ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான 88 வயதுடைய ஐராவதம் மகாதேவன், இன்று அதிகாலை சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது மறைவு, பத்திரிகை துறைக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு மாபெரும் இழப்பே.
 | 

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான 88 வயதுடைய ஐராவதம் மகாதேவன், இன்று அதிகாலை சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். 

பல நாள்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் நம்மை விட்டு மறைந்தார். இது பத்திரிகை துறைக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு மாபெரும் இழப்பே.

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

கல்வெட்டு ஆராய்ச்சியாளரான ஐராவதன் மகாதேவன், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.  1930ல் திருச்சியில் உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்த அவர், அங்குள்ள செயின்ட்ஜோசப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954 முதல் 1981 வரை 27 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் நேர்மைக்காகவும் கடின உழைப்புக்காகவும் திறமைக்காகவும் அவர் புகழ்பெற்றவர். 1987 முதல் 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

சிந்து எழுத்துகள், பிராமி எழுத்துகள் மீதான ஆர்வம் அவரை கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. 1970 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவர் நியமிக்கப்பட்டார். தனது சிந்து சமவெளி ஆய்வுகளை முடிப்பதற்காக அரசு பணியிலிருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவர்,  பின்னர் கல்வெட்டு எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள், திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என கருத்துத் தெரிவித்தார்.

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் ஐராவதம் மகாதேவன் சமர்பித்துள்ளார். அந்தக் கட்டுரை சிந்துவெளி ஆய்வுலகில் மிகுந்த பாராட்டினைப் பெற்றுள்ளது. 1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார். கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த அரசர்களின் பெயர்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து அவர் அந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றையும் வெளியிட்டார். 1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’என்ற புத்தகம் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். அந்த புத்தகத்தில் தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. 

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

2003ஆம்ஆண்டில், முற்காலத் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றி விரிவாக எழுதி ’ஏர்லி தமிழ் எபிகிராஃபி: ஃப்ரம் தி ஏர்லியஸ்ட் டூ த சிக்ஸ்த் சென்சுரி ஏ.டி.’ என்ற நூலை வெளியிட்டார். அவருடைய மகத்தான சாதனைகளுள் இந்த நூலும் ஒன்று. சிந்து சமவெளி எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஐராவதம் மகாதேவனின் நிபுணத்துவத்தில் பிரதானமான பகுதிகள். 2009-ல் மத்திய அரசு வழங்கிய பத்ம விருது,

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

அதே ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய டி.லிட் பட்டம், 2009-2010 ஆண்டுகளுக்கான ‘தொல்காப்பியர் விருது’, 2010-12-ல் ஆசியாட்டிக் சொஸைட்டி ஆஃப் மும்பை வழங்கிய ‘கேம்பெல் பதக்கம்’, 2015-ல் திராவிடப் பல்கலைக்கழகம் (குப்பம்) வழங்கிய டி..லிட் பட்டம் ஆகியவற்றை ஐராவதம் மகாதேவன் பெற்றுள்ளார்.

ஆசிரியர் மட்டுமல்ல... சிறந்த அறிஞரும் கூட... ஐராவதம் மகாதேவன்

தினமணி நாளிதழின் ஆசிரியராக 1987 முதல் 1991 வரை பணியாற்றியபோது, அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் எப்போதும் நினைவுகூறத்தக்கன.

ஆசிரியரும், அறிஞருமான ஐராவதம் மகாதேவனின் மறைவு, பத்திரிகை துறைக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு மாபெரும் இழப்பே. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கொள்வதோடு, அவரது மறைவால் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினக்கும் நியூஸ் டிஎம் ஆசியரியர் குழு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP