Logo

என்கவுன்டருக்கு ஒருவர் தயார்... மற்றொருவர்?

பொதுவாக அதிமுக ஆட்சியில் காவல்துறை சுந்திரமாக செயல்படும் என்பார்கள். அந்த சூழ்நிலையில் என்கவுன்டர் நல்லது என்று நினைக்கும் ஒருவர் தலைமை பொறுப்பில் வந்து அமர்வது; உபியைத் தான் நினைவுபடுத்துகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒருவர் தயாராகிவிட்டார்.
 | 

என்கவுன்டருக்கு ஒருவர் தயார்... மற்றொருவர்?

ராணுவம், போலீசார் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையே மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. இதில் போலீசார் கண்ணுக்கு தெரிந்தவர்கள். ஆனால் இவர்கள் கையை அரசியல் கட்டிப் போட்டுவிடுகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லாணா துயரங்களை அனுபவிக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் தொடர்பாக மனதைரியம் கொண்டவன் ரவுடியாக மாறிவிடுகிறான். இதற்கு சில அதிகாரிகளும் உடந்ததையாக இருக்கின்றனர். கொலை வழக்கில் ரவுடியை கைது செய்தால் கூட சுமார், 15 நாட்கள் கடந்து ஜாமீனில் வெளியே வருவான். அதன் பின்னர் தீர்ப்பு வரை அவன் சுந்திரமாக சுற்றி வருவான். இதை நன்கு புரிந்து கொள்ளும் மக்கள் ரவுடிக்கு எதிராக சாட்சி சொல்ல வருவதில்லை. சாட்சிகள் சரியில்லாததால் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ரவுடியை விடுதலை செய்யும்.

இதை பார்க்கும் பொதுமக்கள் ரவுடிகளுக்கு பயப்பட தொடங்குகிறார்கள். இதுவே அவர்கள் முதலீடாக மாறிவிடுகிறது. அரசியல்வாதிகளுக்கு சில உதவிகள் தேவைப்படுவதால், ரவுடிகள் மேலும் வளர்ச்சியடைகின்றனர். இதனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெரும்பாலும் முதல்வர் பதவியை இலக்கு வைத்து அரசியல் செய்பவர்கள் பதவிக்கு வரும் போது, அதிரடி முடிவுகள் எடுப்பதில்லை. எதிர்பாராத சிலர், முதல்வர் பதவிக்கு வரும் போது அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.

இதற்கு சமீபத்திய உதாரணம் உத்திரபிரதேச முதல்வர் ஆதித்தியநாத். இவர் ஆட்சிக்கு வந்ததும் ரவுடிகளுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுகிறார். அதைத் தொடர்ந்து ரவுடிகள் என்கவுன்டர்கள் தொடங்கி தொடர்ந்து வருகிறது.

உபியில் ஆதித்யநாத்  அரசு பொறுப்பேற்றது முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடந்ததாக போலீசாரும், முதல்வரே 80 என்கவுன்டர்கள் நடந்துள்ளதாக ஒப்புக் கொள்கிறார்கள். கடந்த 2017ம் மார்ச் ஜூலை 2018ம் ஆண்டு வரை இந்த காலகடத்தில் 78 கிரிமினிலர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 7043 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 11,981 கிரிமினனல்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவ்வளவு அதிரடி நடவடிக்கைக்கும் பின்னணியில், காவல்துறைக்கு தைரியம் கொடுப்பதில் முதல்வர் இருப்பது தான் முக்கிய காரணம். இவ்வளவு ரவுடிகள் போட்டுத்தள்ளப்பட்டதால், தேவையில்லா அரசு செலவு மிகவும் மிச்சமாகும்.

என்கவுன்டர் என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. காவல்துறை, மருத்துவத்துறை வருமானவரித்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டால் தான் அது சாத்தியம். இதைத் தவிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் வேறு வித்தில் துன்பம் கொடுப்பார்கள். இவர்களுக்கு ரவுடிகளால் மக்களுக்கு ஏற்படும் துன்பம் பற்றி கவலையில்லை. 

அதற்கு காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், என்கவுன்டர் நடத்தி பல கொலைகளில் தொடர்புடையவர்களை போட்டு தள்ளினால், மனித உரிமை பறிபோய்விடும். அதனால் என்கவுன்டர் நடத்தும் முன்பும், பின்பும் ஒரு நாடகமே நடக்கும். இது போன்ற நாடகங்கள் அரங்கேர உபி அரசு ஒத்துழைப்பு கொடுத்தது.

தமிழகத்தில் 1980களில் என்கவுன்டர்கள் அறிமுகமானது. நக்சல்கள் பரவ தொடங்கிய அந்த காலகட்டத்தில் அவர்களை ஒடுக்க  இந்த முறை பயன்பட்டது.

பின்னர் 1998ம் ஆண்டு சென்னை லயோலா கல்லுாரி அருகே ரவுடி ஆசைத்தம்பி, அவன் கூட்டாளி  சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின்னர், ரவுடிகளை நோக்கி போலீஸ் துப்பாக்கி திசை திரும்பியது.

2011ம் ஆண்டில் .சென்னை மாநகர காவல் ஆ.ணையராக திரிபாதி இருந்த போது ரவுடி வீரமணி, வேளாச்சேரி வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்று என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதில் வங்கி கொள்ளையர்கள் என்கவுன்டர் விஷயத்தில் பல்வேறு சர்ச்சைகள் அந்த காலட்டத்தில் இருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அதனை கையாண்டவர்  திரிபாதி.

டிஜிபி பதவிப் போட்டியில் இவருடன் களம் கண்ட ஜாபர்சேட்டும் என்கவுன்டர் ஸ்பெஷலிட் என்று பாராட்ட வேண்டியவர் தான். திருச்சியில் பாம் பாலாஜி, புதுக்கோட்டையில் மணல்மேடு சங்கர் ஆகியோர் உட்பட சிலர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டது இவர் ஆளுகைக்கு உட்பட்டுதான்.

தற்போது திரிபாதி டிஜிபியாக பொறுப்பேற்றுவிட்டார். தனக்கு மேல் அதிகாரிகள் இருந்த காலகட்டதிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்கவுன்டர் வரை சென்றவர் தற்போது தமிழக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் வந்து அமர்ந்துள்ளார். 

பொதுவாக அதிமுக ஆட்சியில் காவல்துறை சுந்திரமாக செயல்படும் என்பார்கள். அந்த சூழ்நிலையில் என்கவுன்டர் நல்லது என்று நினைக்கும் ஒருவர் தலைமை பொறுப்பில் வந்து அமர்வது; உபியைத் தான் நினைவுபடுத்துகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒருவர் தயாராகிவிட்டார். 

யோகி ஆதித்தியநாத் போல தமிழகத்திலும் கிரீன் சிக்னல் கிடைத்தால், தமிழக ரவுடிகளுக்கு எமகண்டம் தான். அந்த அளவிற்கு செல்லாமல் அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் தங்கள் தொழிலை மாற்றிக் கொள்வது நல்லது. உயிர் விவகாரம் இல்லையா? மனித உரிமை ஆர்வலர்கள் மலர் வளையம் வைத்தால் அந்த வாசனை கூட மூக்கிற்கு தெரியாது?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP