‛ஒரே நாடு, ஒரே கார்டு’ சொல்வது எளிது; நடைமுறை?

தற்போது ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஆயிரம் முதல் 1200 கார்டுகள் வரை உள்ளன. கார்டுகள் எண்ணிக்கை அவற்றை விட உயர்ந்தால் புதிதாக கடை திறக்கப்படும். அதற்கு ஏற்பதான் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அதிலும் பற்றாக்குறை இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 | 

‛ஒரே நாடு, ஒரே கார்டு’ சொல்வது எளிது; நடைமுறை?

ஆதார் கார்டு நடைமுறைப்படுத்திய பின்னர் அடுத்த மலையை கட்டி இழுக்கும் வேலையாக, நாடு முழுவதும் ஒரே கார்டுகள் அறிமுகம் செய்யும் வேலையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. புதிதாக ஒரு வீட்டை கட்டுவதை விட, பழைய வீட்டை பாராமரிப்பு செய்வது மிகவும் கடினம். அதற்கு இணையானது தான் ஒரே நாடு ஒரே கார்டு திட்டமும்.

ஆதார் கார்டு வழங்கும் முன் யாருக்கும், நாடு முழுவதுமான அடையாள அட்டை இல்லை. அதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ரேஷன் கடைகள் அவ்வாறு இல்லை. நன்கு தெரிந்த தமிழக உதாரணத்தை மட்டும் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில், 33,222 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் 25, 589 முழு நேரக்கட்டைகள், 9, 580 பகுதி நேரக்கடைகள். தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் வெறும் கவுர கார்டுகள் 41,106.

அரிசி இல்லாமல் ஜீனி உட்பட வாங்கும் கார்டுகள், 10 லட்சத்து ஆயிரத்து 605,  அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வாங்குபவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்து 8 ஆயிரத்து 842, அனைத்து பொருட்கள் மற்றும் 35 கிலோ அரிசி வாங்குபவர்கள் 18 லட்சத்து 64 ஆயிரத்து 600, சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் வாங்குபவர்கள் 76 லட்சத்து 99 ஆயிரத்து 940.

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இத்தனை பேர். பொதுவாக 60 முதல் 80 சதவீதம் வரைதான் உணவு பொருட்கள் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, செவ்வாய் கிரகத்தில் இருந்து இறங்கி வந்த நேர்மையான ரேஷன் கடை ஊழியர் கூட, 10 சதவீதம் பேருக்காவது பொருட்கள் கொடுக்காமல் பொய் சொல்லித்தான் அனுப்ப வேண்டும்.

தற்போது ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஆயிரம் முதல் 1200 கார்டுகள் வரை உள்ளன. கார்டுகள் எண்ணிக்கை அவற்றை விட உயர்ந்தால் புதிதாக கடை திறக்கப்படும். அதற்கு ஏற்பதான் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அதிலும் பற்றாக்குறை இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த நிலையில் தான், ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இனிமேல், விசிட்டிங் கார்டுக்கு இணையாக ரேஷன் கார்டும் கையில் இருக்கும். வெட்டியாக ஊர் சுற்றும் போது ஆள்கள் இல்லாத கடையில் சென்று பொருட்கள் வாங்கி வர முடியும். 

இதனால் வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்தால் கூட, ஒரு கடையின் தேவை எவ்வளவு என்பது முற்றிலும் தெரியாமல் போய்விடும். உதாரணமாக, 1000 கார்டுகள் உள்ள கடையில், 800 கார்டுகளுக்கு இப்போது சரக்கு அனுப்பினால் போதும், இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் போது, எவ்வளவு அனுப்ப வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். 

பல இடங்களில் தகவல் தொடர்பு இல்லை. இந்த கடையில் உள்ள விற்பனையாளர் எப்படி இது குறித்த விபரங்களை உடனே உடனே பதவிவேற்றுவார் என்ற கேள்வி எழுகிறது. மேலும் இவற்றையெல்லாம் கையாள்வதற்கு ஏற்ப விற்பனையாளர்கள் கல்வித்தகுதி, நேரம் உள்ளதா என்று பல பதில் தெரியாத கேள்விகள் எழுகின்றன.

இது போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு அதன் பின், அதை அமல்படுத்தினால் தான், அத்திட்டம் வெற்றி பெரும். இல்லாவிட்டால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளியை பார்க்க வருபவரிடம், ரூ. 5 கட்டணம் வசூலிக்கும் திட்டம் போலவே தோல்வியில் தான் முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP