மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !

திருச்சி மாவட்டம், நீலியாம்பட்டி கிராமத்தை அடுத்து அமைந்துள்ளது தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்.மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் கோயில் உள்ளதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 | 

மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !

திருச்சி மாவட்டம், நீலியாம்பட்டி கிராமத்தை அடுத்து அமைந்துள்ளது  தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில். இலங்கையில் ராவணனுடன் நடந்த போரின்போது மூச்சு அடைத்து மயங்கி இலட்சுமணன் விழுந்தபோது, லட்சுமணனை காக்க அனுமன்  தூக்கிச் சென்றார். அப்போது சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டதாகவும்,  அந்த மகிழ்ச்சியில், மலையை ஆஞ்சநேயர் வீசியெறிந்ததாகவும், அது 7 துண்டுகளாகச் சிதறி விழுந்த ஒன்று இந்த தலைமலை என மக்களால் நம்பப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் கோயில் உள்ளதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !
மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் நிறைந்ததாக தலைமலை காணப்படுகிறது. சுமார் 3,200 அடி உயரம் உடைய தலைமலையில்  சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்து ஏறக்குறைய ஏழு கிமீ தொலைவுக்கு நடந்து மலை உச்சிக்குச் செல்ல முடியும். கீழிருந்து வரும் அனைத்துப் பாதைகளும் தலைமலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கீழே, குதிரை மீது கம்பீரமாக அருள்பாலிக்கும் கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன. 
மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !
நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில் உள்ள  இறைவன், தானாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியவராக கருதப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் உள்ளனர். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். 
மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !
தலைமலையில் தினமும் ஏறி இறங்க முடியாது என்பதால் இங்கு பணியாற்றும் பூசாரிகள் சனிகிழமை பக்தர்களின் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் வெள்ளிகிழமை மாலை நேரத்தில் மலைக்கு வந்துவிட்டு, திங்கள் கிழமை காலையில் தான் அடிவாரத்திற்க்கு செல்கின்றனர். தலைமலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுக்கு சுமார் 4 அகலமே உள்ள சுவரின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து வலம்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்தச் செயலை தலைமலை கிரிவலம் என்று கூறுகின்றனர். கோவில் நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்தும் பக்தர்கள் வலம் வருகின்றனர். கோவிலின் மலைஉச்சிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபூமி, நீலா தேவி சமேத லட்சுமிநாராயண சுவாமி பெருமாள் கோவிலில் வழிபட்டு செல்கின்றனர். 
மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !
சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பக்தர்கள் கரடுமுரடான மலைப்பாதையை கடந்து தான் மலை உச்சிக்குச் சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.  தலைமை சங்சீவிராய மலையையை ஆன்மிக சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் என இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிக்குச் சரியான பாதை வசதி கிடையாது.  தலைமலை பெருமாள் கோயில் வரலாறு குறித்து இது வரை சரியாக தெரியவில்லை. ஆனால், சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மலை என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
மூலிகை நிரம்பிய தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் !
அதேபோல, மலையின் உச்சிக் கோயிலில் கிரிவலம் செல்வதும் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். சனிக்கிழமைகள் மற்றும் தை திருவோணம், ஆயுத பூஜை, புரட்டாசி, சித்திரைப் பிறப்பு ஆகிய நாட்களில் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் என பசுமைப் போர்வை போர்த்தியபடி உள்ள  மலையை வனத்துறையும், அறநிலையத் துறையும், சேர்ந்து பாராமரிக்க வேண்டும் என்பதே இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP