வச்சு செய்கிறார்களே வெட்கமாக இல்லை?

தனிப்பட்ட வகையில் அவரை கோபப்படச்செய்து, அவரின் வாயிலிருந்து பிற சமூகத்தினர் பற்றி தவறான சொற்களை வாங்கி விட வேண்டும் என்பதே கேள்வி கேட்டவரின் நோக்கமாக இருந்தது.
 | 

வச்சு செய்கிறார்களே வெட்கமாக இல்லை?

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாறிவிட்டால் சமுதாயம் உருப்படாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இப்போ மைக் பிடித்தவன் எல்லாம் மீடியாகாரனாக மாறிவிட்டார்கள். ஜனநாயகத்தின் 4வது துாணும் நசுங்கி விட்டது.

எதைப் பற்றியும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல் எல்லாவற்றை பற்றியும் கேள்வி எழுப்பினால் போதும், சிறந்த ஊடகவியலாளர் உருவாகிவிட்டார் என்று, தமிழ் கூறும் நல் உலகம் தாங்கிப்பிடிக்கும்.

கடந்த காலத்தில் இவர்களின் காட்பாதர் விஜயகாந்த், எல்லா காலத்திலும் வைகோ.  இவர்களை சீண்டி விட்டால் போதும், ஆத்திரத்தில் ஏதாவது கொட்டுவார்கள். அதை திரும்ப திரும்ப காட்டி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி தங்கள் சேனலையும், சம்பந்தப்பட்ட ஊடகவியலாரின் தகுதியையும் உறுதி செய்து கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

விஜயகாந்த், வைகோ, அரசியல் கட்சிகளில் பாஜக போன்றவை எவ்வளவு அடித்தாலும் தாங்கும், அடிக்கிற அடிக்கும் தமிழ் கூறும் நல் உலகம் பாராட்டும் அளவிற்கு பலன் கிடைக்கும்.

இப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்து, மைக்கை நீட்டி இவர்களுக்கு பதிலாக அவர்கள் ஊடகவியலாரை கழுவி ஊற்றிய சம்பவங்களும் நடக்கிறது. ஆனால், சண்டையில் கிழியாத சட்டை எங்கடா இருக்கு என்று கேவலப்படாமல் அடுத்த விஷயத்தை பார்க்கப் போய்விடுகிறார்கள்.

பத்திரிகைகள் மட்டும் இருந்த நேரத்தில் சார் நல்லா கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன் என்று கெஞ்சி கூத்தாடி, இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்கள் வாரம் குறைந்தது ஒரு புத்தகமாகவது படிப்பார்கள்.

இதைத் தொடர்ந்து, தனியார் டிவிகள் ஆதிக்கம் தொடங்கியது. என்னைய சூரியன் டிவியில கூப்பிட்டாங்க, சுப்பிரமணிய சாமி டிவில கூப்பிட்டாங்க என்ற பில்டப்புடன் ஏதாவது ஒரு சேனலில் சேர்ந்து கண்களை கட்டிக் கொண்டோ, கருப்புக் கண்ணாடி, அல்லது சிகப்பு கண்ணாடி அதுவும் இல்லாவிட்டால் கருப்பு சிவப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள். 

இதன் பின்னர் சமுக ஊடகங்கள் வந்தன. 1990களில் கம்ப்பயூட்டர் மயமாக உலகமே மாறியது. அப்போது பத்தாவது படித்தவர் கூட சி, சிபிளஸ்  என்று சில மொழிகளை படித்தவர்கள் கம்ப்யூட்டர் நிபுணர்களாக உருவாகினர். அதே போல, தற்போது யு டியூப் உபயத்தால் செல்போன் இருப்பவர்கள் எல்லாம் சேனல் உரிமையாளர்கள், தெருவுக்கு கூட தெரியாதவர்கள் விஐபிகள்.  கெட்டவார்த்தையுடன் பேசினால் போதும் அவர் தமிழர்களை காக்க வந்த கடவுள்களாக மாறிவிட்டார்கள்.

இவ்வளவு சூழ்நிலை மாறிவிட்டாலும், வைகோ, விஜயகாந்த் போல பலியாடுகளாக மாறால் ஊடகவியலார் முகத்தில் கரி பூசுபவர்களும் இருக்கிறார்.

அப்படி சமீபத்தில் கரி பூசியவர் மதுவதனி அருண். ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்தின் வாரிசு. அதாம்பா, நடிகர் ரஜினியின் சகலையும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள். ரொம்ப வருடத்திற்கு முன்பு டிவிக்களில் ஜாலியாக சில புரோகிராம்களை நடத்தினாராம். அவர் சொந்தக் கதை நமக்கு தேவையில்லை. ஆனால் அவர் கரிபூசிய சமாச்சாரத்தை பார்ப்போம்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இது குறித்து ரஜினி வாழ்த்தினாரா திட்டினாரா என்று புரியாமல் மோடி, அமித்ஷாவை அர்ஜூனன், கிருஷ்ணன் என்று ஒப்பிட்டு பேசினார். ரஜினியை திட்டனாலோ,  வாழ்த்தினோலோ நம் பெயர் வெளியே தெரியும் என்று ஊகவியலாளரகள் வலை வீசி விஐபியாக்கினர். 
நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி அனைவரும் ஏற்கனவே புக்காகிவிட்டனர். இதனால் கருப்பு சிவப்பு கண்ணாடிபோட்ட  சேனலுக்கு மதுவந்தி அருண் சிக்கினார். மதுவந்தி அருண் நடிகர் ஒய்ஜிமகேந்திரன் மகள், ரஜினியின் கொழுந்தியா மகள். ஏதாவது உளருவார் என்று எதிர்ப்பார்த்து பேட்டி எடுப்பவர் சென்றார்.

அந்த பெண்ணோ சுட்ட எண்ணையில் விழுந்த கடுகாக வெடித்தார். ரஜினி, விஜய் சேதுபதி கருத்து குறித்து கேட்ட போது, இவர் கருத்தை இவர் கூறினார். அவர் கருத்தை அவர் கூறினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பதில் கூறவில்லை, நீங்கள் தான் சிண்டு முடிகிறீர்கள் என்றதும், அந்த அம்மணியின் திறமை நிமிர்ந்து உட்கார செய்தது.

பிறப்பால் ஏற்ற தாழ்வு இல்லை என்று அவர் கூறியதும், அப்போ நீங்கள் உங்கள் பிறப்பு குறித்து நீங்கள் கவுரப்படவில்லை தானே என்றதும், நான் கவுப்படுகிறேன் ஆனால் கர்வப்படவில்லை என்றார். இப்படி பல துாண்டில்கள் போட்டும் கூட, அவர் எந்த விதத்திலும் சிக்கவில்லை. மேலும் பேட்டி எடுத்தவர் நினைத்தபடி எந்த வார்த்தையும் வெளியே வரவில்லை.

அவரின் பேச்சு மிகத்தெளிவாக இருந்தது. மைக் பிடித்த நபர் என்னதான் கேள்வி கேட்பது என தெரியாமல் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். ஊடகவியலாளர்கள் எப்போதும் நடுநிலை தன்மை வாய்ந்த கேள்விகளை மட்டுமே முன்வைக்க வேண்டும். 

ஆனால் அவர் முன்வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே, அவர் சார்ந்த ஜாதியை குறை கூறும் வகையிலும், அந்த சமூகத்தினர், பிற ஜாதியினருக்கு எதிரிகள் என சித்தரிக்கும் வகையிலேயே இருந்தது. 

தனிப்பட்ட வகையில் அவரை கோபப்படச்செய்து, அவரின் வாயிலிருந்து பிற சமூகத்தினர் பற்றி தவறான சொற்களை வாங்கி விட வேண்டும் என்பதே கேள்வி கேட்டவரின் நோக்கமாக இருந்தது. 
அவர் கேட்ட ஒரு சார்பு கேள்விகள் அனைத்திற்கும் நெற்றி அடியாய் பதில் சொல்லி, கடைசியில் கேள்வி கேட்டவரின் முகத்தில் கரியை பூசி வெளியேறினார்.

ஆழ்ந்த அறிவு, முதிர்ச்சி, அனுபவம் இல்லாத பலரும் தங்களை தேர்ந்த பத்ரிக்கையாளர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு, இதுபோன்ற பேட்டிகளை நிகழ்த்துவதுதால் தான் விபரீதமாக முடிகிறது.  

இந்த ஆபத்தில் இருந்து தப்ப வேண்டுமானால், திறந்த மனதுடன், பேட்டி எடுக்க செல்வதற்கு முன்பு ஹோம் ஓர்க் செய்து செய்ய வேண்டும். நடுநிலை தன்மையுடன் கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஊடக அறம் நிலைக்கும். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP