குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் !

திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கிற அற்புத திருத்தலம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
 | 

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் !

சிவகங்கை  மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கிற அற்புத திருத்தலம். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் !

மலையை குடைந்து சுமார் 2 மீட்டர் உயரமுள்ள இந்த கற்பக விநாயகர், பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவில் மகேந்திரவர்ம பல்லவ மன்னன்  காலத்திய கோவிலாக இருக்கும் என்றும் சில வரலாற்று நூல்கள் கூறுகின்றது.  கேட்ட வரம் அருளும் இந்த கற்பக விநாயகருக்கு தேசிக விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள். குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி கோவில். சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்தாக இருக்கும் என கருதப்படுகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் !

பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் சொல்லக்கூடியது. ஆனால், எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. கல்வெட்டுகள் மூலம் இத்தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது  என்று வரலாற்று குறிப்பில் கூறப்படுகிறது.  தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் என்று சொன்னால் அது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தலம்தான். 

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் !

விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.  

விநாயகர் சதுர்த்தியன்று 16 படி அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களைக் கொண்டு ராட்சத கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் செய்த பிறகு, சதுர்த்தி விரதம் இருந்த பக்தர்களுக்கு அந்தக் கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது.  விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம், திருவீதி உலா, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள்  விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP