பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து ஐந்து கி.மீட்டர் தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது தான் திற்பரப்பு நீர்வீழ்ச்சி. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
 | 

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது தான் திற்பரப்பு நீர்வீழ்ச்சி. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

திற்பரப்பு அருவியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன. திற்பரப்பு அருவி, மன்னர்கள் ஆண்ட கிராமமான  குலசேகரத்தின் அருகில் உள்ளது. இந்த ஆற்றங்கரை சுமார் 300 மீட்டர் நீளம் உள்ளது. நீர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறது. வருடத்தின் ஏழு மாதங்களும் நீர்வீழ்ச்சி இருந்து கொண்டே தான் இருக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே அமைந்துள்ள முழு படுக்கையிலான பாறை 250 மிட்டர் நீளம் கொண்டது. இந்த தண்ணீர், சுற்றிலும் உள்ள வயலுக்கு பாசன நீராக பயன்படுத்தப்படுகிறது.  

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

திற்பரப்பு அணைக்கு எதிரான திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்கு பலவகையான பாறை படுக்கையில் நீரை தேக்கி சுற்றுப்பரப்பிலுள்ள நெல் வயலுக்கு பாயுமாறு திருப்பப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் மகாதேவா கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஒரு வலுவான சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் இரு புறங்களையும் இணைக்க வலுவான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கீழ்பகுதி வட்டமாகவும், மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.  

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

இந்தக்  கோவிலின் கட்டிடக்கலை முற்றிலும் கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.  அமைதியான சூழலின் மத்தியின் அமைந்துள்ள இந்த கோவிலின் ஆன்மீக ஒளி நம் மேல் படுவதால் நமக்கு நன்மை வந்து சேர்வதை நம்மால் உணரமுடியும் என்கின்ரனர்.  இந்தக் கோவிலின் மிக முக்கிய திருவிழாவான சிவராத்திரி கி.பி. 9 ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியின் பொது தொடங்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. 

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

சிவராத்திரியின் போது இவ்விடத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் பூஜையும் மிக முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.  நீர்விழ்ச்சியின் கீழே நின்று நாம் எடுக்கும் குளியல் நமக்கு ஒரு அருமையான நேரமாக அமைகிறது.  குழந்தைகளுக்கான நீச்சல் குளம் ஒன்றும் அருவியின் அருகில் உள்ளது. நீர்வீழ்ச்சியின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக குளியல் இடம் அமைந்துள்ளது.  

 பார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...!

பார்வையாளர்களை மயக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் குறிப்பாக பருவமழையின் போதும். திறந்திருக்கும். இந்த அருவி தமிழ்நாடு சுற்றுலா துறையினால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆறு காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் பல மூலிகைகளின் குணம் தண்ணீரில் சேர்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல், உள்நாட்டு மக்களும் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக சிறந்த சுற்றுலாத்தலத்தில் திற்பரப்பு அருவியும் ஒன்று. திற்பரப்பு அருவி குமரி குற்றாலம் எனவும் என்றழைக்கப்படுகிறது.  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP