நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

நீலகிரியில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு இடம்தான் மசினகுடி. ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்கு செல்லும் வழியில் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மசினகுடி.
 | 

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் அதன் சுற்றுவட்டாரப் பகுகளில் உள்ள பூங்காக்களையும்,தேயிலைத் தோட்டங்களையும், தொட்டபெட்டா சிகரத்தையும் பார்த்துவிட்டு திரும்பி விடுகிறார்கள். இந்த இடங்கள் மட்டும்தான் நீலகிரி என்று பலறும் நினைத்திருப்பார்கள். ஆனால் அது  தான் இல்லை.                                                                                                

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

நீலகிரியில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு இடம்தான் மசினகுடி.  ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்துக்கு செல்லும் வழியில் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மசினகுடி. இங்கு பெரும்பாலும் வசிப்பது பழங்குடி மக்கள்தான். நீலகிரியில் சுற்றுலா செல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மசினகுடியைதான் விருபுவார்கள். தொடர் ஆக்கிரமிப்புகளால் பசுமை மறைந்து, காடாக மாறி வரும் உதகமண்டலம் வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்களின் தேர்வாக மசினகுடி திகழ்கிறது. 

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

மசினகுடியை சுற்றி எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென மரங்கள் அடர்ந்த காடுகள்தான். இங்கு வளமாகப் பாயும் மாயாறு சுவையான, சுத்தமான குடிநீரை அனைவருக்கும் அளிப்பதால், மினரல் வாட்டர் பாட்டில்களை யாரும் எடுத்து கொண்டு செல்லவேண்டாம். மான்கள், யானைகள், சிறுத்தைகள், ஏன் புலிகள் கூட இங்கு சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. ஆனால் வனவிலங்குகளுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனத்துறையினருடன் பழங்குடி மக்களும் சேர்ந்து பாதுகாத்து வருகிறார்கள். மசினகுடியைச் சுற்றிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. மரத்தின் மேல் வீடுகள் இருக்கின்றன. அதில் தங்கி வன விலங்குகளை பார்த்து ரசிப்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் மிரள வைக்கும். மசினகுடியில் தேயிலை தோட்டங்கள், தெப்பக்காடு யானைகள் முகாம், ரப்பர் தோட்டங்கள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும். 

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

மசினகுடியில் வன விலங்கள் மட்டுமின்றி பல்வேறு வகையான பறவைகள் அதிகம் இருப்பதால் பறவை பிரியர்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இப்பகுதி வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. மசினகுடி வனப்பகுதியில் அதிகாலை 6:30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரையும் ஜீப்களிலோ, யானையின் மீது அமர்ந்தோ பயணிக்கலாம். 

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

இங்கு 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாமில், யானை சவாரி செய்யும் போது இயற்கை காட்சி நம் கண்ணில் நிற்கும். யானைகளின் உணவு இடைவேளைகளில் யானைகளைக் கண்டு ரசிக்கலாம். இந்த பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்களை காணலாம். தனியார் ஜீப்களில் செல்லும் பயணிகள் வேகமாக மசினகுடிக்கு சென்று தனியார் தங்கும் விடுதியில் தங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். 

நீலகிரியில் மறைந்திருக்கும் மசினகுடி சுற்றுலாத் தலம்...! 

ஆனால் கொண்டை ஊசிகளில் செல்லும் போது  பல நேரங்களில், இன்பமான சுற்றுலா பயணம் சோகமாக முடிந்து விடுகிறது சுற்றுலா பயணிகளுக்கு. ஊட்டியைப்போல குளிரோ அல்லது சென்னையைப் போல வெயிலோ இருக்காது மசினகுடியில். மேற்கு தொடர்ச்சி மலையில் மனிதனால் இன்னமும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழும் மசினகுடியின் இயற்கை அழகை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP