ஆன்லைன் அரசியல் முடிவுக்கு வருமா ??

ரஜினியை வைத்து படம் எடுத்தால் கோடிக் கணக்கில் அவருக்கு சம்பளம் வழங்க வேண்டும். அதற்குபதிலாக அவரை சொறிந்து விட்டு அதை விவாதம் தொடங்கினால் செலவில்லாமல் ஊடகங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்ற மாய வலை தான் தற்போது வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 | 

ஆன்லைன் அரசியல் முடிவுக்கு வருமா ??

தமிழக திரைத்துறையில் ரஜினி காலடி வைத்து 48 ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழத்தின் எந்த மூலையில் அதிமுக கூட்டம் நடந்தாலும் ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்கி பேச்சை தொடங்குகிறேன் என்று கூறி பேச்சை தொடங்கிய காலகட்டத்தில் சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் விழாவில் அரசுக்கு எதிராக ரஜினி பேசியது, மக்களை அவரை நோக்கி திருப்பியது. அதன் பிறகு நடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று வாய்ஸ் கொடுக்க, ஆட்சியலில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது தொடங்கியதுதான், அன்றில் இருந்து இன்று வரை ரஜினி கட்சி தொடங்குவாரா மாட்டாரா என்ற நிலை நீடித்து வருகிறது. இருந்தாலும் மக்கள் குறிப்பாக ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

திராவிட, தமிழ் தேசிய அரசியல் பேச பலர் இருப்பதால் தன் வழி தனி வழி என்றார் ரஜினி. கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் பிரச்னைகளை தீர்க்க பல கட்சிகள் துணை போகின்றன. ஆனால் தங்களின் பண்டிகை நாளை கூட விடுமுறை தினம் என்று நக்கல் அடிக்கும் கட்சிகள் ஆன்மீக அரசியல் என்று அவர் கூறினார். இதுவரையில் பாஜக மட்டுமே இப்படி பேசி நடந்து வந்ததால், தமிழகத்தில் ஆன்மீக வாதிகளின் பார்வை ரஜினியின் பக்கம் திரும்பியது. ஆனாலும் அகில இந்திய பாஜக எந்த காலத்திலும் அவரை நேரடியாக தங்கள் கட்சியில் இணைய வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை.

துணைப்பிரதமராக இருந்த காலகட்டதிலேயே அத்வானி, நீங்கள் கட்சி தொடங்காமல் ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்துக்களை பரவ விடுங்கள் என்று ஆலோசனை கூறினார். அன்றிலிருந்து இன்று வரை அகில இந்திய பாஜக அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. ஆனால் தமிழக பாஜக குறிப்பாக பொன்ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தங்களை நோக்கி ஊடக வெளிச்சம் திரும்ப வேண்டும் என்று அவ்வப்பபோது ரஜினிக்கு அழைப்பு விடுகிறார்கள். அதற்கு ஏற்ப ஊகடங்களும் ரஜினியை விவாதப் பொருளாக மாற்றி வருகிறது.

இதன் உச்சம் தான் திருவள்ளுவருக்கு இணையாக அவரை ஒப்பீடு செய்வது. "என் மீது பாஜக சாயம் பூச ஊடகங்கள், சில கட்சிகள் முயற்சிக்கின்றன. நானும் சிக்க மாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மட்டார்" என்று ரஜினி கூறினார். அதன் பொருளை ரஜினி மீது பாஜக காவி சாயம் பூச நினைப்பதாக ஊடகங்கள் திசை திருப்பின.

இதைத் தொடர்ந்து அயோத்தி விஷயத்திற்கும் கூட ரஜினியிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்டு, அதை விவாதம் ஆக்கின. ரஜினியை வைத்து படம் எடுத்தால் கோடிக் கணக்கில் அவருக்கு சம்பளம் வழங்க வேண்டும். அதற்குபதிலாக அவரை சொறிந்து விட்டு அதை விவாதம் தொடங்கினால் செலவில்லாமல்  ஊடகங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்ற மாய வலை தான் தற்போது வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் தமிழகத்திற்கு எவ்விதமான நன்மையும் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த ஆன்லைன் அரசியல் ஓர் முடிவுக்கு வரும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP