வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

வேலூர் மாவட்டம் காவனூர் என்ற இடத்தில் உள்ளது வைனு பாப்பு வானாய்வகம். காவனூர் எப்படி புகழ்பெற்றது, அங்கு காவனூர் புகழ்பெற்றதா, அல்லது காவனூரால் வைனு பாப்பு வானாய்வகம் புகழ்பெற்றதா என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.
 | 

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

வேலூர் மாவட்டம் காவனூர் என்ற இடத்தில் உள்ளது வைனு பாப்பு வானாய்வகம். காவனூர் எப்படி புகழ்பெற்றது, அங்கு வைனு பாப்பு வானாய்வகம் அமைந்ததால் காவனூர் புகழ்பெற்றதா, அல்லது காவனூரால் வைனு பாப்பு வானாய்வகம் புகழ்பெற்றதா என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. 

ஒரு வானியல் ஆராய்ச்சி மையத்தினை நாம் நினைக்கும் இடத்தில் எல்லாம் அமைத்துவிட முடியாது. அதற்கான சரியான சூழல் வேண்டும். வான்வெளியை கூர்ந்து நோக்க  சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்கனும். அப்படிபட்ட இடம்தான் காவனூர்.  வைணு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவனூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமாகும். இந்த வானோக்கு மையம் கடல் மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

பூமத்தியரேகைக்கு நெருக்கமாகவும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு அரைவட்டங்களையும் சமமாக கவனிக்க இயலும் என்ற காரணத்தாலேயே இவ்விடம் தேர்வு செய்யப்பட்டது. கூடுதலாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இவ்விடத்தின் தீர்க்கரேகை செல்வதால் இங்கிருந்து தெற்கு வான்பொருட்களை கவனிக்கும் வானியல் வசதியும் உள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இடமாக தேர்ந்தெடுத்து இந்த வானோக்கு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பூமியின் வடகோளம் மற்றும் தென்கோளம் சம்பந்தப்பட்ட வானியல் மற்றும் புவியியல் அம்சங்களை ஆய்வு செய்யப்படுகின்றன. அதுமட்டும்மல்லாமல் பல நவீன உபகரணங்களின் உதவியுடன் இந்த ஆய்வு மையத்தில் பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

இந்தியா மிக அற்புதமான விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகளை உலகுக்கு அளித்துள்ளது.  ஆனாலும், விண்வெளியைக் கண்காணிக்கும் வானாய்வில் இந்தியா இன்னமும் போதிய திறனின்றி உள்ளது என  அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநர் ஹார்லோ ஷாப்லே 1947இல் கூறினார். விண்வெளியை நவீனத் தொலைநோக்கிகளால் ஆராயும் வசதிகளும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்தியாவில் இல்லை என்பதையே அவர்  அப்படி சுட்டிக்காட்டினார். அவர் சுட்டிகாட்டிய குறைகளை வெகு விரைவில் நீக்கியது மட்டுமில்லாம், உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்படியாக  ஆசியாவிலேயே மிகப் பெரிய வானாய்வுத் தொலைநோக்கியை தமிழகத்தில் நிறுவப்பட்டது. இந்த வானோக்கு  மையத்தை 1986ம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. இங்கிருக்கும் 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கிதான் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும் .

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

சரி! வைனு பாப்பு வானாய்வகம் என்று பெயர்வர காரணம் என்ன என்று தெரிஞ்சிக்கனுமா வாங்க….. உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்படி ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் ஆய்வகத்தை உருவாக்க காரணமான விஞ்ஞானியின் பெயர் தான் வைணு பாப்பு.  இவர் கேரளத்தின் தலச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சென்னையில்  பிறந்தவர். வைணு பாப்புவின் முழு பெயர்  மனாலி கல்லட் வைணு பாப்பு. சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற வைணு பாப்பு, பின்னர்  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். இவர் ஒரு புதிய வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக பசிபிக் வானியல் சங்கத்தின் டோனோ வால்நட்சத்திரப் பதக்கம் பெற்றார். உத்தரப்பிரதேச அரசின் நைனிடால் வானாய்வகத்தை மேம்படுத்தும் பணி பாப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

அந்த வானாய்வகத்தின்  இயக்குநராக விளங்கிய வைணு பாப்பு அதை விரிவாக்கம் செய்தார். 1960-இல் தமிழகத்தில் கொடைக்கானலிலிருந்த வானாய்வகத்தின் இயக்குநராக பாப்பு நியமிக்கப்பட்டார். அங்கு சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண தொலைநோக்கி மட்டுமே இருந்தது. அதையும் நவீனப்படுத்தினார் வைணு பாப்பு. இரவிலும் துல்லியாமாக வான்வெளியை ஆராய புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தை அவர் பல்லாண்டுகளாகத் தேடினார். அப்படி தேடி பிடித்த இடம் தான் காவனூர். தான் கண்டெடுத்த காவலூரில்  அரசின் உதவியுடன் ஒரு வானாய்வகத்தை நிறுவினார். ஆரம்பத்தில் 38 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கியுடன் காவனூர் வானாய்வகம் தனது பணியைத் துவக்கியது. 

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

பின்னர் 1971-இல் 61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி இங்கு நிறுவப்பட்டது. இவை இரண்டுமே பாப்புவின் மேற்பார்வையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. மூன்றாவதாக, நிறங்களைப் பிரிக்கும் மேகநிற மானியுடன் கூடிய, நுட்பமான மின்னணுவியல் தொலைநோக்கி 100 செ.மீ. விட்டத்தில் 1972-இல் நிறுவப்பட்டது. நாட்டின் பிரதான ஆராய்ச்சி மையங்களுள் காவனூர் இதுவும் ஒன்று. தனது பெருங்கனவான மாபெரும் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அவர் தீவிரமாக உழைத்தார். ஆனால் 1982 ம் ஆண்டில் வைணு பாப்பு மறைந்தார். அவரது சிறப்பை உணர்ந்த அரசு, காவனூர் வானாய்வகத்துக்கும், புதிய தொலைநோக்கிக்கும் வைணு பாப்புவின் பெயரை சூட்டி கௌரவித்தது.  

வேலூரில் வானிலை ஆராய்ச்சி மையம் ”வைனு பாப்பு வானாய்வகம்”

சுமார் 40கி.மீ. தொலைவிலும் மிகத் துல்லியமாகக் காணக்கூடிய அளவுக்கு திறன் படைத்தது இந்த தொலைநோக்கி. இதன்மூலம், உலக அளவில் பிரமாண்டமான வானியல் தொலைநோக்கிகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. பல புதிய வானியல் நிகழ்வுகள் இதன்மூலம் கண்டறியப்பட்டது. இந்தியர்களின் அறிவுத்திறமையையும், வைணு பாப்புவின் அயராத உழைப்பாலும் அமைந்துள்ள வைணு பாப்புவினை காண வாரம் தோரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குது என பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP