ஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரம

இந்த சூழ்நிலையில், செங்கோட்டையன், பள்ளி மாற்றுச்சான்றிழ்களில் ஜாதி குறிப்பிடத் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார். இது வரவேற்க தக்கது. ஆனால் இன்றைக்கு ஜாதி ரீதியான சலுகைகள் கல்வி நிலையங்களில் தான் அதிகம் வழங்கப்படுகிறன்றன. அதன் காரணமாக பள்ளிகளில் ஜாதி கூறுவது மறைமுக தேவையாக இருக்கத்தான் செய்கிறது.
 | 

ஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரமா, சாபமா? 

தேர்தல் பரபரப்பில், ‛கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிழ்களில், ஜாதி குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லை’ என்ற  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு, அதிக கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது.

இந்த அறிவிப்பு, கடந்த காலத்திலேயே இருந்தாலும், கல்வியாளர்கள் அமல்படுத்தாமல் விட்டுவிட்டனர். அந்த காலத்தில், வருவாய்த் துறை ஜாதி சான்றிதழ்கள் வழங்காத போது, மாற்றுச்சான்றிதழ் தான் ஜாதி சான்றிதழாக இருந்தது. பள்ளிகளில் கட்டாயம் ஜாதி சொல்ல வேண்டியிருந்தது. 

தங்களுக்கு ஜாதி அடையாளம் வேண்டாம் என்று நினைக்கும் உயர் தட்டு மக்கள், பள்ளி நிர்வாகத்தின் கட்டளையால் ஜாதியை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும், ஆங்காங்கே ஜாதி, மதம் பற்றி கூறாமல் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து கொண்டிருந்தனர். அதன் பின்னர் வருவாய்த்துறை தான் ஜாதி, வருமான சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதுதான் செல்லும் என்று மாறிவிட்ட சூழ்நிலையில், மாற்றுச்சான்றிதழில் ஜாதி விபரங்கள் தேவையற்றதாக, ஆடுத்தாடி போல கூடுதல் விவகாரமாக மாறிவிட்டது.

இந்த சூழ்நிலையில், செங்கோட்டையன், பள்ளி மாற்றுச்சான்றிழ்களில் ஜாதி குறிப்பிடத் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார். இது வரவேற்க தக்கது. ஆனால் இன்றைக்கு ஜாதி ரீதியான சலுகைகள் கல்வி நிலையங்களில் தான் அதிகம் வழங்கப்படுகிறன்றன. அதன் காரணமாக பள்ளிகளில் ஜாதி கூறுவது மறைமுக தேவையாக இருக்கத்தான் செய்கிறது.

இதன் காரணமாக, ரேஷனில் பொருட்கள் தேவை இல்லை என்றாலும், இதர பயன்பாட்டிற்காக கார்டு வாங்குவது, காஸ்மானியம் வேண்டாம் என்று விடுக் கொடுப்பது போன்று பள்ளிகளில் ஜாதி வேண்டாம் என்று சொல்லுவதை கட்டாயமாக்கிவிட்டு, தேவை இருப்பவர்கள் ஜாதியை குறிப்பிட்டு சலுகைகள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

ஒரு தலைமுறை ஜாதியில்லாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், அடுத்த தலைமுறையில் தேவைப்பட்டால் ஜாதியை குறிப்பிடவும் அனுமதிக்க வேண்டும்.

ஜாதியில்லா சமுதாயத்திற்கு, செங்கோட்டையின் முதல்படி எடுத்து வைத்துள்ளார். அதில் சறுக்கிவிடாமல் கடைசி வரை நடைபோட வேண்டும். அதற்கு, அனைவரின் ஒத்துழைப்பும் கட்டாயம் வேண்டும். அப்போது தான் செங்கோட்டையன் நடவடிக்கை வரமாக அமையும், இல்லாவிட்டால் அது சாபமாகத்தான் இருக்கும். அவ்வாறு மாற்றிவிடாமல் பாரத்துக் கொள்வது நம் கைகளில் தான் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP