தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!

சேலம் மாவட்டம், மேட்டூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸின் வடிவமைப்பில், அன்றைய மதிப்பீட்டில் 4.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது தான் மேட்டூர் அணை.
 | 

தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!

சேலம் மாவட்டம், மேட்டூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1925 ஆம் ஆண்டு துவங்கி  1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸின் வடிவமைப்பில், அன்றைய மதிப்பீட்டில் 4.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது தான் மேட்டூர் அணை. 

இந்த அணை அதிகபட்சமாக 214 அடி உயரம் ஆகும்.  இது கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே  உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாக இருந்தது.  இது தான் தற்போது வரை தமிழகத்தின் மிகபெரிய அணையாகவும் உள்ளது.  ஆயிரத்து 700 மீட்டர்  நீளம், 171அடி அகலம், மற்றும் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட  இந்த  அணைக்கான  நீர்வரத்து , கர்நாடகாவின் கபினி  மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளில் இருந்து பெறப்படுகின்றது. இதன் நீர் தேக்க அளவு 120 அடி உயரமாகும்.  
தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமல்லாமல் பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அணையில் மீன் பிடிக்க உரிமம் பெற்று  சுமார் 2400 மீன்பிடி படகுகள் இயங்கி வருகின்றன. மீனவர்கள் அணையின் நடுவே உள்ள நீர் பிடிப்பு பகுதியில் மீன் பிடித்து வாழ்வாதாரத்திற்க்கு வழிவகுத்துகொள்கின்றனர்.  
தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!
16 கண் மதகுகள் கொண்ட இந்த அணையில் இரண்டு சுரங்க மின்நிலையங்கள் உள்ளன . முதல் மின்நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், இரண்டாவது மின்நிலையம் இந்திய குடியரசு ஆட்சியிலும் கட்டப்பட்டன. அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது  இந்த சுரங்க மின் நிலையங்கள் மூலம் சுமார் 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  
தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!
மேட்டூர் அணை பற்றிய சில குறிப்புகள் பார்க்கும் போது, 1801ல் பிரிடிஷ் கிழக்கிந்திய சபை இந்த அணையை கட்ட முயற்சி எடுத்தபோது , மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது. பிறகு இரண்டாம் முறையாக 1835ல் சர் ஆர்தர்காட்டன் என்பவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டும், மைசூர் சமஸ்தானத்தின் தொடர் எதிர்ப்பால் இம்முயற்சியும் இரண்டாம் முறையாக கைவிடப்பட்டது. ஆனால் 1923ல் திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்பவரின் முயற்சியால் 1924ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்தவரும் அப்போது சென்னையில் வசித்து வந்தவருமான ஸ்டான்லி என்ற பொறியாளரை கொண்டு இவ்வணை கட்டபட்டது. அவரின் பெயரால் இவ்வணை ஸ்டான்லி அணை என்றழைக்கப்படுகிறது. 
தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!
சேலம் மாவட்டத்தின் நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்தே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழர்களின்  ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட  நந்தி முகப்பும் , ஜலகண்டீஸ்வரர் ஆலயமும், இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில்  நிலைத்து நிற்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் அணையின் நடுவில் மறைந்ததாக சொல்லப்படுகிறது. மேட்டூர் நீர்த்தேக்கத்தில் பல கிராமங்களும், கோவில்களும், இருந்ததாகவும் பிறகு அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றியதாகவும்  கூறப்படுகிறது. கிராமங்கள் அழிந்து, மக்கள் இருப்பிடம் மாறினாலும் அடையாளங்களாய் நினைவு சின்னங்களாய் இன்றும் அம்மண்ணில், அணைக்கு நடுவில் நிலைத்து நிற்கின்றது  நந்தி முகப்பும், ஜலகண்டீஸ்வரர் ஆலயமும். அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலை தெரியும்.

1934 ஆம் ஆண்டில் முதன் முறையாக அணையில் நீர்  நிறைந்தது. மேட்டூர் அணை இது வரை சுமார் 40 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவுகூருவோம்.  
தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் மேட்டூர் அணை...!
அணையின் முன்புறம் செயற்கை நீர்விழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் விதத்தில் அழகு மிகுந்ததாக பூங்காவும் அமைந்துள்ளது.  நீர் இருந்தாலும், குறைந்தாலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த , காலத்தின் அழியா நினைவு சின்னங்களையும் காலத்தின் பெருமையை உணர்த்தி மக்கள் மனதை தொடந்து குளிர்வித்து வருகிறது மேட்டுர் அணை..!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP