திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என பெயர். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது.
 | 

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.  புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். இவை மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில். 

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கை்கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.  ஆஞ்சநேயர் சிலை, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. திறந்தவெளியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் கூறியதாகவும், அதனால்  திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

இராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில், அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தைபெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது அசரீரி (உருவம் இல்லாத குரல்) கேட்டது. அதில் ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றது. ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்மமூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.  இதை  தான் நாமக்கல் ஆஞ்சநேயரின் தலவரலாறு என்று கூறுகின்றனர்.  

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

நவகிரகங்களில்  உள்ள ராகுவும், சனியும் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்ததாகவும்,  பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதற்காகவும், ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சாத்துகின்றனர். இப்படி வடைமாலை சாத்தி  வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர்கள்  விடுபடுகிறார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.  

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

நாமக்கல் மலையின் மேற்கு புறத்தில் உள்ளது அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில். கணிதமேதை ராமானுஜம் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.  தமிழகத்தில் உள்ள உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளில் இதுவும் ஒன்று. 

திறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!

அனுமனின் தனிச்சிறப்பினாலும் நாமக்கல் ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். நாமக்கல் நகரில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய  வகைகளும் கொண்ட பெருமை வாய்ந்த  கொல்லி மலை இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP