தவிக்க விடும்  தண்ணீர் அரசியல்!

காமராஜர் முதல்வராக இருந்த போது தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரள முதல்வர் இஎம்எஸ் நம்பூதிரிபாடு உடன் தொடர்பு கொண்டு ஒற்றை போனில் முடிவுக்கு கொண்டு வந்தார். முதல்வர் கருணாநிதி தன் பகுத்தறிவு கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு சாய்பாபாவுடன் இணைந்து சென்னைக்கு கிருஷ்ணாவில் தண்ணீர் வரவைத்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு தற்போதுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி காவிரியில் 3 டிஎம்சி தண்ணீர் பெற்றுவந்தார்.
 | 

தவிக்க விடும்  தண்ணீர் அரசியல்!


கடந்த ஆண்டு கஜா புயலால் பாதித்த பகுதிகள், தற்போது காய்ந்து கிடக்கின்றன. சென்னைக்குள் படகு ஓட்டி சென்ற பகுதிகளில் எல்லாம் குடங்களின் அணி வகுப்பு. கைக்கெட்டிய துாரத்தில் கடல் இருந்தாலும், நல்ல தண்ணீர் நகி, நகி என்று நக்கி குடிக்க வேண்டிய சூழ்நிலை. 

அரசு, மக்கள் இணைந்து நடத்திய வெறியாட்டத்திற்கு இயற்கை பதில் கொடுக்கிறது. சமீபத்தில் சமூக ஊடகத்தில் வெளியான ஒரு வீடியோவில் சென்னையில் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு லாரி தண்ணீருக்காக குடங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவற்றை நிரப்ப பல லாரி தண்ணீர் தேவை.

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது அணிவகுத்த தொண்டர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். தண்ணீர் கிடைத்த போது அதனை சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். நகர் பகுதிகளில் நெருக்கமான வீடுகள் என்பதால் தண்ணீர் பூமியில் இறங்க வழியில்லை. அகல அகலமான சாலைகள், அவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்ததால் சாலையில் விழும் தண்ணீர் முழுவதும் வீணாக கால்வாயில் ஓடி சில நிமிடங்களில் காணாமல் போய்விடுகின்றன.

தவிக்க விடும்  தண்ணீர் அரசியல்!

இந்த சூழ்நிலையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தாதுவருஷத்து பஞ்சம் என்று வரலாறு குறிப்பிடுவது போல இந்த வருஷத்து பஞ்சமும் இருக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு பிரச்னையை சமாளிக்கவே முயல்கிறது. இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வு அண்டை மாநிலங்களை நாடி தண்ணீர் பெறுவது தான்.

காமராஜர் முதல்வராக இருந்த போது தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரள முதல்வர் இஎம்எஸ் நம்பூதிரிபாடு உடன் தொடர்பு கொண்டு ஒற்றை போனில் முடிவுக்கு கொண்டு வந்தார். முதல்வர் கருணாநிதி தன் பகுத்தறிவு கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு சாய்பாபாவுடன் இணைந்து சென்னைக்கு கிருஷ்ணாவில் தண்ணீர் வரவைத்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு தற்போதுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி காவிரியில் 3 டிஎம்சி தண்ணீர் பெற்றுவந்தார்.

இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட தலைவர்களின் திறமையை, அவர்கள் மீது மற்ற மாநிலத் தலைவர்கள் வைத்துள்ள மரியாதையை உணர்த்தும் சம்பவங்கள். இப்போதும் கூட சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை போக்க 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர கேரள அரசு முன்வந்தது. ஆனால் ரயில்வே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற காரணம் காட்டி தமிழக அரசு தண்ணீரைப் பெற மறுத்துவிட்டதாக தகவல் பரவி உள்ளது. இதை அமைச்சர் வேலுமணி மறுத்துள்ளார். மேலும் நாள் தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்தால் தமிழகத்திற்கு பலன் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தவிக்க விடும்  தண்ணீர் அரசியல்!

தமிழக அரசு தண்ணீர் பெற மறுத்தது என்றால் அது வேதனைக்குரியது. ரயில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் காரணம் என்றால் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதை மொத்தமாக ரத்து செய்ய வலியுறுத்தலாம். அல்லது சலுகை கேட்டு பெறலாம். அதைவிடுத்து தண்ணீரே வேண்டாம் என்பது நல்ல முடிவு இல்லை. அந்த அளவிற்கு நிலைமையை சமாளிக்க மாநில அரசிடம் வலுவான திட்டம் இல்லை.

கேரளாவின் இந்த உதவி பாராட்டி வரவேற்க தக்கது என்றால் கூட அந்த மாநில அரசு இதில் காட்டும் மனிதாபிமானத்தை முல்லை பெரியாறு விவகாரத்தில் காட்டினால் தமிழகத்தில் 7 அல்லது 8 மாவட்டங்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து விட முடியும். அதற்கு முன்வராமல் டோக்கன் அட்வான்ஸ் போல ஒரு முறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதுடன் பிரச்னைக்கு முடிவு கட்ட நினைப்பது, நீங்கள் கஷ்டப்பட்ட போது நாங்க உதவினோமோ, இப்போ எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று பஞ்சப்பாட்டு பாட தான் உதவி செய்யும்.

எது எப்படியோ மத்திய அரசு தண்ணீரை, ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளை பொதுவுடமையாக மாற்றி தேவையான மாநிலங்களில் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க உதவி செய்யும். இதை செய்ய வேணடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP