மைனாரிட்டி போர்வையில் நீதிபதியிடம் மல்லுக்கட்டும் மைனர்கள்!

இது எந்த அளவிற்கு மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் நடக்கும் அழிச்சாட்டியம். சிறுபான்மை என்று இருக்கும் போதே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களை இந்த போலீஸ் தான் கைது செய்ய வேண்டும், இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும், இந்த சிறையில் தான் இருக்க வேண்டும் என்று மனுச் செய்கிறார்கள். இது பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் தைரியம் இல்லை. இவர்களே பெரும்பான்மையாகிவிட்டால் இது போன்ற வழக்குகளே இருக்காது.
 | 

மைனாரிட்டி போர்வையில் நீதிபதியிடம் மல்லுக்கட்டும்  மைனர்கள்!

அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலாதேவி சில மாணவிகளிடம் செல்போனில் பேசிய மறைமுக பேச்சு மாநிலம் முழுவதும் உலுக்கியது. அவர் மாணவிகளை தவறான முறையில் திருப்பத்தான் பேசினார் என்று மாநிலம் முழுவதும் ஒன்றாக கூச்சல் இட்டு அந்த அம்மையாரை கம்பிக்கு பின்னால் அமர்த்தியது. 
இதில் ஊடகங்கள் பங்கு மிக அதிகம். இதனால் இந்த வழக்கில் 2 ஆண்கள் உட்பட 3 பேர் சிறையில் கம்பி எண்ணிவிட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

நிர்மலாதேவி இந்து என்பதால் எந்த இந்து இயக்கங்களும், எந்த இந்துக்களும் அவரை தாங்கி பிடிக்கவில்லை. அவரின் செய்கைகளுக்கு நியாயம் கற்பிக்கவில்லை. நீதிமன்ற, காவல்துறை நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில் இந்து என்பதே எங்கும் எழவில்லை. இந்த பிரச்னைகள் ஓய்ந்து. சமுதாயம், வீராப்பாக அவரை பற்றி எழுதிய ஊடகங்கள், பத்திரிக்கைகள் அவர்கள் எதிர்பார்த்தவர்கள் சிக்காத காரணத்தால் ஐயோ பாவம் என்று பரிதாபப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லுாரியில் விலங்கியல் துறை மாணவ, மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் பெங்களூர், மைசூர், கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.   அங்கிருந்து திரும்பிய மாணவிகள் 34 பேர்  சாமுவேல் டேன்னிசன் என்ற பேராசிரியர் தங்களை பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுத்துமூலம் கல்லுாரி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தனர். 
அதன் பேரில் அவரை  பணி நீக்கம் செய்ய  கல்லுாரி நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி சாமுவேல் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அதாவது நிர்மலாதேவியை போல இவர் போனில் அல்ல நேரிடையாக இதில் தொடர்பு கொண்டிருந்தார். அதிலும் வேறு 2 பேர் பாலியல் உறவு கொண்டதற்கு இவர் உடந்ததையாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த ஜீன்ஸ் போட்ட நிர்மலாதேவியை  ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்க வேண்டும். சிலர் நெற்றிக்கண்ணை இவருக்கு எதிராக திருப்பி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொலைக்காட்சிகளில் இது திரும்ப திரும்ப வராத காரணத்தால் மக்களுக்கு இதைபற்றி கவலை இல்லாமல் போய்விட்டது. குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கழுத்தில் தொடங்கிய சிலுவை ஊடங்கள் கண்ணில் பட்டதும் அவர்கள் மவுனம் சாதிக்க தொடங்கிவிட்டனர்.

ஒரு தந்தை ஸ்தானத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனம் பொறுக்காமல், கிறிஸ்தவ மிஷனரிஸ் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து  பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்  போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி  என்று தன் மனக்குமுறலை வெளியிட்டார்.

ஐகோர்ட் நீதிபதி இது .போன்ற கருத்துக்களை கூறியதும், கிறிஸ்தவ நிர்வாகக்குழுவைக் கூட்டி தங்கள் பள்ளியில் நடப்பவை பற்றி ஆய்வு செய்து இருக்க வேண்டும். அதன் முடிவுகளை தேவைப்பட்டால் மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். அல்லது அங்கு படிக்கும் மாணவ, மாணவகிள் பெற்றோருக்காவது விளக்கியிருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக நீதிபதி வைத்தியநாதனிடம் அவர் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என்று மனு செய்தனர்.

பெரியமனதோடு அவரும் தன் கருத்தை வாபஸ் பெற்றார். ஆனால் அதற்கு அடுத்து நடந்தது தான் இந்த பிரச்னையின் ஹைலைட். கிறிஸ்தவர்கள் தொடர்பான எந்த வழக்கையும் நீதிபதி வைத்தியநாதனிடம் பட்டியல் இடக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் கிறிஸ்தவ அமைப்புகள் மனுக் கொடுத்தன.

இது எந்த அளவிற்கு மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் நடக்கும் அழிச்சாட்டியம். சிறுபான்மை என்று இருக்கும் போதே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களை இந்த போலீஸ் தான் கைது செய்ய வேண்டும், இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும், இந்த சிறையில் தான் இருக்க வேண்டும் என்று மனுச் செய்கிறார்கள். இது பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் தைரியம் இல்லை. இவர்களே பெரும்பான்மையாகிவிட்டால் இது போன்ற வழக்குகளே இருக்காது.

இது போன்ற மனுவை ஏன் நீதிமன்றம் ஏற்கிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இது போன்ற மனு வந்துள்ளது என்று தெரிந்ததும் சம்பந்தப்பட்டவர்களை துாக்கி உள்ளே வைத்திருந்தாலோ, கனிசமான தொகை அபராதம் விதித்திருந்தாலோ இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது.

ஆனால் தற்போது நடந்து இருப்பது அமைதிப் பூங்காவான தமிழகத்திற்கு நல்லது இல்லை. அரசியல் தாண்டி அனைவரும் கண்டிக்க வேண்டிய அம்சம் இது. இந்த அழிச்சாட்டியதை அடக்குவது யாரோ என்ற எதிர்பார்ப்பு தான் நடுநிலையாளர்கள் மனதில் எழுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP