பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மிக பெரிய பழமையான பெருமாள் கோவில் என்று சொல்லப்படுகிறது.
 | 

பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மிக பெரிய பழமையான பெருமாள் கோவில் என்று சொல்லப்படுகிறது

ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான்.பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். ஒருநாள் தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணை கூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை நியமிக்கும் படி கூறினார்.  தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து வைத்தார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

இக்கோவில்  திராவிடக் கட்டடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாகவும்,  பின்னர்  விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.  இக்கோயில் வளாகம்  ஐந்து  ஏக்கர் பரப்பளவில் உள்ளது.  ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக நம்பப்படுகிறது.  தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் மிக முக்கியமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.  இக்கோவில் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு  நிர்வகிக்கப்படுகிறது.

பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

கட்டடக்கலை
இக்கோயிலின் ராஜ ராஜகோபுரமானது  உயரம் குறைந்து கோபுரம்  மொட்டை வடிவில் காணப்படுகிறது.  மேலும் கோயிலானது உயரமான கருங்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள ரங்கநாதபெருமாள் உருவமானது  சயன கோலத்தில் 29 அடி நீளத்தில் கிரானைட் கல்லால் செய்யப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக  காட்சியளிக்கிறார்.  ஸ்ரீதேவியும், பூதேவியும் இத்தலத்தில் கால்பகுதியில்  கருடன்     வணங்கிய கோலத்திலும் ,கருவறை முன்பு ஆழ்வார் மண்டபமும் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியாக ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுகால தானிய சேமிப்பு கொள்கலன் (களஞ்சியம்) உள்ளது. இந்தக் களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது போல உள்ளது. இது கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தானியங்களை சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது.     

பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

திருவிழாக்கள்:
இக்கோயிலில் வைணவர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடி பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக முதன்மையான கோவில் என சொல்லப்படுகிறது. இக்கோவில் ஸ்ரீரங்கம்  ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் கோவில் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது.

பெருமாள் கோவில்கள் மிகப் பெரிய, பழமையானது... எது தெரியுமா?

இக்கோவில் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு, செயல் பெயர் அளவில் மட்டுமே உள்ளது. இன்றும் புதர் மண்டிய வண்ணம் பராமரிப்பு இன்றி ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் இருப்பது பெருமாள் பக்தர்களை மனம் நோகச் செய்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP