உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகணும்

ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற சமுதாயத்தில், பாதுகாப்பான உடலுறவு குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதோ, அப்படிதான் இது போன்ற செயலிகளை பயன்படுத்தாதீர்கள் என்று கூறுவதைவிட, பின்விளைவுகளையும் அறிந்து கொண்டு களம் இறங்குங்கள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.
 | 

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகணும்

தாயின் முந்தானைக்குள் மறைந்து கொள்ளும் சிறு குழந்தை தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று கனவு காண்பது போலவே நவீன உலகின் பெண்கள் செயல்படுகிறார்கள். தங்கள் அந்தரங்கத்தை அப்படியே வீடியோ எடுத்து அம்பலத்தில் வெளியிடுகிறார்கள்.

நாம எடுத்தது தான் யாருக்கும் தெரியாதே... நம்ம ஊர்காரர்கள் என்ன பார்க்கவா போகிறார்கள்? என்ற எண்ணம்தான் பெண்களை வாட்ஸ் அப்டிக் டாக் போன்ற செயலிகளிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் சிக்க வைக்கிறது. மேலும் வெட்கம், தயக்கம், கேலி செய்துவிடுவார்களோ என்ற பயம் ஆகியவற்றால் தங்கள் திறமைகளை மனதின் உள்ளேயே போட்டு அடக்கிக் கொண்ட பெண்கள்,  சமூக ஊடகங்களை தங்களுக்கு கிடைத்த மேடையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற சமுதாயத்தில், பாதுகாப்பான உடலுறவு குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதோ, அப்படிதான் இது போன்ற செயலிகளை பயன்படுத்தாதீர்கள் என்று கூறுவதைவிட, பின்விளைவுகளையும் அறிந்து கொண்டு களம் இறங்குங்கள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகணும்

நெருப்பு சுடும் என்று அனைவரும் அறிந்து கொண்டதால் அதை பாதுகாப்பாக பயன்படுத்துகிறோம். அதேபோலதான் செல்ஃபோனும். அது ஆபத்தை விளைவுக்கும் என்று தெரிந்து கொண்டால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும், பிரச்னை ஏற்பட்டால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

செல்போனில் நாகரீகமாக படம் எடுங்கள்அந்தரங்கப் படங்கள் எடுத்தீர்கள் என்றால், அதை அழித்துவிட்டால் கூட மீண்டும் எடுக்க முடியும். நீங்கள் சமூக வலைதளத்தில் பரவவிடும் முன்பு, உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் குறிப்பாக கணவர், மனைவியிடம் எடுத்த விஷயத்தை முழுமையாக காட்டி விடுங்கள். உங்கள் பிள்ளைகள் அனுப்ப விரும்புவதையும் காட்ட சொல்லி அப்படியே அனுமதியுங்கள். நீங்கள் கருத்து கூறினால்தான் அடுத்த முறை உங்களிடம் இருந்து மறைக்க தோன்றும்.

உங்கள் முகத்தை மட்டும் மாற்றி வேறு ஏதாவது மோசடியில் ஈடுபட வழியிருக்கிறது. அதனால் படங்களை வெட்டி எடுக்கும் வகையில் போஸ் கொடுக்காதீர்கள். உதாரணமாக, சில புத்திசாலிகள் எப்போதும் விஐபிக்கு பின்னால் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். யாரும் அந்த புத்திசாலியின் தலையை நினைத்தாலும் வெட்டி எடுக்க முடியாது. அதேபோல போஸ் கொடுத்தால் யார் போட்டோஷாப் வேலை செய்தாலும் கண்டுபிடித்துவிட முடியும்.

நீங்கள் எங்கிருந்து எதை செய்தாலும், தேவைப்பட்டால் கண்டுபிடித்துவிட முடியும். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் கருத்து பரப்பியவர், சிங்கப்பூரில் வாழ்வதை அறிந்து அவரை வலுக்கட்டாயமாக வரவழைத்து கைது செய்தனர். இதே வழக்கில் சுமார் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அனைவரும் தங்கள் பெயர், முகவரியை கொடுக்காமல் காவல் துறையினர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலுார் பாலியல் விவகாரத்திலும் வக்கீல் அருள், தன் ஃபேஸ்புக் தோழி மூலமாக போலி ஆடியோ தயார் செய்து அதை பத்திரிக்கையாளர்களிடம் போட்டு காட்டி. பிரச்னையை துாண்டியதை போலீஸார் கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

ஒரு இஸ்லாமிய பேரிளம் பெண் சமூக ஊடகத்தில் எதையோ பதிவிட, அதில் கமெண்ட் செய்தவர், நீ யெல்லாம் இஸ்லாமிய பெண்ணா, உன் கணவர் ஆம்பிளையா என கேட்க, ரோஷப்பட்ட அந்த பெண்ணின் கணவர் தலாக் செய்யும் அளவிற்கு போய்விட்டார். இதுபோன்ற சம்பவங்களும் நடைபெறலாம்.

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகணும்

.பொதுவாக சமூக ஊடகங்கள் என்றில்லை. ஆண், பெண் என்றாலே ஹர்மோன்கள் துாண்டுதல்கள் தான் நட்பு தொடங்குவதற்கு காரணம். அதில் வெற்றியடையும் வரை பெண்ணை தேவதை என்று புகழ் மழை பொழிவார்கள். ஆனால் கணவன் அல்லது மனைவி அப்படி இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

இதையெல்லாம் மீறி சமூக ஊடகத்தில் பரவவிட்ட ஒரு விஷயம் ஏதேனும் ஒரு பிரச்னையை ஏற்படுத்தி, அது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தானாலும் தனித்து வாழும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்இப்படியெல்லாம் தெரியாமல் சமூக ஊடகத்தில் சதிராடினால், அது சாவு மணி அடித்துவிடும் என்பது நிச்சயம்.

ஃபேஸ்புக்கில் தாங்கள் பதிவிடும் கருத்துக்கள் அல்லது பதிவேற்றம் செய்யும் புகைப்படம், விடியோக்களால் சிலர் சிக்கலில் சிக்கக்கொள்வதும் உண்டு. அதற்கான ஓர் உதாரணம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் லிங்க்....

https://m.facebook.com/story.php?story_fbid=133878984428964&id=100034205887689&sfnsn=mo

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP