ரஜினி ஓர் கண்ணாடி

தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் சோ. மிகப் பெரிய அரசியல் தலைவர் முதல் ஒன்றும் தெரியாத பாமரன் வரை சோவை ஏதோ ஒரு காலகட்டத்தில் விமர்சனம் செய்யாதவர்கள் இருக்க முடியாது. இதற்கு அடுத்தபடியாக இருப்பவர் ரஜினி.
 | 

ரஜினி  ஓர் கண்ணாடி

பாரதி பித்தன்

தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் சோ. மிகப் பெரிய அரசியல் தலைவர் முதல் ஒன்றும் தெரியாத பாமரன் வரை சோவை ஏதோ ஒரு காலகட்டத்தில் விமர்சனம் செய்யாதவர்கள் இருக்க முடியாது. இதற்கு அடுத்தபடியாக இருப்பவர் ரஜினி. 

மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவர் ரஜினிகாந்த். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவரால் கூட காப்பாற்ற முடியாது என்று கருத்து சொன்னதும் அது திமுகவிற்கு ஆதரவாக இருந்தாதல் ஊதி பெரிசு படுத்தி அந்த தேர்தல் முடிவையே மாற்றியது.  

அதன் பின்னர் அவர் கருத்துக்கள் அனைத்துமே இருதரப்பாக பிரிந்து விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் எதைப்பற்றியும் ரஜினி  கவலைப்பாடாமல் தன் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியக் கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யா சில கருத்துக்ளை வெளியிட்டார். பின்னர் ரஜினி அதனை வரவேற்றார். உடனே தமிழகமே அவரது கருத்துக்களை வரவேற்றது. அந்த கருத்துக்களை எதிர்த்து கருத்து சொன்னவர்கள் பெரும்பாலும் மத்திய அரசை ஆதரித்தவர்கள்.

ரஜினி  ஓர் கண்ணாடி

ஒரு சில நாட்களிலேயே சூழ்நிலை மாறியது. இந்த நாட்டை விரும்பும் அனைத்து மனிதர்களும் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் என்று இணையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். சினிமாவில் மட்டுமே காஷ்மீர் ஓண்டர் புல் காஷ்மீர் என்று அறிந்தவர்கள் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இந்த கருத்தை ஏற்றால் இங்கு இஸ்லாமியர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று அச்சப்பட்டுக் கொண்டு இருந்தனர். 

நேருவின் முடிவுகளை சரி செய்ய வேண்டிய திறன், சூழ்நிலை இந்திராவிற்கு அமைந்தது. ஆனால் அவர் இந்த பிரச்னையை ஏனோ தொடவே இல்லை. அதே நேரத்தில் படேல் இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்த போது, உங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்று கொடுத்த உறுதி மொழியை மாற்றினார். ஜமீந்தார் முறை ஒழிப்பு என்ற பெயரில் அந்த உரிமைகளை பறித்தார் இந்திரா காந்தி. மன்னர் என்று வணங்கப்பட்டவர் லேத்துபட்டறை நடத்தினார்.

மைசூர் மன்னர் தசரா விழாவில் பாரம்பரியமாக மக்களுக்கு கொடுத்த இனாம் கொடுக்க வழியில்லாமல் மக்களே போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து நிறுத்திக் கொண்டனர். பல ஜமீன்தார்களின் அரண்மனை இன்று புல் பூண்டு முளைத்து விட்டது. பல ஜமீன்தார்கள் இன்றும் கூட வயது முதிர்ந்த நிலையில் வாழ்கிறார். இப்போது அவர்களின் 2ம் தலைமுறை நம்மைப் போலவே நம் கூடவே இவர்கள் ஜமீன்தார்கள் என்று வெளியே தெரியாமல் வாழ்ந்து வருகிறார். இவர்களை பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட வில்லை. 

ஆனால் தற்காலிகம் என்று குறிப்பிட்டு வழங்கிய சலுகை 70 ஆண்டுகள் நீடித்த பிறகு மாற்றப்படும் போது காட்டுக் கூச்சல் இடுகிறார்கள். 
ஜனசங்கம் தோன்றிய போதே காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கப்படும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி இதற்காகவே உயிர்நீத்தார். இப்படி பாஜகவின் உயிர் நாடியாக இருந்த பிரச்னைக்கு மோடியும், அமித்ஷாவும் தீர்வு கண்டு இருக்கிறார். இதனால் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த எண்ணத்தை ரஜினி துணை குடியரசுத் தலைவர் வெங்கய நாயுடுவின் நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தினார். மோடி, அமித்ஷாவை அவர் அர்ஜூனன், கிருஷ்ணன் என்று உருவப்படுத்தி இருந்தார். இது நம்மவர்களுக்கு எதிராக இருந்ததால் ரஜினி கெட்டவராக மாறிவிட்டார். ரஜினி பாஜகவிற்கு ஆதரவாளர் என்றெல்லாம் திட்ட தொடங்கி விட்டனர். 

சூரியாவிவகாரத்தில் ரஜினி செய்தது சரி, மோடி விவகாரத்தில் ரஜினி பாஜக அடிவருடி. இப்படி இரட்டை வேடம் போடும் ஒரு சில அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்படி ரஜினியை அடையாளப்படுத்துகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் ரஜினி கருத்துக்களை விட அதை சொல்லி தாங்கள் களத்தில் இருப்பதை அடையாளம் காட்ட வேண்டும் என்ற முயற்சிதான் இது.

இவர்கள் முயற்சியை பார்த்தால் ரஜினி தெரியவில்லை, ரஜினி என்ற கண்ணாடியில் இவர்கள் முகம் தான் தெரிகிறது. இவர்களில் தூக்கி வீச வேண்டியர்கள் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ரஜினிக்கு என் முதல்வாழ்த்து. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP