப்பட்டது. 

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடக்கலைக்கு பேரூரே முதல் உதாரணமாக விளங்குகிறது. கரிகாற்சோழன், விக்கிரமசோழன், போன்ற கொங்குச்சோழர்களின் கல்வெட்டுகள் இன்னமும் உள்ளன. சிற்பவளத்திலும், இலக்கிய வளத்திலும் பெருமை பெற்றுள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். பேரூர் கல்வெட்டுகள் மற்றும் கோவிலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் கற்பனை, இலக்கியச்சுவை, பொருட்சுவை, தத்துவக்கருத்து, வழிபாடு ஆகியவை உள்ளன. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். 

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும், நாற்று நடும் திருவிழாவும்...!

இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. பேரூர் கோவிலில் மொத்தம் 6 கோபுரங்கள் உள்ளன. வரலாற்று கால கணக்குப்படி பேரூர் ரோமானியர் காலத்திலேயே அந்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அக்காலத்திய நாணயங்களின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி, விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம்,  என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசரகளின் கொடி நாட்டிய இடம் என்றும் கூறப்படுகிறது.

கோவிலின் மேற்பரப்பில் வரைப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் சைவசமயத்தை தழைக்கச்செய்த 64 நாயன்மார்களை பற்றிய பாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள புகழ்பெற்ற கனகசபை மண்டபத்தில் கோமுனி, பட்டிமுனி ஆகிய இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜரின் வடிவம் உள்ளது.  ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலை சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. சைவ சமயச்சார்புள்ள இறைவடிவங்களின் எழில்மிகு வேலைப்பாடுகள், மனிதனின் சிந்தையை கவர்கிறது.  

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும், நாற்று நடும் திருவிழாவும்...!

இக்கோயிலில் பட்டி விநாயகர் சன்னிதியும்,  அரச மரத்தடியில்  சிவபெருமான்  சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு இக்கோவிலில் புளியமரம் மற்றும்  பனைமரம்  ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது. 

நாற்று நடும் திருவிழா:

திருப்பேரூர் வந்தடைந்த போது விவசாயக்குடிமகனாக அவதாரமெடுத்தார் சிவபெருமான். பின்னர் பெருமான் விவசாயியாகவும், உமாதேவி விவசாயப் பெண்ணாகவும் மாறி நாற்று நடப்போனதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த நாற்று நடு திருவிழா நடந்து கொண்டிருக்கையில் சுந்தரர் கோயிலுக்குப் போயிருக்கிறார். அப்போது சுந்தரர் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெருமானை தரிசித்து மகிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் , நொய்யல் நதியில் நீராடி மீண்டும் கோயிலுக்குத் திரும்பியிருக்கிறார் பெருமான்.  சிவபெருமான் யாரிடமும் சொல்லகூடாது என்று சொல்லியும், ஆனால் நந்தி தேவர் முழு கதையையும் சுந்தரரிடம் உளறிவிட்டார். 

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும், நாற்று நடும் திருவிழாவும்...!

இதனால் நந்தி பெருமான் சொல்லை மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டதாகவும், இதனால் நந்தி தேவரின் தாடை சற்று அழுந்து உள்ளதாக வரலாறு கூறப்படுகிறது. பிறகு நந்தி, மன்னிப்பு வேண்டித் தவமிருக்க,  சிவபெருமான் தமது  தாண்டவ தரிசனத்தை அவருக்கு அளித்திருக்கிறார். 

இப்படி பல சிறப்புகளோடு தமிழ் உழவர்கள் இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கும் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா தமிழர் திருவிழாவாகும். பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடும் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. பின்னர் உத்திரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடத்தப்படுகிறது. காஞ்சி நதிக்கரை இப்போது நொய்யல் நதிக்கரை என்று சொல்லப்படும் நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP