ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை சர்ச்சை... மீண்டும் தொடக்கத்தில் இருந்தா?

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, அவர்கள் விடுதலையாகி விட்டால்; நாங்கள் தான் காரணம் என்று தோள்தட்டிக் கொள்ளலாம் என்பது தான் அந்த, 7 பேர் விடுதலைக்கு அனைவரும் குதிப்பதற்கு காரணம். அதே போல இவர்களை விடுதலை செய்தால், அதனால் ஏதேனும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதே விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் நடவடிக்கைக்கு காரணம்
 | 

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை சர்ச்சை... மீண்டும் தொடக்கத்தில் இருந்தா?

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. படுகொலை செய்யப்பட்டவர், நம் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பபதையும், அந்த வழக்கில், இவர்கள் அனைவரும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு செய்யப்பட்டவர்கள் என்பதையெல்லாம் மீறி, அவர்களை விடுதலை செய்தே ஆக வேண்டும் என்ற  கோஷங்கள் மீண்டும் பலமாக எழத் துவங்கியுள்ளன.  

மத்திய அரசு, இவர்களை விடுக்க முடியாது என்று மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றமாே, குற்றவாளிகளை கவர்னரை தொடர்பு கொண்டு பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என்று வழக்கை முடித்துவைத்த நிலையில், அதையெல்லாம் மீறி உணர்வகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கை நாம் அணுகுகிறோம். 

அதற்கு காரணம் நேரடியாக இந்த சம்பவத்தால் நமக்கு எந்த இழப்பம் ஏற்படவில்லை என்ற நினைப்புதான். இந்த 7 பேரின் விடுதலை, தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி, பல சம்பவங்களுக்கு இதுவே அடிப்படையாக மாறிவிட்டால், அதற்கு என்ன முடிவு செய்யப் போகிறோம்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு, சினேகம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. அது, மக்கள் பணத்தை மோசடி செய்தது. அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்ட போது அளித்த பேட்டியில், இதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றியவர்களுக்கு, என்ன தண்டனை வழங்கப்பட்டது என்று  பார்த்தேன். பெரிதாக எதுவும் இல்லை. இதனால் நான் ஒரு சீட்டு போட்டு அந்த பணத்தில் இந்த நிறுவனத்தை தொடங்கினேன் என்றார். 

இதே போன்றது தான், ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையும். இது வரையில் அரசியல் தலைவர்களை திட்டியே பழக்கப்பட்ட மக்கள், தற்போது அவர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு, சிதம்பரம், கெஜ்ரிவால் போன்றவர்களுக்கு நடந்த சம்பவங்களே உதாரணம். 

இது வலிமை பெற்று, எதிர்காலத்தில் ஏதாவது தலைவர் உயிர் பறிக்கப்படுமானால், அந்த குற்றவாளிகளுக்கும் இதே போன்று தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கையாக இருக்குமா?

சென்னை சரணவபவன் முதலாளி, அடுத்தவன் பொண்டாடி மீது ஆசைப்பட்டு, அவள் புருஷனை கொலை செய்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 அவர் நேரடியாக கத்தியை துாக்கி கொண்டு களம் இறங்கவில்லை. ஆனால், நட்பு வட்டத்தில் பேசும் போது, அவள் புருஷனை கொன்றாவது அவளை திருமணம் செய்வேன் என்று கூறினார். அவரது வார்த்தைகளே அவருக்கு எதிரான சாட்சியாக நின்று, இன்று அவர் சிறை செல்ல காரணம் ஆகிவிட்டது. அவர் கொலை செய்தாரா, இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து, அந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டாகி விட்டது. நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். 
கண்ணுக்கு தெரிந்து பல தமிழர்கள் அவரால் வாழ்கிறார்கள். இதனால் அண்ணாச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சல் இடலாமா.


இது போலத்தான், பேரறிவாளன் நேரடியாக கொலை செய்தாரா இல்லையா என்பது முக்கியமல்ல.அவர் அறியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்தாலும், அது எதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்த இயக்கத்திற்கு பயன்படுள்ளது என்பதை கருத்தில் கொண்டே, வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய அமைப்புகளிடம் பேட்டி எடுத்தால், கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களுக்கு பல காரணங்களை அடுக்குவார்கள். அதில் தொடர்புடையவர்களை விடுவிக்க கூட போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவர்கள் தவிர, ஜாமீன் எடுக்க முடியாமல், விசாரணைக்கு கூட வராமல் எத்தனையோ பேர் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் வராத அக்கரை, ராஜீவ் கொலை குற்றவாளிகள் மீது மட்டும் வருவற்கு காரணம், அவர்கள் மீது உள்ள அக்கரை அல்ல ஓட்டுகள். 

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, அவர்கள் விடுதலையாகி விட்டால்; நாங்கள் தான் காரணம் என்று தோள்தட்டிக் கொள்ளலாம் என்பது தான் அந்த, 7 பேர் விடுதலைக்கு அனைவரும் குதிப்பதற்கு காரணம். அதே போல இவர்களை விடுதலை செய்தால், அதனால் ஏதேனும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதே விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் நடவடிக்கைக்கு காரணம்

இந்த அரசியலில் பாவம் அந்த குற்றவாளிகள் சிக்கி தவிக்கிறார்கள். நாம் பேசாமல் இருந்தால் போதும் அவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொண்டு மவுனமாக வாழ்வார்கள். உண்மையில் தமிழர்கள், குறிப்பாக இலங்கை தமிழர்கள் மீது அக்கரை இருந்தால் இடைத் தங்கல் முகாமில் இருப்பவர்களை நல்ல முறையில் பார்த்துக்கொண்டால் போதும். 

அதை யாரும் செய்யமாட்டோம். அதற்கு பதிலாக, வெற்றுக்கூச்சல் போடுவோம். எப்படியாவது பெயர் வாங்கிவிட வேண்டும். அதன் மூலம் ஓட்டுகளை பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பது தானே நம் அரசியல் தலைவர்களின் ஆகப் பெரிய லட்சியமாக உள்ளது!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP