கோவைக்கு வந்தாச்சு ரோபோ ஹோட்டல்!

கோவையில் உணவு பரிமாறும் ரோபோக்கள்
 | 

கோவைக்கு வந்தாச்சு ரோபோ ஹோட்டல்!

கோவையில் ரோபோட் தீம்  உணவகம் புதிதாக நேற்று  திறக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் படங்களில் பார்த்தது போன்ற ரோபோக்கள், உணவகத்தில் உணவு கொண்டு வந்து கொடுக்கும் காட்சியை அவிநாசி சாலையில் அமைந்திருக்கும் உணவகத்தில் பார்க்கமுடிகிறது. இந்த ரோபோ தீம் உணவகம் பல மாதங்கள் முன்பே சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே பிரபலமான விமான தீம் உணவகத்தை ஆரம்பித்த இளைஞர்களே இதையும் ஆரம்பித்துள்ளனர்.  வழக்கமான உணவகங்களை காட்டிலும பலரது கவனத்தை இது ஈர்த்து வருகிறது என்றால் அதற்கு காரணம் இங்கு சர்வர்கள் ரோபோக்கள் தான். உணவகத்தில் வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளை சொன்னால், ரோபோக்கள் அந்த உணவு வகைகளை கொண்டு வந்து கொடுக்கும். கோவையை சேர்ந்த 5 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து  இந்த உணவகத்தை திறந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களை வித்தியாசமாக கவரும் வகையில் ரோபோ சர்வீஸ் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். உணவை கிச்சனில் இருந்து வாடிக்கையாளரின் டேபிளுக்கு கொண்டு வரும் வழியில் மனிதர்கள் யாரேனும் வழிமறைத்து நின்றாலோ அதை இந்த ரோபோக்கள் கண்டுபிடித்து வழிவிடுமாறு சொல்லும். சீன நாட்டிற்கு பயணம் சென்ற போது அங்கு இருக்கும் ஒரு உணவகத்தில் ரோபோக்கள் உணவு கொண்டு வருவதை பார்த்து ஈர்க்கப்பட்டு  , இதை இந்தியாவில் ஆரம்பிக்க வேண்டும் என்பதே இளைஞர் கார்த்திக்கின் ஆசை.

சென்னையில் மட்டுமே இந்த ரோபோ உணவகத்தை ஆரம்பித்த இவர்களின் வாடிக்கையாளர்கள் கோவையில் இதே உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதினால் நேற்று கோவை அவிநாசி சாலையில் ரோபோ உணவகம் திறக்கப்பட்டது. இந்த ரோபோ உணவகத்தில் சைனீஸ், தாய் மற்றும் இந்திய உணவு கிடைக்கும். உணவு கொண்டு வந்து கொடுக்க 8 ரோபோக்கள் உள்ளதாம். ஒவ்வொரு ரோபோக்களின் மதிப்பு 8 லட்ச ரூபாய் ஆகும். இந்த உணவகத்தில் இருக்கும் பல்வேறு உணவுகளை பற்றி சொல்வதற்கென சர்வர்கள் உள்ளன. கோவை மக்களுக்கு இந்த ரோபோ உணவகம் வித்தியாசமான புதுவித அனுபவமே.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP