மழை தரும் மழை மலை மாதா ! 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது மழை மலை மாதா திருத்தலம். இவை ஒரு பசுமையான மலைக்குன்றில் அமைந்துள்ளது. இத்திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது.
 | 

மழை தரும் மழை மலை மாதா ! 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது மழை மலை மாதா திருத்தலம். இவை ஒரு  பசுமையான  மலைக்குன்றில் அமைந்துள்ளது.  இத்திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. 

ரோமில் இரண்டாம் வத்திகான்  சங்கம்  தொடங்கப்பட்ட  அதே நாள், அதே நேரத்தில் அருட்தந்தை புஷ்பம் அடிகளார் நல்லாயன் குன்று என அழைக்கப்படும் இந்த மலை மீது ஒரு சிலுவையை நட்டு வழிபட்டார். அன்று முதல் இந்த மலை திருத்தலமாக உருவெடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. 1960 க்கும் 1970க்கும் இடையிலான காலம் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தது. இந்த காலக்கட்டத்தில்  வீசியடித்த புயலில் பாம்பன் பாலம், அதன் மீது பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு ரெயிலும் கடலில் அடித்து செல்லப்பட்டது.  இந்த புயல் காரணமாக கடல் கொந்தளித்து கரையேறி தனுஷ்கோடி கடலில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதே போல், 1966ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதத்தை  விளைவித்தது.
மழை தரும் மழை மலை மாதா ! 
இந்த திருத்தலம் பிரபலமடைவதற்கு பெருமழை பெய்த ஒரு சம்பவம் காரணமாக கூறப்படுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி நிலவியது. குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான காலகட்டங்கள்.  வறட்சியை மையமாக வைத்து மழை வேண்டி, அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரி  மாதாவின் திருவுருவத்தை ஒரு தேரில் வைத்து  ஜெபித்தவாறு அச்சிறுபாக்கம் பங்கு ஆலத்தை அடைந்தபோது,  மூன்று ஆண்டுகளாக பெரும் வறட்சியை சந்தித்த  அந்த பகுதியில் பெரும் மழை பெய்ததாகவும், இதனால் அப்பகுதி மக்களின் மனம் குளிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மழை நின்ற பின் மேரி மாதாவின் திரு உருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று மலையின் நடுவில் வைத்து,  மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு  மழை மலை மாதா  என்று பெயரிட்டப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 
மழை தரும் மழை மலை மாதா ! 
மக்கள் அன்றிலிருந்து மேரி மாதாவை வழிபட ஆரம்பித்தனர்.  40அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலுவை வைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மலைக்கு ஏறிச்செல்ல படிகட்டுகள் அமைக்கப்பட்டன. இந்த மலையில் அழகிய தேவாலயம் கட்டப்பட்டு அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் முதல் நாளில், உலகம் முழுவதும் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சில தேவலாயங்களுள் இதுவும் ஒன்று என்பது என்றும் கூறப்படுகிறது.
மழை தரும் மழை மலை மாதா ! 
கிறிஸ்தவ தேவாலயங்களில், தினந்தோறும் அன்னதானம் வழங்கும் ஒரே தேவாலயம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா திருத்தலமாகும்.  இங்கு பல்வேறு  நலத்திட்ட உதவிகளும் சமூகப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  திருவிழாக்காலங்களில் ஏழைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு திருமாங்கல்யம் நன்கொடையாகவும்  அளிக்கப்படுகிறது. இங்கு பல மதத்தை சார்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். அன்னையின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக  மாதந்தோறும் மலையருள்  என்ற மாத இதழும் வெளியிடப்படுகிறது. 
மழை தரும் மழை மலை மாதா ! 
நம்பிக்கையோடு அன்னையிடம் வேண்டினால் வெகுநாட்களாக திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும்  அளிக்கப்படுகிறது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP