நவீன முறையில் மாவாட்டும் கல்....!

தமிழகத்தில் பாரபரியமான பொருட்கள் படிபடியாக மறைந்து வருகிறது என பரவலாக சொல்லப்பட்டுவருகிறது. அதுவும் நகரபுறங்களில் பாரம்பரியமான பொருட்களின் பயன்பாடுகள் மறைந்து கொண்டே வருகிறது என்பதை நம்மால் மறுப்பதற்க்கு இல்லை.
 | 

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

தமிழகத்தில் பாரபரியமான பொருட்கள் படிபடியாக மறைந்து வருகிறது என பரவலாக சொல்லப்பட்டுவருகிறது.  அதுவும் நகரபுறங்களில் பாரம்பரியமான பொருட்களின் பயன்பாடுகள் மறைந்து கொண்டே வருகிறது என்பதை நம்மால் மறுப்பதற்க்கு இல்லை. 

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

இந்த நிலையில் பாரம்பரிய பொருட்களான மாவாட்டும் கல், அம்மிக்கல், உரல் போன்றவை நகர்புறங்களில் நீங்கள் பார்ப்பது மிகவும் அறிதான ஒன்றாகும். ஆனாலும் பாரம்பரிய பொருட்களான  மாவாட்டும் கல், அம்மிக்கல், உரல் போன்றனவை நவீன முறையில் தற்ப்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. அந்த வரிசையில் வெண்ணைக்கு புகழ் பெற்ற  ஊத்துக்குளி நகரில் தங்களின் பாரம்பரியம் மாறாமல் கலைநயத்துடன் மாவாட்டும் கல், அம்மிக்கல், உரல் போன்றவைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.  

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

இங்கு சுமார் 55 ஆண்டுகளாக செய்து வரும் இந்த தொழிலில் இப்போதைய மக்கள் விரும்பும் தொழில் நுட்ப வடிவமைப்பில் செய்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மன திருப்தியோடு அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.  பாரம்பரிய  முறையில் இன்றும் கற்களால் உருவாக்கப்பட்டு வரும்,  அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் மற்றும் சலவைக்கல் ஆகிய வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.  இதில் ஸ்டீல் கைபிடி உள்ளிட்ட சில நவீன  மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.  

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை நிறுத்தி, வீட்டுக்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வருமானம் குறைவாக இருந்தாலும் மனநிறைவோடு கலைநயத்தோடு பொருட்களை தயாரிக்கின்றனர். 55 வருடமாக தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களான அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் மற்றும் சலவைக்கல் ஆகிய வீட்டு உபயோகப்பொருட்களை செய்து வருகிறனர். 

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் போன்றவை அந்த காலத்தில் கையால் கொத்தி வடிவமைத்தோம் ஆனால் தற்போது நவீன இயந்திரங்கள் வந்த பிறகு  இயந்திரம் மூலம் வடிவமைத்து பின்னர் சில மாற்றத்திற்காவவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க நவீன கைபிடிகள் வைக்கின்றோம் என்றார் அதனை உருவாக்கும் தொழிலாளர். நவீன முறையிலும் பாரம்பரியம் மாறாமலும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளதால் இந்த கல்லை  வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். 

நவீன முறையில் மாவாட்டும் கல்....!

இன்றைய காலகட்டத்தில் உரல், ஆட்டுக்கல் போன்றவற்றை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டாலும்  பாரம்பரிய  முறையை கைவிடாதவர்களால் தான் என்றும் நிலைத்து உள்ளது நம் பாரம்பரியாமான பொருட்கள். வெண்ணையால் பெயர் பெற்ற ஊத்துக்குளி நகரானது, இங்கு தயார் உருவாக்கப்படும் அம்மிக்கல் , ஆட்டாங்கல் கூடுதல் புகழ் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP