முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் தமிழக, கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளின் முச்சந்திப்பில் அமைந்துள்ளது முதுமலை வன விலங்குகள் சரணாலயம். 62 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
 | 

முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் தமிழக, கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளின் முச்சந்திப்பில் அமைந்துள்ளது  முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.  தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாக அறியப்படும் தேசிய பூங்கா. 62 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதி 1940 ஆம் ஆண்டு முதுமலை வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 

முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கே கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையும், மேற்கே கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்குகள் சரணாலயத்தையும் கொண்ட இப்பகுதி பல வனவிலங்குகளின் இடபெயர்வுக்கு வழித்தடமாக அமைந்துள்ளது. ஈர இலையுதிர்காடுகள், வறண்ட இலையுதிர்காடுகள், முட்புதர்காடுகள் உள்ளிட்ட  வழிடங்களைக் கொண்ட இந்த சரணாலயத்தின் தற்போதைய பரப்பளவு 321 சதுர கிலோமீட்டர் ஆக விரிவடைந்துள்ளது. இதில் 108 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தின் 14 சதவிகித நிலப்பரப்பை இந்த தேசியப் பூங்கா கொண்டுள்ளது. இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், மலபார் ராட்சஸ அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரிங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட பறவையினங்களும், பல அரிய வகை தாவரங்களும் இங்கு காணக் கிடைக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும். இங்கு தண்ணீர் குடிக்க வரும் பல்வேறு விலங்குகளை காண முடியும். 

முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

முதுமலை தேசிய பூங்காவில் அமைந்துள்ள தெப்பக்காடு யானை முகாமில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரியில் ஈடுபடலாம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விலங்குகளை மட்டும்மல்ல இயற்க்கையான சூழலையும் ரசித்து செல்கின்றனர். சுற்றுலாவிக்கு ஏற்ற இடமாக உள்ளது என்றால் தமிழகத்தில் பல இடங்கள் இருக்கலாம் ஆனால் முதுமலை என்றால் விலங்குகளோடு, இயற்கையையும் சேர்த்து ரசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

முதுமலை வன விலங்குகள் சரணாலயம்...!

அப்படி பல சிறப்புகளை உடைய முதுமலை சரணாலயத்தில் மக்கள் கூட்டம் என்றும் குறைந்ததில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி செல்லும் சுற்றுலா தலமாக உள்ளது முதுமலை சரணாலயம். முதுமலை வனபகுதியில் ஓடும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும், பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமையப்பெற்றுள்ளது. இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருவதால் இது புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP