நம்ம ஊரில் வேலை செய்ய ஆளே இல்லை சார்...!

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமைதான் நமது செல்வம் என்று நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்தார்கள். அதன் படி தொழிலை மதித்து அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை கொடுப்பவன் மகிழ்ச்சியாக இருந்தால் வேறு எவனுக்கும் இங்கு இடம் இருக்காது.
 | 

நம்ம ஊரில் வேலை செய்ய ஆளே இல்லை சார்...!

அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு என்ற கோஷம் ஒலித்த காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்வியல் பற்றிய கேள்விகள் எழுப்பி அடங்கி கொண்டுதான் இருக்கிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற காலத்தில் கூட தமிழர்கள் பர்மா, மும்பை, இலங்கை, சிங்கப்பூர், சவுதி போன்ற இடங்களில் படையெத்துக் கொண்டு தான் இருந்தார்கள். தமிழகத்தில் அடகு கடை நடத்திய சேட்டுகள், பாதுகாப்பிற்கு வந்த கூர்காகள் தவிர்த்து வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஊடுருவவில்லை. அந்த காலகட்டத்திலேயே நெடுமாறன் போன்றவர்கள் வட மாநிலத்தவர்களுக்கு இங்கு வாழ்வு இல்லை. அவர்கள் வெளியேற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இவை அனைத்துமே சில ஆண்டுகளில் அமைதியாகிப் போனது. 

கடந்த 25 ஆண்டுகளில் டாஸ்மாக் அபரிதமாக வளர்ச்சி பெற்றது. லைசென்ஸ் வாங்கி குடித்த தமிழர்கள் குடியையே வாழ்வியல் லைசென்சாக மாற்றிக் கொண்டனர். கடை திறக்கும் முன்பே வாசலில் தவம் கிடக்கிறார்கள். கடை மூடிய பிறகு கூட கட்டிங் தருபவன் கடவுளாகவே தெரிகிறான். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. வேலைக்கு செல்பவன் கூடவேலை கொடுப்பவனை கண்ணீர் விட்டு கதற விடுகிறான். 

இதன் காரணமாக வடமாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கேபிள் பதிக்க ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து ஆட்களை கூட்டி வந்தார்கள். இதன் அடுத்தபடியாக நாடுமுழுவதும் மொத்தமாக ஒப்பந்த பணி மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறைந்த கூலியில் கடுமையான உழைக்கும் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்தது. அப்படி தமிழகத்திற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பி செல்வதில்லை. அழகுசாதன நிலையங்கள், கட்டுமானத்துறை, ஓட்டல்கள் போன்ற துறைகளில் அவர்கள் ஆதிக்கம் பெருத்துவிட்டது. 

கட்டுமானத்துறையில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் குறித்து கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவரிடம் கேட்ட போது, அவனாவது பிழைக்கட்டும் சார், நம்ம ஊரில் வேலை செய்ய ஆளே இல்லை என்றார். இது போல ஒவ்வொரு துறையிலும் அவர்களை வேலைக்கு வைக்கும் நபர்கள் ஏதோ ஒரு காரணம் கூறத் தொடங்கி விட்டார்கள். 

இதனால் தன் வெளி உலகில் அவ்வளவாக பரிச்சையம் இல்லாத கிராமத்தில் இருக்கும் அரிசி ஆலையில் கூட அவர்கள் தொழிலாளிகளாக இருக்கிறார்கள்.

வேலை கொடுப்பவனுக்கு அதில் தான் நாட்டம் இருக்குமே தவிர்த்து வேலை செய்பவன் வடமாநிலத்தவான, தென்மாநிலத்தவனா என்று கவலை இருக்காது. இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இறங்கி கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்காவில் கூட இதே போன்ற நிலைதான், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விட அங்கே உள்ள பிரஜைக்கு சம்பளம் அதிகம். அரசு உள்ளூர் தொழிலாளர்களை தான் வேலைக்கு வைக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் நிறுவனத்தையே வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்கிறார்கள். இன்று உள்ளூரில் தயாரித்து விற்பனை செய்வதை விட சீனாவில் இருந்து பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்வது விலை குறைவானது, லாபம் அதிகம். 

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே வேலை என்ற கோஷம் எழும்ப தொடங்கி உள்ளது கோஷம் எழுப்புவன் எவனும் வேலை தரப் போவது இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் நிறுவனங்களை மூடுவதற்கு தான் அந்த கோஷம் வழிவகை செய்யும். இந்த நிலையை மாற்றவே முடியாதா என்றால் முடியும். அது இளைஞர்கள் கைகளில் தான் இருக்கிறது. அவர்கள் டாஸ்மாக் கடையை விட்டு விட்டு களத்தில் இறங்க வேண்டும். 

மேலும் செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமைதான் நமது செல்வம் என்று நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்தார்கள். அதன் படி தொழிலை மதித்து அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை கொடுப்பவன் மகிழ்ச்சியாக இருந்தால் வேறு எவனுக்கும் இங்கு இடம் இருக்காது. அதை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP