நாட்டுக்கு நல்லதில்லை !

அரசும், நீதித்துறையும், இன்ன பிற அமைப்புகளும் சமுதாயத்திற்கு என்ன செய்தியை சொல்கிறது என்ற வேதனையான கேள்வி மனதில் எழுகிறது.
 | 

நாட்டுக்கு நல்லதில்லை !

சமுதாயம் அமைதியாக இருப்பதற்கு தண்டனைகள் தான் காரணம். அதிலும் தண்டனையை விட அதுபற்றிய பயமே பலரை தவறு செய்யவிடாமல் தடுக்கிறது.  ஆனால் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரைவிடுதலை செய்து இருப்பது, அரசும், நீதித்துறையும், இன்ன பிற அமைப்புகளும் சமுதாயத்திற்கு என்ன செய்தியை சொல்கிறது என்ற வேதனையான கேள்வி மனதில் எழுகிறது.

இது போன்ற நடைமுறைகளால் தான் காவல்துறை குறிப்பாக நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வழக்குகளில் தீவிரம் காட்டுவதில்லை. அன்றாடம் நிகழும் பல குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனிநபர்களாகத்தான் இருப்பார்கள். அதில் வழக்கமான குற்றவாளிகள், உணர்ச்சிவசப்பட்டு குற்றம் செய்பவர்கள் என 2 வகைதான் இருக்கும். பெரும்பாலும் 2வது வகை குற்றவாளிகள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர், அந்த வீதிக்காரர்கள், நண்பர்கள் என்று தான் இருக்கும். அதனால் தவறு செய்தவனே அதற்காக சிறையில் வருந்திக் கொண்டு தான் இருப்பான்.

ஆனால் ஒரு சில சம்பவங்கள் சமுதாயத்தில் பெரிய தகத்தை ஏற்படுத்தி இருக்கும். அதன் குற்றவாளிகள் தண்டனை காலம் முடியும் முன்பே வெளியே விடுவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். தமிழக அரசும் சரி, கவர்னரும் சரி எப்படிப்பட்ட முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று அறிய அந்த சம்பவங்களை மீண்டும் நினைவபடுத்திக் கொண்டால் தெரியும்.

நாட்டுக்கு நல்லதில்லை !

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்டப்பட்ட வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு  மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்றும், அவருக்கு ஒர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வன்முறை .வெடித்தது. இது  பற்றிய எந்த விபரமும் .தெரியாமல் 2000ம் ஆண்டு பிப். 1 ம் தேதி   கோவை வேளாண் பல்ககைல்கழக மாணவிகள் 42 பேர் கிருஷ்ணகிரி வந்தனர். மறுநாள் தருபுரியை அடைந்த அவர்கள் ஒகனேக்கல் சென்று விட்டு கோவை திரும்ப திட்டமிட்டனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பால் ரத்தம் கொதித்த  தர்மபுரி ரத்ததின் ரத்தங்கள்  மாணவிகள் இருந்த பஸ்சை தர்மபுரி– சேலம் சாலையில் உள்ள இலக்கியம்பட்டி அருகே வழிமறித்து கொளுத்திவிட்டு தங்கள் உணர்ச்சியை தணித்துக் கொண்டனர்.   பஸ்சில் இருந்த மாணவிகளை இறங்கி ஓடுங்கள் என்று விரட்டி அடிக்க கூட உணர்ச்சி வேகத்தில் முடியாத ரத்தத்தின் ரத்தங்கள் மாணவிகளை உள்ளுக்குள் வைத்தே பஸ்சுக்கு தீ வைத்தனர். 

இதில் தர்மபுரி  நகர முன்னாள் அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், என்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெயர் குறிப்பிடப்பட்ட 3 பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அதை கோர்ட்டில் அப்பீல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக 2016ம் ஆண்டு குறைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் இழந்து  ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகியோர் பார்க்கவே முடியாத இடத்திற்கு சென்று விட்ட தால் அவர்கள் குடும்பத்தினர் அடைந்த வேதனையை விட, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை பார்த்து பழகும் வாய்ப்பை பெற்ற குற்றவாளிகளின் குடும்பத்தினர் பெற்ற வேதனை அதிகம் என்பதால் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து தற்போது அது நிறை.வேறி இருக்கிறது. 

நாட்டுக்கு நல்லதில்லை !

இதற்கு சற்றும் குறைவில்லாத வழக்குதான் ராஜீவ் கொலை வழக்கும். இதில் நாம் இழந்தது ராஜீவ் காந்தியை. அவர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி செயதால், இன்று நாடு மிகவும், வீழ்ச்சியடைந்து நடுத் தெருவில் வந்திருக்கலாம், அல்லது ஐரோப்பிய நாடுகள் போன்று எழுச்சி பெற்றிருக்கலாம். அது போன்ற தலைவனை இழந்து இருக்கிறோம். அதில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதில் தமிழகமே பின்னால் நிற்கிறது. ஒரு நாட்டில் முன்னாள் பிரதமரைக் கொன்றவரே விடுதலை செய்யப்படும் போது குடிமகன்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு என்ன தண்டனை கிடைக்கும். என்ன எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படுமே என்ற நினைப்பு கூட இல்லாமல் தாண்டி குதிக்கின்றனர்( இப்பகுதியி்ல் 7 பேரின் பெயரையே புகைப்படங்களையோ வெளியிடாததற்கு காரணம். அனைவரும் தமிழர்கள் நெஞ்சில் எப்போதும் நீக்கமற நிறைந்து, அவர்கள் விடுதலைக்காக அன்னம் தண்ணி புழங்காம காத்திருப்பதால் தான். நீங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் ஒரு தமிழ்விரோதி.

நாட்டுக்கு நல்லதில்லை !

இதில் நளினியும் அவர் கணவர் தாஸ்( அவரைத் தான் முருகன் என்ற விடுதலைப்புலியின் பெயரில் போலீசார் மாற்றிவிட்டார் என்கிறார் நளினி அதாவது வழக்கில் சிறிதும் தொடர்பு இல்லாத முருகனை அவர் முதல், இரண்டாம் குற்றவாளிகள் இடத்தில் இல்லாவிட்டாலும் அவர் பெயரை முனைந்து மாற்றியிருக்கிறார்கள் பாவிகள். ) மகள் பெற்று, அவருக்கு திருணம் கூ.ட நடந்தேறிவிட்டது அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் நம் தொப்புள் கொடி உறவுகள். நமது கண்ணீருக்கு விடையாக அவர்களும் சிறிது நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதற்கான அடையாளமாகக் கூட தர்மபுரி பஸ் எரிப்பு வழக்.கின் தற்போதைய முடிவு. ரகசிய தகவல் சொல்லாம்.

இது போன்று அப்பாவிகளை விடுதலை செய்து அவர்கள் குடும்பத்தை வாழ வைப்பதில் அனைத்து கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. இன்று அதிமுக வழக்கை பற்றி மூச்சுவிடாமல் திமுகவினர் பேசலாம். ஸ்டாலின் அதிமுகவினரின் அராஜகத்தை பற்றி கண்ணீர் வடிக்கலாம். இதற்கு காரணம் அது அதிமுக செய்துவிட்டதே என்பது தான். இவர்கள் எந்தவிதமான நியாதிபதிகள் என்பது பத்திரிக்கை எரிப்பு வழக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2007ம் ஆண்டு மேமாதம் 9ம் தேதி தினகரன் ஒரு கருத்துக்கணிப்பை  வெளியிடுகிறது. அதில் கருணாநிதியின் அரசியல் வாரிசு அழகிரி அல்ல ஸ்டாலின் தான் என்று குறிப்பிடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் தினகரன் பத்திரிக்கை அலுலகத்தின் உள்ளே புகுந்து தீவைத்து கொளுத்துகிறது. இதில் செய்திக்கு நேரடியாக தொடர்பு இல்லாத கம்ப்யூட்டர் லேவ் அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார், மற்றும் செக்யூரிட்டி முத்துராமலிங்கம் ஆகியோர் இறந்தனர். (அந்த சம்பவம் நடந்த போது கலாநிதிமாறன் இந்த சம்பத்தில் யார் தொடர்பு கொண்டிருந்தாலும் நான் அவர்களுக்கு தண்டனை பெற்றுதராமல் விடமாட்டேன் என்று சவால் விட்டது உங்கள் நினைவுக்காக). பின்னர் மாநிலத்தை ஆண்ட திமுக அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சிபிஐ மதுரை அட்டாக் பாண்டி உட்பட 17 பேர், ஊமச்சிகுளம் டிஎஸ்பி ராஜாராமன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தது. கடந்த 9–12–2009 அன்று மதுரை செசன்ஸ் கோர்ட் அனைவரையும் விடுதலை செய்தது. அதன் பின்னர் 118 நாட்கள் கழித்து உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ அப்பீல் மனுதாக்கல் செய்தது. அதன்பி்னனர் திமுக ஆட்சி வந்த போது இந்த வழக்கில் வேகம் காட்ட வில்லை என்பதும் அனைவருக்கும் .தெரியும்.

இதே போல ஒவ்வொரு வழக்காக தேடி எடுத்துக் கொண்டே போகலாம். இது போன்ற நடைமுறைகளை பார்க்கும் போது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் இந்துக்கள் இல்லை என்பதால் விடுதலை செய்ய வில்லையா. நீங்கள் சிறுபான்மையினருக்கு அநீதி இழைப்பது தெரியவில்லையா என்று கேள்விகளாலேயே கூவலாம். இவை அனைத்துக்கும் பின்னணியில் இருப்பது ஓட்டு, புகழ் இவைதான் காரணம். இப்படி தொடர்ந்தால், நாளை வீட்டில் கொல்லையடிப்பவனும், ரோட்டில் கொலை செய்பவனும் தலைவர் வாழ்க என்று தமிழ், அரபி, இந்தி என்று உலக மொழிகளில் ஒன்றை கத்திக் கொண்டே தன் கடமை செய்வான். பின்னர் அவன் விடுதலைக்காக நாமே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும் அவர்கள் தொப்புள் கொடி உறவாகிவிடுவான் அல்லவா. ஆனால் அந்த தொப்புள் கொடியையே வெட்டித்தான் வீசுவார்கள் என்பதை இவர்களுக்கு யார் சொல்லித்தரப் போகிறார்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP